புதிய கல்விக் கொள்கை - "நீட்" நுழைவுத் தேர்வை எதிர்த்து எழுச்சிமிகு முத்தரப்பு கண்டன ஆர்ப்பாட்டங்கள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர், டிச.30 தேசிய புதிய கல்விக் கொள்கை - 'நீட்' நுழைவுத் தேர்வு ஆகியவற்றை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் - மாணவர் -- பெற்றோர் பங்கேற்ற எழுச்சிமிகு முத்தரப்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் இன்று (30.12.2016) தமிழகத்தின் முக்கிய நகரங் களில் நடைபெற்றது.

கடந்த 18.12.2016 அன்று திருச்சி உழவர் சந்தையில் திராவிடர் கழகத்தின் சார்பில், திராவிடர் கழகத்  தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி  அவர்களின் தலைமையில் தேசிய புதிய கல்விக் கொள்கை மற்றும் 'நீட்' நுழைவுத் தேர்வினை எதிர்த்து  ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் பங்கேற்ற முத்தரப்பு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு ஆசிரியர், மாணவர் அமைப்புகள் பங்கேற்றன.

இம்மாநாட்டில் தேசிய புதிய கல்விக் கொள்கையை முற்றிலும் நிராகரிப்பதாகவும், நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என்றும், கல்வி மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழர் தலைவர் தலை மையில் மூன்று முத்தான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் இக்கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான திருவாரூர், நாகர்கோவில், தூத்துக்குடி, மதுரை, சேலம், தருமபுரி, கோவை, திருச்சி, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழர் தலைவர் அறிவித்திருந்தார்.

தமிழர் தலைவரின் வழிக்காட்டுதலின்படி இன்று (30.12.2016) காலை 11 மணியளவில் மேற்கண்ட நகரங்களில் திராவிடர் கழக நிர்வாகிகள், பகுத்தறிவாளர் கழக நிர்வாகிகள், ஆசிரியர் சங்கங்கள், ஆசிரியர் -- மாணவர் - பெற்றோர் ஆகியோர் பெரும் திரளாக பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

தேசிய புதிய கல்வி மற்றும் 'நீட்' எதிர்ப்பு

ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட ஒலி முழக்கங்கள் (30.12.2016)

¬ வாழ்க வாழ்க வாழ்கவே, தந்தை பெரியார் வாழ்கவே!

¬ வெல்க வெல்க வெல்கவே, சமூக நீதி வெல்கவே!

¬ மத்திய அரசே, மத்திய அரசே, புதிய கல்வி பெயராலே,

திணிக்காதே, திணிக்காதே, குலக்கல்வியைத் திணிக்காதே!

¬ மத்திய அரசே பிஜேபி அரசே, திணிக்காதே திணிக்காதே

புதிய கல்வி பெயராலே, புகுத்தாதே புகுத்தாதே

சமஸ்கிருதத்தைப் புகுத்தாதே, திணிக்காதே திணிக்காதே

இந்தியைத் திணிக்காதே!

¬ புதிய கல்வி திட்டமா, ஆர்.எஸ்.எஸ். திட்டமா?

¬             அனுமதியோம், அனுமதியோம்

புதிய கல்வித் திட்டத்தை அனுமதியோம்!

¬             மதச்சார்பற்ற ஆட்சியிலே, வேதக்கல்வியா? வேதக்கல்வியா?

குருகுல முறையா, குருகுல முறையா?

அனுமதியோம், அனுமதியோம், கண்டிப்பாக அனுமதியோம்!

¬ தேசியக் கல்வி பெயராலே, திறக்காதே திறக்காதே

வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை

திறக்காதே, திறக்காதே, கதவைத் திறக்காதே

பிஜேபி அரசே கதவைத் திறக்காதே!

¬             திட்டமா, திட்டமா? இடஒதுக்கீட்டை

ஒழித்திட ஒழித்திட திட்டமா? திட்டமா?

¬             வேண்டாம் வேண்டாம் விஷப் பரிட்சை வேண்டாம்

மத்திய அரசே, மத்திய அரசே

எச்சரிக்கின்றோம் எச்சரிக்கின்றோம்!

¬             மத்திய அரசே, பிஜேபி அரசே! தாய்மொழிக் கல்வியை,

புறக்கணிக்காதே, புறக்கணிக்காதே!

¬             பிளவு படுத்தாதே, பிளவு படுத்தாதே

தகுதி என்ற பேராலே

பிளவுப்படுத்தாதே, பிளவுப்படுத்தாதே

மாணவர்களைப் பிளவுப்படுத்தாதே!

¬             ‘நீட்’ என்ற பெயராலே நுழைவுத் தேர்வை

நுழைக்காதே, நுழைக்காதே!

¬             மத்திய அரசே பிஜேபி அரசே! வஞ்சிக்காதே வஞ்சிக்காதே! ஒடுக்கப்பட்ட மக்களை, கிராமப்புற மக்களை,

‘நீட்’ என்ற பேராலே வஞ்சிக்காதே, வஞ்சிக்காதே!

¬             போராடுவோம், போராடுவோம்

வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!

¬             உயரட்டும் உயரட்டும், கோரிக்கைகள் நிறைவேற

உயரட்டும் உயரட்டும், ‘கோடி’கைகள் உயரட்டும்!

¬             கொண்டுவா, கொண்டு வா! மத்திய அரசே மத்திய அரசே!

பொதுப்பட்டியலிலிருந்து,

கல்வியை கொண்டுவா கொண்டுவா

மாநிலப் பட்டியலுக்கு,   கொண்டு வா, கொண்டுவா!

¬ வாழ்க வாழ்க வாழ்கவே, தந்தை பெரியார் வாழ்கவே!

¬             வெல்க வெல்க வெல்கவே, போராட்டம் வெல்கவே!

¬             ஒன்றிடுவோம், ஒன்றிடுவோம்

வென்றிடுவோம், வென்றிடுவோம்!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner