ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!
முன்பு அடுத்து Page:

ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

 ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது. டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:51:03

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:30:03

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு விழா

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்”  நூல் வெளியீட்டு விழா

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:29:03

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2016 அன்று அன்னை இந்திரா நகர் இராவணன் அலுவலகத்தில் இருந்து பெரியார் பெயர் பலகை வரை சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தி.இரா.இரத்தினசாமி உறுதிமொழி சொல்லச் சொல்ல தோழர்ணீகள் உறுதிமொழி ஏற்றனர். பெரியார் பிஞ்சுகள் அய்யப்பன், விக்னேஷ், அர்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு வீரசுந்தர் நன்றி....... மேலும்

31 டிசம்பர் 2016 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது.

டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும் எனும் தலைப்பிலும், பேராசி ரியர் ப.காளிமுத்து, புராண இதிகாசப் புரட்டு பற்றியும் வகுப்பு நடத்தினர். இயக்கப் பாடல்களை அண்ணா.சரவ ணன், சுதா ஆகியோர் பாடினர். தகடூர் தமிழ்ச்செல்வி வினாடி வினா நிகழ்ச்சி நடத்தினார். யோகா பயிற்சியின் சிறப்புகள் பற்றி யோகா பயிற்றுநர் மல் லிகா பேசினார். இரவு பெரி யார் ஊடகத்துறை சார்பில் குறும் படங்களும், ஆவணப்படமும் ஒளிபரப்பப்பட்டன. மாநில மாணவரணி செயலாளர் பிரின்சு மாணவர்களிடையே நுண்ணறிவுச் சோதனை நடத் தினார்.

29.12.2016 இரண்டாம் நாள் பயிற்சி வகுப்பில் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பு, பெரியாருக்குப்பின் திராவிடர் கழகம் ஆகிய தலைப்புகளில் கவிஞர் கலி.பூங்குன்றன், ‘கட வுள் மறுப்பு’, ‘சமூகநீதி’ எனும் பொருள் பற்றி முனைவர் துரை.சந்திரசேகரன், பெரியார் போற்றிய பெண்ணியம் பற்றி பொருளாளர் டாக்டர் பிறை நுதல் செல்வி, அறிவியலும் மூடநம்பிக்கையும் எனும் தலைப்பில் பேராசிரியர் ப.காளிமுத்து ‘சாமியாடுதல் மோசடி’ பற்றி டாக்டர் கவுதமன் ஆகி யோர் வகுப்புகள் நடத்தினர்.

காலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை யோக வகுப்பு மல்லிகா ராசமாணிக்கம் நடத் தினார். இரவு 8.30 மணியளவில் பரபரப்பான பட்டிமன்றம் பயிற்சி மாணவர்கள் பங்கு பெற்ற நிலையில் கழக அமைப்புச் செயலாளர் ஊமை செயராமனை நடுவராகக் கொண்டு நடந்தது. தந்தை பெரியார் தொண்டில் விஞ்சி நிற்பது இனநலமா? பகுத்த றிவா? எனும் தலைப்பிலான பட்டிமன்றத்தில் இனநலமே என்ற அணியில் ஆனந்த சைனி, கோவிந்தராசு, சுதா, விபிசிங் ஆகியோரும் பகுத்தறிவே எனும் அணியில் சந்தீப், ஓவியா, வீ.சிவாஜி, கனிமொழி ஆகியோரும் வாதிட்டனர். பார்வையாளர்கள் கேட்டு ரசிக்கும் வண்ணம் அவர்களின் வாதம் வரவேற்பை பெற்றது. இறுதியில் இனநலமே! என்று நடுவர் தீர்ப்புரைத்தார்.

30.12.2016 மூன்றாம் நாள் காலை முதல் வகுப்பு தமிழர் தலைவரின் தனித்தன்மைகள் எனும் தலைப்பில் வகுப்பு நடத்தினார். திராவிடத்தால் எழுந்தோம், புதிய கல்விக் கொள்கை பேராபத்து பற்றி பேராசிரியர் காளிமுத்து வகுப்பு நடத்தினார். கேள்வியும் கிளத் தலும் வகுப்பில் பயிற்சி மாண வர்கள் எழுப்பிய கேள்விக ளுக்கு சிறப்பான பதில்களை மாணவர்கள் உற்சாகம் பெறும் வண்ணம் கழகத் தலைவர் தமிழர் தலைவர் வகுப்பாக்கித் தந்தார். அனைவர்க்கும் சான்றி தழ்களை தமிழர் தலைவர் வழங்கி வழிகாட்டுதல் உரை யும் வழங்கினார். முகாம் சிறக்க உழைத்தவர்களுக்கு சிறப்பு செய்யப் பெற்றது.



.
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner