இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அய்.நா. சபை தவறு இழைத்துவிட்டது பான் கி மூன் ஒப்புதல்
முன்பு அடுத்து Page:

தமிழீழப் போராளி வின்ஸ்டன் பஞ்சாட்சரம் படத்திறப்பு

தமிழீழப் போராளி வின்ஸ்டன் பஞ்சாட்சரம் படத்திறப்பு

    சென்னை, டிச. 13- பன்னாட்டு தமிழ் நடுவத்தின் தலைவரும், அமெரிக்காவில் வசித்து வந்த வருமான தமிழீழப் போராளி டாக்டர் வின்ஸ்டன் பஞ்சாட் சரம் (வயது76) கடந்த மாதம் 20ஆம் தேதி அன்று மறைந்தார். அவர் மறைவையொட்டி, சென்னை வேப்பேரி பெரியார் திடல் அன்னை மணியம்மை யார் அரங்கில் 7.12.2016 மாலை 6.30 மணியளவில் நடைபெற்ற இரங்கல் கூட்டம் திராவிடர்  கழகத் துணைத் தலைவர் கவி ஞர் கலி.பூங்குன்றன் தலைமை யில் நடைபெற்றது. இலங்கையின்....... மேலும்

14 டிசம்பர் 2016 11:46:11

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அய்.நா. சபை தவறு இழைத்துவிட்டது பான் கி மூன் ஒப்புதல்

இலங்கை இறுதிக்கட்ட போரின்போது அய்.நா. சபை தவறு இழைத்துவிட்டது பான் கி மூன் ஒப்புதல்

கொழும்பு, செப்.4 இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அய்.நா. தவறு இழைத்து விட்டது. அய்.நா.வின் பிரதிநிதிகள் முறை யாக செயல்பட்டிருந்தால் அதிக உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று அதன் பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.மூன்று நாள் பயணமாக கடந்த 31- ஆம் தேதி இரவு இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு பான் கி-மூன் சென்றார். அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீ சேனாவை அவர் சந்தித்துப் பேசினார்.அப்போது சிறீசேனா, நீண்டகால போரில்....... மேலும்

04 செப்டம்பர் 2016 14:12:02

அதிர்ச்சியூட்டும் தகவல்

அதிர்ச்சியூட்டும் தகவல்

104 விடுதலைப் புலிகளை விஷ ஊசி போட்டுக் கொன்ற இலங்கை அரசுகூறுவது முதலமைச்சர் விக்னேஸ்வரன் கொழும்பு, ஆக.19- இலங்கையில் அரசின் புனர்வாழ்வு முகாம்களில் 104 முன்னாள் விடுதலைப் புலிகள் விஷஊசி போட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இலங்கை தமிழ் அரசியல் தலை வர்கள் அரசின் புனர்வாழ்வு முகாம்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் 100-க்கும் அதிகமானோர் விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டுள்ளனர் என்று குற்றம் சாட்டி உள்ளனர். ஆனால் இலங்கை அரசு இந்த....... மேலும்

19 ஆகஸ்ட் 2016 15:20:03

இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு தகவல்

இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு தகவல்

இலங்கைக் கடல் பகுதியில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர்களுக்கு அனுமதி: இலங்கை அரசு தகவல் கொழும்பு, ஜூலை 13 இலங்கை யில் ஆழ்கடலில் மீன்பிடிக்க 250 தமிழக மீனவர் களுக்கு அனுமதி அளிப்பது குறித்து இலங்கை அரசு முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட நாள் களில், இலங்கை கடல் பகுதியில் ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு 250 தமிழக மீனவர் களுக்கு அனுமதி வழங்க இலங்கை அரசு முடிவு செய்தி....... மேலும்

13 ஜூலை 2016 16:22:04

தமிழர் பகுதியில் வறுமை - பட்டினியால் மக்கள் வேதனை: உலக வங்கி தகவல்

தமிழர் பகுதியில் வறுமை - பட்டினியால் மக்கள் வேதனை: உலக வங்கி தகவல்

தமிழர் பகுதியில் வறுமை - பட்டினியால் மக்கள் வேதனை: உலக வங்கி தகவல் கொழும்பு, பிப். 21- இலங்கை யில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் கள் அதிக அளவில் வாழ் கின்றனர். கடந்த 30 ஆண் டுகளாக உள்நாட்டு போர் நடந்த அப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக தான் அமைதி நிலவுகிறது. இந்த நிலையில் தற் போது அங்கு கடும் வறுமை நிலவுறது. வடக்கு மாகா ணத்தில் மன்னர், முல்லைத்....... மேலும்

21 பிப்ரவரி 2016 17:35:05

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கொழும்பு, செப்.4 இலங்கை இறுதிக்கட்ட போரின் போது அய்.நா. தவறு இழைத்து விட்டது. அய்.நா.வின் பிரதிநிதிகள் முறை யாக செயல்பட்டிருந்தால் அதிக உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் என்று அதன் பொதுச்செயலாளர் பான் கி-மூன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் பயணமாக கடந்த 31- ஆம் தேதி இரவு இலங்கை தலைநகர் கொழும்புவுக்கு பான் கி-மூன் சென்றார். அந்த நாட்டு அதிபர் மைத்ரிபால சிறீ சேனாவை அவர் சந்தித்துப் பேசினார்.

அப்போது சிறீசேனா, நீண்டகால போரில் இருந்து இப்போதுதான் மீண்டு வந்துள்ளோம். அதிலிருந்து முழுமையாக விடுபட சிறிது காலஅவகாசம் தேவை என்று கேட்டுக் கொண்டார்.
பான் கி-மூன் கூறியபோது, மாற்றங்கள் ஏற்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் மக்கள் புதிய அரசை தேர்ந்தெடுத்துள்ளனர். அதற்கேற்ப புதிய அரசு செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இச்சந்திப்பு குறித்து பின்னர் செய்தி யாளர்களிடம் பேசிய அதிபர் சிறீசேனா, வடக்குப் பகுதியில் இன்னும் 3 மாதங் களுக்குள் தமிழர்களின் நிலம் அவர்களிடம் முழுமையாக திருப்பி அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பான் கி- மூன் பேசியதாவது:

உள்நாட்டுப் போரின்போது அய்.நா. சபை தவறு இழைத்துவிட்டது. எங்களது இலங்கை பிரதிநிதிகள் முறையாக செயல்பட்டிருந்தால் அதிகமான மனித உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியும். இலங்கை போர் மூலம் அய்.நா. சபை பல பாடங்களைக் கற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ராணுவம் குறைக் கப்பட்டு தமிழர்களை மீள் குடியேற்றம் செய்ய வேண்டும். இன நல்லிணக்கத்தைப் பேண வேண்டும், மனித உரிமைகளைக் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, நாடா ளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா மற்றும் மூத்த அமைச்சர்களையும், பான் கி-மூன் சந்தித்துப் பேசினார்.

இதைத் தொடர்ந்து அவர் தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்துக்கு சென்றார். வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலை வரும் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலை வருமான இரா. சம்பந்தன் ஆகியோரை பான் கி-மூன் சந்தித்துப் பேசினார்.

இதனிடையே போரின்போது காணா மல் போனவர்களின் உறவினர்கள், அரசி யல் கைதிகளின் உறவினர்கள், ராணுவத்திடம் நிலங்களைப் பறிகொடுத்த தமிழர்கள் யாழ்ப்பாணத்தில் பெருந்திரளாகக் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner