எழுத்தாளர் பொன்னீலன் கருத்தும் - மகிழ்ச்சியும்
முன்பு அடுத்து Page:

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு புதுடில்லி, டிச.30 வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசித்துவரும் குடும்பங்களுக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 1.5 கோடி இலவச எரிவாயு (எல்பிஜி) இணைப்பு வழங்கப்பட்டுள்ள தாக மத்திய அரசு தெரிவித்தது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்துவரும் குடும்பங்களுக்கு 3 ஆண்டுகளில் 5 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. முதல் ஆண்டில் 1.5 கோடி....... மேலும்

30 டிசம்பர் 2016 16:02:04

கடைசி நேர முன்பதிவு பிரிவில் ரயில் பயணச்சீட்டு எடுத்தால் 10 சதவீதம் கட்டண சலுகை

கடைசி நேர முன்பதிவு பிரிவில் ரயில் பயணச்சீட்டு எடுத்தால் 10 சதவீதம் கட்டண சலுகை

கடைசி நேர முன்பதிவு பிரிவில்ரயில் பயணச்சீட்டு எடுத்தால் 10 சதவீதம் கட்டண சலுகை புதுடில்லி, டிச.30 ரயில் புறப் படுவதற்கு முன்பு தயாரிக்கப் படும் முதல் பட்டியலுக்குப் பிறகு முன்பதிவு பிரிவில் காலியாக உள்ள இடத்துக்கு பயணச்சீட்டு எடுப்பவர்களுக்கு அடிப்படைக் கட்டணத்தில் 10 சதவீதம் குறைக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்துள்ளது. இந்த சலுகை வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்தச் சலுகை ராஜ்தானி, துரந்தோ, சதாப்தி ஆகிய....... மேலும்

30 டிசம்பர் 2016 16:01:04

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு   ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பண மதிப்பு நீக்க நடவடிக்கையில் தடுமாறும் மத்திய அரசு  ப.சிதம்பரம் குற்றச்சாட்டு காரைக்குடி, டிச.29 பண மதிப்பு நீக்கத்தின் மூலம் போதிய புரிதல் இல்லாத, திட்டமிடுதல் இல்லாத முடிவுகளை எடுத்துவிட்டு மத்திய அரசு தடுமாறுகிறது என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம் பரம் செய்தியாளர்களிடம் நேற்று (28.12.2016) கூறியதாவது: தமிழகத்தை வறட்சி மாநி லமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்........ மேலும்

29 டிசம்பர் 2016 16:17:04

ரூ.25 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

ரூ.25 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல்

ரூ.25 லட்சத்துக்கும் மேல் டெபாசிட் செய்தவர்கள் பட்டியலை வெளியிட வேண்டும்: ராகுல் வலியுறுத்தல் புதுடில்லி, டிச.29 காங்கிரஸ் கட்சியின் 132-ஆவது ஆண்டு விழா டில்லியில்  நடந்தது. இதில் பங்கேற்ற காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி ரூபாய் நோட்டு செல்லாத விவகாரம் குறித்து செய்தி யாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. பண மதிப்பு இழப்பால் ஏழை, நடுத்தர....... மேலும்

29 டிசம்பர் 2016 16:15:04

தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு

தேர்தல் வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றச்சாட்டு யஷ்வந்த்பூர், டிச. 29- மக்கள வைத் தேர்தலின்போது பாஜக வெளியிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற பிரதமர் நரேந்திர மோடி தவறிவிட்டதாக கர் நாடக முதல்வர் சித்தராமையா குற்றஞ்சாட்டினார். பெங்களூரு யஷ்வந்த்பூரில் புதன்கிழமை காங்கிரஸ் கட்சி யின் 132-ஆவது ஆண்டு விழா வைத் தொடக்கிவைத்து அவர் மேலும் பேசியது: கருப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதாகக் கூறிக் கொண்டு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் மோடி....... மேலும்

29 டிசம்பர் 2016 15:44:03

எழுத்தாளர் பொன்னீலன் கருத்தும் - மகிழ்ச்சியும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அன்புக்கும் மிகுந்த மதிப்புக்கும் உரிய தோழர் அவர்களுக்கு,

வணக்கம். விடுதலை பிப்ரவரி 28 இதழ் (அஞ்சலில் எனக்கு நேற்று தான் வந்தது) திராவிட இயக்க நூற்றாண்டு தொடக்க விழாவில் தாங்களாற்றிய பேருரையை மனுதர்மத்துக்கும் மனித தர்மத்துக்குமிடையே மிகப் பெரும் போராட்டம் எனத் தலைப்பிட்டு அருமையாக வெளியிட்டுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். சமநீதி இயக்கமென்பது அனைவருக்கும் அனைத்தும் என்னும் திசை வழியில் ஒரு நூற்றாண்டு காலம் ஓய்வில்லாமல், சோர்வில்லாமல் இயங்கி வரும் பேரியக்கம் என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கிறீர்கள். வரலாறு தெரியாமல் வரலாற்றுச் சாதனைகளை வசப்படுத்திக் கொள்ளாமல் வளர்ச்சி சாத்தியமில்லை என்பதையும் அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தியுள்ளீர்கள். நாடகம் பார்க்கவும், ஏன் பேருந்தில் பயணம் செய்யவும், உணவு விடுதிகளில் நுழையவும் தலித்துகள் மறுக்கப்பட்ட காலம் அன்று இருந்தது. அந்தத் தடைகளை நீக்கி, அவர்களுக்கு விடுதலை வழங்கியது சமநீதிகட்சி. சமூகம் தெரிந்து, தெளிந்து கொள்ள வேண்டிய அடிப்படைக் கருத்து இது. உயர்நீதிமன்ற நீதிபதி சங்கரன் நாயரை வருணாசிரம நம்பூதிரி ஒருவர் எடாசங்கரா என அழைத்ததையும், கலைஞர் தலையீட்டால் இன்று தலித் நீதிபதிகளை வைதீக வெறிபிடித்த உயர் சாதியினர் எழுந்து நின்று ஓ மை லார்டு என்று பவ்வியமாக அழைக்கும் சூழ் நிலையையும் படிப்பவர் மனதில் பசு மரத்தாணிபோல் பதியும் வகையில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லயிருக்கிறீர்கள்.

தேவதாசி முறை பகவத்காரியம், இதை மாற்றக் கூடாது என்று சட்டமன்றத்தில் முழங்கிய சத்தியமூர்த்தி அய்யரை அப்படி பகவத் காரியம் முடங்கிவிடக் கூடாது என்றால், இனி அதை உங்கள் பெண்களைக் கொண்டு தொடருங்கள் என்று அன்னை முத்துலெட்சுமி ரெட்டி சொன்ன பதிலின் பின்னால், பகுத்தறிவுப் பகலவன் பெரியார் இருந்தார் என மிக நேர்த்தி யாகச் சுட்டிக்காட்டியிருக்கிறீர்கள்.

தங்கள் பேருரை அடித்தளத்தில் இன்னும் நசுங்கிக் கொண்டிருக்கும் மக்களைச் சென்றடைய வேண்டும். பெரியார் என்னும் பெரு மழையில் முளைத்துக் கிளைத்துச் செழித்துப் பூத்துக் காய்த்து நிற்கும் நம் மண்ணின் மக்களுக்குத் தங்கள் வாழ்வுக்கான ஆதார வேர்களை மனதில் பதியும்படி நினைவு படுத்த வேண்டும். மிக அரிய பேருரை இது. மிகுந்த மகிழ்ச்சி யடைகின்றேன்.

- பொன்னீலன்



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner