மாவட்ட முன்சீப் - தேர்வு விவரம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை உயர்நீதிமன்றம் நடத்தி வரும் மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் பதவிகளுக்கான எழுத்து தேர்வில் எஸ்.சி./எஸ்.டி./மிகப்பிற்படுத்தப்பட்டோர்/சீர்மரபினர்/பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்ட இசுலாமியர் முன்னிலை.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிகாரத்திற்கு கட்டுப்பட்ட சார்பு நீதிமன்றங்களுக்கான நீதிபதிகளை இதுவரை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு மய்யம் தான் தேர்வு செய்து வந்தது. எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என்று இரண்டு கட்டங்களாக போட்டியாளர்கள் வடிகட்டப்பட்டு இறுதியாக தேர்ச்சி பெற்றவர்கள், மாவட்ட அடிமட்ட நீதிபதிகளாக நியமிக்கப்படுவார்கள். இந்த ஆண்டு இந்த நடைமுறையை மாற்றி மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர்கள் பதவிக்கான 185 காலிப் பணி இடங்களுக்கு தேர்வு நடத்தும் பொறுப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்த அறிவிப்பை எதிர்த்து பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டில் அந்த தீர்ப்பினை இந்திய உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது.

அதன்பின் 2012 மார்ச் மாதம் 24, 25 ஆகிய தேதிகளில் சென்னை உயர்நீதிமன்றமே தேர்வுகளை நடத்தியது. இத்தேர்வுகளை நடத்தும் பொறுப்பை சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் எம்.ஒய்.இக்பால் அவர்கள் நீதியரசர் திரு.வி.ராமசுப்ரமணியன் அவர்களிடம் ஒப்படைத்தார். இந்தத் தேர்வுகளின் கேள்வித்தாள் தயாரிப்பது, அச்சடிப்பது முதல் தேர்வுத்தாள்கள் திருத்தும் பணியும் முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் வரையும் கட்டுப்பாடான முறையில் நடத்தப்பட்டன. முதற்கட்டமாக நடத்தப்பட்ட நான்கு பாடங்களுக்கான எழுத்துத்தேர்வு முடிவுகளில் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றோர் புள்ளி விவரத்தை சென்னை உயர்நீதிமன்றம் 2012 மே 2ஆம் தேதி வெளியிட்டுள்ளது. மூத்த (பார்ப்பனரல்லாத) நீதிபதிகளின் மேற்பார்வையோடு மிகவும் கண்டிப்புடன் தேர்வு நடைபெற்று மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த முதல்நிலை தேர்வு முடிவுகள் வியக்கத்தக்க புள்ளி விவரங்களை அளித்துள்ளன.

நேர்முகத் தேர்வுக்கு தகுதி மதிப்பெண் விவரம்
எஸ்.சி./எஸ்.டி. - 30 மதிப்பெண்கள்
எம்.பி.சி./பி.சி. பிரிவிற்கு - 35 மதிப்பெண்கள்
இதர ஜாதியினர் 40 விழுக்காடு மதிப்பெண்கள்
நான்கு பாடத் தேர்வுகளையும் எழுதிய 6702 பேரில் 460 பேர் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளார்கள். அவர்களில் 111 பேர் எஸ்.சி. தாழ்த்தப்பட்டவர்கள். 220 பேர் பிற்படுத்தப்பட்டவர்கள், 95 பேர் மிகப் பிற்படுத்தப்பட்டோர், 24 பேர் இசுலாமியர், மலைவாழ் மக்கள் 5 பேர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், இதர ஜாதியினரில் தேர்வு எழுதியவர்கள் 157 பேர். அவர்களில் தகுதி பெற்றோர் 5 பேர் மட்டுமே. மலைவாழ் பிரிவினரில் தேர்வு எழுதியவர்கள் 42 பேர். தேர்ச்சி அடைந்தவர்கள் 5 பேர்.

இத்தேர்வின் முழுவிவரமும் உயர்நீதிமன்றத்தில் வெளியிடப்பட்டது.

1.    அறிவிக்கப்பட்ட காலி பணியிடங்கள்    - 185 பேர்
2.    விண்ணப்பித்தோர் மற்றும் தேர்வு      எழுதியோர் எண்ணிக்கை    - 8895 பேர்
3.    4 பாடத்தேர்வுகளையும் எழுதியவர்கள்    - 6702 பேர்
4.    நேர்முகத் தேர்விற்குத் தகுதி பெற்றோர்    - 460 பேர்
தேர்ச்சி பெற்றோர் விவரம்
5.    எஸ்.சி. பிரிவினர்    - 111 பேர்
6.    எம்.பி.சி./பி.சி. பிரிவினர்    - 95 பேர்
7.    எஸ்.டி. பிரிவினர்    - 5 பேர்
8.    பி.சி. (இஸ்லாமியர் தவிர)    - 220 பேர்
9.    பி.சி. இஸ்லாமியர்கள்    - 24 பேர்
10. இதர ஜாதியினர்    - 5 பேர்
(குறிப்பு: நேர்காணல் இனி நடைபெறவிருக்கிறது).
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner