50 நாள்கள் முடிந்தும் பணத்தட்டுப்பாடோ - மக்கள் அவதியோ குறையவில்லை

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நோட்டுகள் செல்லாது அறிவிப்பு

50 நாள்கள் முடிந்தும் பணத்தட்டுப்பாடோ - மக்கள் அவதியோ குறையவில்லை

120 பேர் பலி - ஒரு கோடிக்கும் அதிகமானோர்

வேலையிழப்பு: இதுதான் மோடி ஆட்சியின் சாதனை

சென்னை, டிச 28- 83 விழுக்காடு புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்து இன்றோடு 50 நாள்கள் முடிந்து விட்டது; நாடு முழுவதும் உள்ள  பணத்தட்டுப்பாடோ, மக்கள்படும் அவதியோ குறைந்த பாடில்லை. 120 பேர் உயிர் பலியானதும், ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலை இழந்ததும்தான் மோடி அரசின் சாதனை.

பிரதமர் மோடி அறிவித்த நவம்பர் 8 ஆம் தேதி 9- மணியிலிருந்து கையில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தும் தண்ணீர் கூட வாங்க முடியாத அளவிற்கு நெருக்கடிக்கு ஆளானார்கள். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க இயலாமல் பொதுமக்கள் பெரிதும் இன்னலுக்கு ஆளானார்கள். இந்நிலையில், எனக்கு 50 நாள்கள் கொடுங்கள், எல்லாம் சரியாகிவிடும் என்று மோடி அறிவித்தார்.

இன்றும் முழுமையாக

எந்த ஏடிஎம் களும் திறக்கப்படவில்லை

மேலும், சட்டவிரோதமாக சேர்த்த பணத்தை ஒழிக்க, கள்ள நோட்டுகளை ஒழிக்க இந்த ‘‘சர்ஜிகல் ஸ்டிரைக்’’ நடவடிக்கை என்று ஆரம்ப நாள்களில் முழங்கிய மோடி, திடீரென்று பணமில்லா பரிவர்த்த னையை கொண்டு வரவே இந்த நடவடிக்கை என்று பச்சோந்தியைப் போல  மாற்றி மாற்றி பேசி வந்தார். 50 நாள்களில் ரூபாய் நோட்டுப் பிரச்சினை முடிவிற்கு வந்துவிடும் என்று உறுதி கொடுத்த நிலையில் இனிவரும் நாள்களிலும் ரூபாய் நோட்டு சிக்கல் தீர்ப்பதற்கான அறிகுறியே இன்னும் கண்ணில் தென்படவில்லை. 50 நாள்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்றளவும் வங்கியில் தங்களின் உழைப்பின் பலனான கிடைத்த பணத்தை வாங்க வங்கி வாசலில் வரிசையாக நிற்கின்றனர். பண மதிப்பு நீக்கம் அறிவிப்பு வெளியான இரண்டு நாள்கள் கழித்து ஏடிஎம்கள் செயல்படும் என்று அறி விக்கப்பட்டாலும், இன்றும் முழுமையாக எந்த ஏடிஎம்களும் திறக்கப்படவில்லை.

செயல்படாத வங்கிகள்

நவம்பர் 7 ஆம் தேதிவரை சீராக சென்று கொண்டி ருந்த அரசு வங்கிப் பணிகள் திடீரென அறிவித்த அறிவிப்பின் காரணமாக முற்றிலும் முடங்கிப் போய் உள்ளது. முக்கியமாக அதிக நடுத்தர மக்கள் கணக்கு வைத்திருக்கும் அரசு வங்கிகள் முறையாக செயல்படவில்லை. அவர்களுக்கு பணம் இன்றுவரை சரிவர சென்று சேரவில்லை. இந்த நிலையில் அரசு மறைமுக உத்தரவினால் ரிசர்வ் வங்கி தனியார் வங்கிகளுக்கு மட்டுமே புதிய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து அனுப்பி வருவதால், அங்கு ஊழல் சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் கோடிக்கணக்கில் புதிய 2000 ரூபாய் நோட்டுகளை கமிசனுக்கு கொடுத்ததில் தனி யார் வங்கிகள் முக்கிய காரணமாக இருந்துள்ளன.   வங்கிகளில் தங்களது கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்கே மக்கள் டோக்கன் வாங்க வேண்டிய நிலையே 50 நாள்கள் ஆகியும் நீடித்து வருகிறது. பணத்தை எடுப்பது சிரமமாக இருப்பது போன்றே வங்கிகளில் அன்றாடப் பணிகளும் இதர சேவைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாள்கள் என் றால் மக்கள் படும் அவதியை சொல்லி மாளாது. தொடர்ந்து இரண்டு நாள்கள் வங்கிகளுக்கு விடு முறை அளிக்கப்பட்டால், எங்காவது திறந்திருக்கும் ஒன்றிரண்டு ஏடிஎம் மய்யங்களும் மூடப்பட்டிருக்கும். ஆண்டின் இறுதி வாரத்தில் நாடெங்கும்  புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் இந்த நிலையில்  அன்றாட செலவுகள் செய்யக்கூட மக்களிடம் பணம் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். எந்த ஏடிஎம் மய்யத்தில் இருந்து பணத்தை எடுக்கலாம் என்று இரவு பகலாக மக்கள் சாலைகளில் அலைந்து கொண் டிருக்கின்றனர்.

ஒருவர் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வங்கி யில் இருந்து எடுத்துக் கொள்ளலாம் என்று அறி விக்கப்பட்டது. என்றாலும் வங்கிகளில் பணத் தட்டுப் பாடு இருப்பதால் ஒருவருக்கு 24 ஆயிரம் ரூபாய் கொடுக்க வங்கிகள் மறுக்கின்றன. 2 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே வங்கிகள் கொடுக்கின்றன.  இதனால், கையில் காசில்லாமல் மக்களுக்கும், பணத்தை கொடுக்க முடியாத வங்கி அதிகாரிகளுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுவது தொடர்கிறது. வங்கிகள், ஏடிஎம் மய்யங்கள் என அனைத்திலும் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன.

அதனைப் பெற்றுக் கொண்டு சில்லறை கொடுப் பதற்கு கடைகாரர்களிடம் சில்லறை நோட்டுகள் இல்லை. இதற்கு புதிய 500 ரூபாய் நோட்டுகள் வந்தால்சரியாகிவிடும்என்றுசொல்லப்பட்டது. என் றாலும், 500 ரூபாய் நோட்டுகள் முழு அளவில் மக்களிடையே இன்றும் சென்று சேரவில்லை.

50 நாள்களில்

பிரச்சினை தீர்ந்ததா?

பிரதமர் மோடி செல்லாத நோட்டு அறிவிப்பு வெளியிடும்போது, பொதுமக்கள் 50 நாள்களுக்கு கஷ்டங்களை பொறுத்துக் கொள்ளவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மோடி கூறிய  50 நாள்கள் முடிந்துவிட்டது. இன்னமும் திறந்திருக்கும் ஏடிஎம்களில் கூட்டம் கூடிக்கொண்டு தான் இருக் கிறது. வியாபார மய்யங்களில் விற்பனை இன்றி ஈ ஓட்டிக் கொண்டிருக்கின்றனர் வியாபாரிகள்.

அரசியல் லாபம் கருதி தனிப்பட்ட முறையில் வெளியிட்ட இந்த அறிவிப்பால் நிலைமை மோச மாகும் என்று முன்பே  சிந்திக்காத மோடி இனி கருப்புப் பண ஒழிப்பு என்று கூறி மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலையில் ரொக்கமில்லா பரிவர்த்தனை என்று மாற்றி பேசுகிறார்.

மோடியின் இந்த முன்யோசனை இல்லாத அறிவிப்பால் இன்றுவரை 120- பேருக்கு மேல் மரண மடைந்துள்ளனர்.  இதில் மேற்குவங்கம், பீகார், உத்திரப்பிரதேசம், டில்லி, தெலங்கானா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவில் 10 பேர் வீதம் வங்கியில் வரிசையில் நின்ற அயற்சியில் மரணடைந்துள்ளனர். 8 வங்கி ஊழியர்கள் மரண மடைந்துள்ளன. 22 பேர் ரூபாய் நோட்டை மாற்ற இயலாமல் அன்றாட வாழ்க்கை பாதிப்பால் தற் கொலை செய்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 7 பேருக்கு மேல் மரணமடைந்துள்ளனர்.

இந்த அய்ம்பது நாள்களில் நாடு முழுவதும் 70- லட்சத்திற்கு மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டு விட்டன. இந்த தொழிற்சாலைகளில் பணிபுரிந்தவர்கள், அவர்களது குடும்பத்தினரும் பிச்சைக்காரர்களாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது. தலைநகர் டில்லியில் வேலையிழந்த ஒருவரின் குடும்பத்தினர் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாத நிலையில் டில்லி புறநகர் ரயில் நிலையம் ஒன்றின் ஓய்வு அறையில் குடியேறி நாங்கள் ரூபாய் நோட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோம், எங்களுக்கு உதவுங்கள் என்று துண்டுச்சீட்டில் எழுதி ரயில் பயணிகளிடம்பிச்சை எடுத்து வாழும் சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.

இது ஒரு உதாரணம் மட்டுமே, அதே நேரத்தில் இது போன்று இன்னும் பல வேதனையான நிகழ்வுகள் நாடு முழுவதும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner