உரிய வசதிகளை ஏற்படுத்தித் தாருங்கள்: பதக்கம் வென்ற வீரர்கள் அரசுக்குக் கோரிக்கை
முன்பு அடுத்து Page:

ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

 ஒகேனக்கலில் பெரியாரியல் பயிற்சி முகாம்!

ஒகேனக்கல், டிச. 31- பெரியாரி யல் பயிற்சி முகாம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் 28.12.2016இல் தொடங்கியது. டிசம்பர் 28ஆம் தேதி கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் ஓர் அறிமுகம் எனும் தலைப்பி லும், திராவிடர் கழக வரலாறு எனும் பொருள் பற்றியும், செயலவைத் தலைவர் சு.அறி வுக்கரசு, சுயமரியாதை இயக் கம் மற்றும் நீதிக்கட்சி வரலாறு, இந்துத்துவா ஆகிய தலைப் புகளிலும், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், இயக்க ஏடு களும், நமது நிறுவனங்களும்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:51:03

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூரில் அய்யாவின் அடிச்சுவட்டில் நூல் வெளியீடு

கரூர், டிச. 31- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 84 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நிகழ்வாக ‘அய்யாவின் அடிச் சுவட்டில்’ 5ஆ-ம் பாகம் நூல் வெளியிட்டு விழா மற்றும் விடுதலை வாசகர் வட்டத் தொடக்க விழா 18.12.2016 அன்று காலை 10 மணியளவில் கரூர் கலைஞர் அறிவாலயத்தில் திராவிடர் கழக மாவட்ட தலைவர் ப.குமாரசாமி அவர் கள் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:30:03

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்” நூல் வெளியீட்டு விழா

பாபநாசத்தில் “அய்யாவின் அடிச்சுவட்டில்”  நூல் வெளியீட்டு விழா

பாபநாசம், டிச. 31- தமிழர் தலைவர் எழுதிய “அய்யாவின் அடிச்சுவட்டில்” அய்ந்தாம் பாகம் நூல் அறிமுக விழா, சிந்தனைக் களம் -4 “வட நாட் டுக்காக்காவும், தமிழ் நாட்டுக் காக்காவும்” எனும் தலைப்பில் கருத்துரை ஆகிய இரு நிகழ் வுகள், குடந்தைக் கழகம், பாப நாசம் ஒன்றியம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், 21.12.2016 அன்று மாலை 7 மணிக்கு, பாபநாசம் நகரில்  பட்டுக் கோட்டை அழகிரி மழலையர் பள்ளி வளாகத்தில்....... மேலும்

31 டிசம்பர் 2016 15:29:03

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

தந்தை பெரியார் அவர்களின் நினைவுநாள் - உறுதிமொழி ஏற்பு

பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் நினைவு நாளான 24.12.2016 அன்று அன்னை இந்திரா நகர் இராவணன் அலுவலகத்தில் இருந்து பெரியார் பெயர் பலகை வரை சென்னை மண்டல திராவிடர் கழகத் தலைவர் தி.இரா.இரத்தினசாமி தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் தி.இரா.இரத்தினசாமி உறுதிமொழி சொல்லச் சொல்ல தோழர்ணீகள் உறுதிமொழி ஏற்றனர். பெரியார் பிஞ்சுகள் அய்யப்பன், விக்னேஷ், அர்சு மற்றும் பலர் கலந்து கொண்டனர். பெரியார் பிஞ்சு வீரசுந்தர் நன்றி....... மேலும்

31 டிசம்பர் 2016 15:28:03

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடில்லி, டிச.25- விளையாட்டு வீரர்களுக்கு தேவையான உரிய வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளையாட்டு வீரர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தித் தருவதோடு, நல்ல பயிற்சியளித்தால் மட்டுமே சர்வதேச அளவிலான போட்டிகளில் தொடர்ச்சியாக சாதிக்க முடியும்.

2012ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை கருத்தில் கொண்டு சிறந்த வசதிகளையும், நிதி உதவியையும் அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று நீச்சல் வீரர் பிரசாந்த் கர்மகர், வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி, ஜிம்னாஸ்டிக் வீரர் ஆசிஷ் குமார் ஆகியோர் கூறியுள்ளனர்.

தீபிகா: ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு எங்களுக்கு சிறந்த உள்கட்டமைப்பு, பயிற்சியில் ஈடுபடுவதற்கான வசதிகள், வெளிநாட்டு மைதானங்களைப் பற்றி தெரிந்து அதற்கேற்ப எங்களை தயார்படுத்திக் கொள்ளும் வகையில் வெளிநாடுகளில் பயிற்சி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம். இதேபோல் ஒலிம்பிக்கிலும் சாதனை படைப்பதற்கு அரசு எங்களுக்கு உதவ வேண்டும்.

ஒலம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறேன். அதற்கு 3 அல்லது 4 மாதங்கள் தென் கொரியா, சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பயிற்சி பெற வேண்டும். ஒலிம்பிக்கில் சாதிப்பதற்கு வெளி நாட்டு பயிற்சியாளர் கண்டிப்பாக அவசியம். ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வதற்கு நல்ல வாய்ப்பு உள்ளது என்றார். காமன்வெல்த் போட்டியில் இரண்டு தங்கம் வென்ற தீபிகாவுக்கு சஹாரா நிறுவனத்தின் சிறந்த வீராங்கனைக்கான விருது இந்த ஆண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற ஆசிஷ் கூறியது: காமன்வெல்த் போட்டிக்குப் பின்னர் நவீன விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் யாருக்கும் உதவாமல் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலேயே கிடக்கிறது. பயிற்சியை மேற்கொள்ள நவீன உபகரணங்கள் இல்லாதது மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்றேன். இதேபோல் ஒலிம்பிக்கில் சாதனை படைக்க வேண்டுமானால் நான் பயிற்சி மேற் கொண்டு வரும் அலாகாபாத் பயிற்சி மையத்தில் உரிய வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

காமன்வெல்த் போட்டியின்போது எங்களுக்கு நவீன உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதனால் சிறப்பான வெற்றியும் பெற்றோம்.

அதன்பிறகு அந்த உபகரணங்கள் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திலேயே வைக்கப்பட்டுள்ளதால் யாருக்கும் பயன்படாமல் வீணாகின்றன. எனவே என்னைப் போன்ற ஜிம்னாஸ்டிக் வீரர்களை அங்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றார்.

இதே கருத்தையே நீச்சல் வீரர் பிரசாந்தும் வலியுறுத்தினார். இளம் சாதனையாளர் விருது பெற்றபின் அவர்கள் இதைத் தெரிவித்தனர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner