பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு விழா
முன்பு அடுத்து Page:

ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

 ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது. டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:51:03

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:30:03

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு விழா

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்”  நூல் வெளியீட்டு விழா

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:29:03

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2016 அன்று அன்னை இந்திரா நகர் இராவணன் அலுவலகத்தில் இருந்து பெரியார் பெயர் பலகை வரை சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தி.இரா.இரத்தினசாமி உறுதிமொழி சொல்லச் சொல்ல தோழர்ணீகள் உறுதிமொழி ஏற்றனர். பெரியார் பிஞ்சுகள் அய்யப்பன், விக்னேஷ், அர்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு வீரசுந்தர் நன்றி....... மேலும்

31 டிசம்பர் 2016 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில் நடைபெற் றது.

தஞ்சை மாவட்ட பகுத்தறி வாளர் கழகத்தின் செயலாளர் கோபு.பழனிவேல் தலைமை வகித்தார். கபிஸ்தலம் மணி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி முதல்வர் க.முருகானந்தம் வர வேற்புரை நிகழ்த்தினார். தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத்தின் அமைப்பாளர் வ.அழகுவேல் முன்னிலை வகித்தார். பாபநாசம் ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர் புலவர் சுப்பு.தங்கராசு துவக்க உரை நிகழ்த்தினார்.

தமிழர் தலைவர் எழுதிய அய்யாவின் அடிச்சுவட்டில் நூலினை அறிமுகம் செய்து உரையாற்றிய அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்க கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி, தமிழர் தலைவரின் வாழ்க்கை வர லாறு என்பது திராவிடர் கழ கத்தின் வரலாறு என்பதையும், அய்ந்தாம் பாகத்தில் சமூக நீதி தளத்தில் 1979இ-ல் நடைபெற்ற போராட்டம், அது தொடர்பான நிகழ்வுகள் விரிவாக பதிவு செய்யப்பட்டிருப்பதைச் சுட் டிக்காட்டி, ஒவ்வொரு திராவி டர் இல்லத்திலும் இருக்க வேண்டிய வரலாற்று நூல் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து, வட நாட்டுக் காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும் எனும் தலைப்பில் சமூக நீதிக்காக நீதிக் கட்சி துவங்கி, இன்றுவரை பெரியார் இயக்கம் போராடி வந்த வர லாற்றையும், அதன் காரணமாக கல்வியில் தமிழகத்தில் பிற் படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, சிறுபான்மை பிரிவு மாண வர்கள் பெற்றுள்ள வெற்றியை புள்ளி விவரங்களோடு எடுத் துரைத்தார். ஆனால், மத்தியில் அரசு நிறுவனங்களில் தமிழர் களின் பங்களிப்பு மிகக் குறை வாக உள்ளதையும் ஆதாரங்க ளுடன் சுட்டிக்காட்டி, வட நாட்டவர், கல்வியில் மிகுந்த முன்னேற்றம் இல்லை என் றாலும், வேலைவாய்ப்பில் எத் தகைய முன்னேற்றம் அடைந் துள்ளார்கள் என்பதையும் எடுத் துக்காட்டி, தமிழகத்தில் கல்வி யோடு, வேலைவாய்ப்புக்கான தேர்வுகளுக்கும் நமது மாண வர்கள் உரிய வழிகாட்டுதல் பெற வேண்டியதன் அவசி யத்தை எடுத்துக்கூறினார்.

அரங்கில், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள், தோழர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். வருகை தந்த அனைவருக்கும் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் சிற்ணீறுண்டியும் வழங்கப்பட் டது.

அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் ரூ.200 அன்பளிப்பு தந்து பலரும் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியினை, பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner