அந்த அரிமா நோக்கில்...!
முன்பு அடுத்து Page:

கடுமையான விதிமுறைகளுடன் பீகாரில் புதிய மதுவிலக்கு சட்டம்

கடுமையான விதிமுறைகளுடன் பீகாரில் புதிய மதுவிலக்கு சட்டம்

பாட்னா, அக் 3 காந்தியார் பிறந்த நாளினை முன்னிட்டு கடுமையான மதுவிலக்கு சட் டத்தை பீகார் மாநில அரசு நேற்று அறிவித்தது. இச்சட்டம்மூலம் வீட்டில் மதுபாட்டில் கைப் பற்றப்பட்டால், அந்த வீட் டில் உள்ள 18 வயதுக்கு மேற் பட்ட அனைவரும் கைது செய்யப்படுவர். பீகாரில்மதுபானம்விற்ப தற்குத் தடை விதித்து அம் மாநில அரசு சில மாதங்களுக்கு முன் மதுவிலக்கு சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை....... மேலும்

03 அக்டோபர் 2016 16:52:04

இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி:

 இந்திய ராணுவம் தாக்குதல் எதிரொலி:

நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை புதுடில்லி, அக்.2 எல்லையில் இருந்த தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்ததை அடுத்து, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தி யாவின் சென்னை உட்பட முக்கிய நகரங்களை  தாக்கும் அபாயம் உள்ள தால் 30 நாள் வரை எச்சரிக்கையாக இருக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் அடிக்கடி இந்தியா விற்குள் ஊடுருவி....... மேலும்

03 அக்டோபர் 2016 11:38:11

உமாபாரதி சந்திப்பு தோல்வியில் முடிந்ததுதான் மிச்சம்

உமாபாரதி  சந்திப்பு தோல்வியில் முடிந்ததுதான் மிச்சம்

உமாபாரதி  சந்திப்பு தோல்வியில் முடிந்ததுதான் மிச்சம் புதுடில்லி, செப்.30 காவிரி நீர் பங்கீடு பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் உத்தர வின்படி, கர்நாடகா - - தமிழகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு பிரச்சினையில் பேச்சுவார்த்தைகளின் மூலமாக  தீர்ப்பதற் காக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி தலைமையில் டில்லியில் நேற்று (29.9.2016) ஆலோசனை கூட்டம் நடந்தது. மத்திய அமைச்சர் உமாபாரதி தமிழக, கர்நாடக மாநில அரசுகளுடன்  மத்திய அரசு சார்பில் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த....... மேலும்

30 செப்டம்பர் 2016 16:44:04

காஷ்மீர் எல்லையில் ராணுவம் திடீர் தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு

காஷ்மீர் எல்லையில் ராணுவம் திடீர் தாக்குதல்: தீவிரவாத முகாம்கள் அழிப்பு

புதுடில்லி/ சிறீநகர், செப்.30- காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ஆக் கிரமிப்புப் பகுதியின்மீது இந்திய ராணுவம் நடத்திய தாக்குதலில் அப்பகுதியில் இருந்த தீவிரவாதிகள் முகாம் அழிக்கப்பட்டதுஎன்றுராணு வம் தெரிவித்துள்ளது. இந் நிலையில், துப்பாக்கிச் சூட் டில் தங்களது இரண்டு ராணுவ வீரர்கள் பலியானதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. புதன்இரவுநடத்தியஇந் தத்தாக்குதல்குறித்துராணுவ நடவடிக்கை தலைமை இயக் குநர் லெப்டினண்ட் ஜெனரல் ரன்பீர் சிங் ஊடகங்களிடம் தெரிவிக்கும்போது, கட்டுப் பாட்டு எல்லைக் கோட்டருகே....... மேலும்

30 செப்டம்பர் 2016 16:33:04

பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

பெங்களூர் தமிழ்ச் சங்கத்திற்கு புதிய பொறுப்பாளர்கள் தேர்வு

பெங்களூர், செப். 29- பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தின் 2016--18 பருவச் செயற்குழுவிற்குரிய தேர்தல் கடந்த 25.9.2016 அன்று நடைபெற்றது. தேர்தலில் கீழ்க்காணுவோர் வெற்றி பெற்றனர். தலைவர் -- தி.கோ.தாமோதரன்துணைத்தலைவர் - -கோ.தாமோதரன்செயலாளர்- - ச.இராமசுப்பிரமணியன்பொருளாளர் -- பத்மநாபன் துணைச் செயலாளர்கள் இல.பழனி, பி.எஸ்.சுரேசு குமார், அ.மு. பாண்டியன், சு.சுந்தரவேலு செயற்குழு உறுப்பினர்கள் கோ.கருணாநிதி, சு.பாரி, ந.சுந்தரேசன், ஆர். எம்.பழனிச்சாமி, நா.இராமச்சந்திரன், மு.மணி கண்டன், ஆ.எ.சரவணன், புசுபா மனோகரன், வே.நடராசன் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் 26.9.2016 அன்று மாலை....... மேலும்

29 செப்டம்பர் 2016 16:45:04

அந்த அரிமா நோக்கில்...!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நமது விழிகளைத் திறந்த பிறகே தன் விழிகளை மூடினார் தந்தை பெரியார்.

அந்த அறிவு ஆசான் உடலால், உயிரால் மறைந்து, 37 ஆண்டுகள் ஓடிவிட்டன!

ஊட்டிய உணர்வுகளும், நிலை நிறுத்திய கொள்கை லட்சியங்களும் ஓங்கி உலகளாவிப் பரவிய வண்ணம் உள்ளன.

அவரால் விதைக்கப்பட்ட விதைகள் முளைத்து வேர் பிடித்து, கிளைத்து, பூத்துக் காய்த்து, கனிந்த பலன் களாகி, திராவிடர் சமுதாயத்திற்குக் கிடைத்துள்ளன. நாளும் தொடரு கின்றது.

அதன் சிறப்பான விளைவுகள் சமூகத் துறையில் மட்டுமல்ல; அரசியலும்கூட பார்ப்பன ஆதிக்கச் சக்திகள் தலையெடுக்க முடியாத வண்ணம் தடுத்து நிறுத்தி,

சூத்திரர்களின் ஆட்சி சொக்கத் தங்கமெனப் பிரகாசிக்கின்றது; அதனை ஒழித்திடவே தமது சூழ்ச்சி அஸ்திரங்களால் முயலுகின்றனர்!

மனுதர்மத்திற்கு மீண்டும் உயிரூட்ட வானத்திற்கும், பூமிக்குமாய் அலைகின்றது ஆரியம்!

சில தக்கைகள் மிதந்து வந்தால் அதையே தாம் கரையேறக் கிடைத்த மிகப்பெரிய கப்பல்களைப் போல் நம்பி ஓடிப் பிடிக்கின்றனர் பார்ப்பனர்கள்.

காகித ஊடக ஓநாய்களின் பூணூல் புலம்பல்கள் புறப்பட்டுக் கிளம்பி, விட்டேனா பார் இந்த சூத்திரர் ஆட்சியை! என்று வேதம் ஓதி சத்ரு சங்கார யாகத்தை ஸ்பெக்ட்ரம் உருவில் நடத்திப் பார்க்கின்றனர்.

ஏவுகணை யுகத்தில் யாகக் கணையா?

ஏவுகணை யுகத்தில் யாகக் கணைகள் என்ன செய்யும் என்று அறியாப் பேதைகள் அவர்கள்!

பகுத்தறிவு ஏவுகணை, பாசறையில் பயிற்சி பெற்ற படையின் முன்னே, தார்ப்பாசூரர்களின் தகிடு தத்தம் ஒருபோதும் பலிக்காது!

மறுக்கப்பட்ட கல்வி, திறக்கப்பட்ட மடை வெள்ளமாகக் கரை புரண்டு ஓடி வருவதனால், சூத்திர சமுதாயம் இன்று பல்கலைக் கழக துணைவேந்தர்களாகி, கல்வியை கனகச்சிதமாக அனைவருக்கும் அளிக்கும் அருமையான பணி செய்கின்றனர்!

பூணூல் வேலிக்குள் சிக்கிக் கிடந்த அறிவு ஜீவி வேலை வாய்ப்பு அவாளுக்கு மட்டுமே என்ற நிலை மாற்றப்பட்டு, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா என்று உலகெங்கும் குப்பன் மகன் சுப்பனும், காத்தான் மகள் கருப்பாயியும் கணினி பொறியாளர்களாக விண்வெளிக் கலம் போல உலகெங்கும் வெற்றி உலா வருகின்றனர்!

பெரியார் மறைய மாட்டார்!

பெரியார் மறையவில்லை; மறைய மாட்டார் என்பதற்கு இவற்றைவிட ஆதாரங்கள் வேண்டுமா?

திராவிடத்தால் எழுந்தோம்; நடந்தோம்,

விரைந்தோம் வீறுகொண்டு வெற்றிப்

பாதையில் பயணிக்கிறோம் என்பதை

நன்றியுள்ள அத்துணைப் பேரும் நினைத்து நினைத்து

தந்தையின் தன்னிகரற்ற

தொண்டறம் என்றும் பலன் அளிக்கும் என நம்புகின்றனர்.

நமது சுவாசமே, வாழ்வே அவரால் என்பதால்தான்,

இளைய தலைமுறைகூட பெரியாரால் வாழுகிறோம் யாம் என்று பெருமிதம் பொங்க முழங்குகிறது!

அந்த முழக்கத்தில் அவர்தம் சாதனைகளின் பலன் பளிச்சிடுகிறது!

எனவே, பெரியார் நினைவு நாள் என்பது சடங்கல்ல நமக்கு; சம்பிரதாயம் அல்ல - அது ஒரு வரலாற்றுக் குறிப்பு நாள்.

வைக்கம் வீரர் என்று அரிமாவின் நோக்குப்போல வந்த பாதையை திரும்பிப் பார்க்கும் ஏற்றமிகு வரலாற்றுக் குறிப்பு நாள்!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner