வெளிநாட்டுப் பணம் வெளியில் வருமா? கறுப்புப் பணம் பற்றி வெள்ளை அறிக்கை நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

புதுடெல்லி, மே.22- வெளிநாட்டு வங்கி களில் இந்தியர்கள் பதுக்கிய கறுப்பு பணம் குறித்து, நாடாளுமன் றத்தில் நேற்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், கறுப்பு பணத்தை ஒழிப் பதற்கு சிறப்பு நீதிமன்றங் கள் அமைப்பது உள்பட பல்வேறு திட்டங் கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

வெளிநாட்டு வங்கி களில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் பல லட்சம் கோடி கறுப்பு பணத்தை இந் தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீண்ட காலமாக வற்புறுத்தப் பட்டு வந்தது.

இந்த பிரச்சினை குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய் யப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருந்தது. அதன்படி, நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி நாடாளுமன்றத் தில் நேற்று கறுப்பு பணம் குறித்த வெள்ளை அறிக்கையை தாக்கல் செய்தார்.

97 பக்கங்களைக் கொண்ட இந்த அறிக் கையில், வெளிநாடுகளிலும், உள்நாட்டிலும் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு என்பது குறித்தோ, பதுக் கியவர்களின் பெயர் குறித்தோ எந்த விவரமும் வெளியிடப்படவில்லை. அதே நேரத்தில், கறுப்பு பண பிரச் சினைக்கு தீர்வு காண் பதற்கு லோக்பால் மற்றும் லோக் அயுக்தா நீதிமன்றங்களை அமைக்க வேண்டியதன் அவசியம் குறித்து வலி யுறுத்தப்பட்டு இருக் கிறது.

நான்கு அம்சங்கள்

அத்துடன் கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வருவதற்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், இனி மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் தொடர்பான 4 அம்ச திட்டங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது:-

"சுவிஸ் வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணம் ரூ.9 ஆயிரத்து 295 கோடி மட்டுமே. இது மற்ற நாடுகள் வைத்திருக்கும் தொகையை விட குறைவாகும். மேலும், சுவிஸ் வங்கிகளில் கடந்த 2006-இல் ரூ.23,373 ஆயிரம் கோடியாக இருந்த இந்தியர்களின் கறுப்பு பணம் தற்போது இந்த அளவுக்கு குறைந்து உள்ளது.

கறுப்பு பணம் போன்ற பொருளாதார குற்றங்களை தடுப்பதற் காக, முன்னுரிமை அடிப்படையில் விரைவு நீதிமன்றங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொருளா தார குற்றங்களுக்காக தனியாக சிறப்பு நீதி மன்றங்களை மாநில உயர்நீதிமன்றத்தில் ஏற்படுத்த வேண்டும். கறுப்பு பணம், லஞ்ச ஊழல் வழக்குகளில் சிக்குகிறவர்களுக்கு விரைந்து தண்டனை கிடைப்பதற்காக மத்தி யிலும், மாநிலங்களிலும் லோக்பால் மற்றும் லோக் அயுக்தா நீதிமன்றங்கள் விரைவில் அமைக்கப்பட வேண்டும்.

தாங்களாக முன் வந்து சட்டப்படி வரி செலுத்துகிறவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கறுப்பு பணத்தை குறைக்கும் விதத்தில் நிதி மற்றும் `ரியல் எஸ்டேட்' துறை களில் சீர்திருத்தங் களைக் கொண்டு வர வேண்டும்.

தங்க முதலீட்டு திட்டம் போன்ற வரி பாதுகாப்பு திட்டங்கள் குறித்தும் பரிசீலிக்க வேண்டும். வெளிநாட்டு நன்கொடைகள் கட்டுப்பாடு சட்டத்தின் கீழ் தகவல்கள் பரி மாற்றம் மற்றும் உள் நாட்டில் உள்ள அமலாக்க நிறுவனங்களை ஒருங்கிணைப்பதன் மூலமும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

ஒழுக்க நெறிகள்

நிர்வாக அடிப் படையில் மட்டுமின்றி, சமூக பொருளாதார அடிப்படையிலும், மாணவர்கள் மட்டத்திலேயே ஒழுக்க நெறி முறைகள் அடிப்படை யிலும் கறுப்பு பண ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.'' இவ்வாறு வெள்ளை அறிக்கையில் கூறப் பட்டு உள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner