அடுத்து வெல்லப்போவது யார்? கோவையா - சேலமா - ஈரோடா அல்லது நாகர்கோவிலா?

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

திருவாரூர் மகளிர் பேரணியும், மாநாடும், தீர்மானங்களும் மகளிர் புத்தெழுச்சிக்கான அடையாளம் -  மாநாட்டை வெற்றியாக்கிய அனைவருக்கும் பாராட்டு

போராட்டத்தைக் கையில் ஏந்தி அன்னை மணியம்மையார் பிறந்த
மார்ச்சு 10 ஆம் தேதியை நோக்கி மார்ச்சு செய்வோம்!

திருவாரூரில்  கடந்த 17 ஆம் தேதி நடத்தப்பட்ட திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டின் நேர்த்திக்குப் பாராட்டுத் தெரிவித்தும், அடுத்து அம்மாநாட்டை வெல்லப் போவது கோவையா - சேலமா - ஈரோடா - நாகர்கோவிலா? என்ற வினாவை எழுப்பியுள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் . அறிக்கை வருமாறு:

திருவாரூரில் கடந்த 17 ஆம் தேதி (17.12.2016) அன்று மாலை நடைபெற்ற திராவிடர் மகளிர் எழுச்சிப் பேரணி யும் சரி, தெற்கு வீதியில் நடைபெற்ற திராவிடர் மகளிர் மண்டல மாநாடும் சரி, ஈடு இணையற்ற முறையில் பொதுவானவர்களும், அரசியல் கட்சி நண்பர்களுமேகூட, மகளிரிடம் - அதுவும் திராவிடர் கழகத்தின் மகளிர் அணி யினரிடம் இத்தகைய பேராதரவும், பெருந்திரள் சக்தியும் இருக்கிறதே - அதுவும் தந்தை பெரியார் மறைந்து 43 ஆண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய திராவிடர் மகளிர் எழுச்சி சங்க நாதமா? என்று மலைத்தனர் - திகைத்தனர் - வியந்தனர் என்று கூறும் வண்ணம் அமைந்திருந்தது.

பெரியார் மருந்து தேவை!

கலை நிகழ்ச்சிகளில் ஈடுபட்ட பெரியார் பிஞ்சுகளில் துவங்கி, கருத்தரங்கம், உரையரங்கம் - எல்லாம் ஏதோ ஒரு விழா மாதிரி அமையாமல், வினயமாக தங்களது எதிர்காலம்பற்றிய கவலையும், பொறுப்பும், மகளிர் மாண்பு கள் காப்பாற்றப்பட உண்மை விடுதலை உணர்வுகளும், ஆக்கங்களும் எதில் உள்ளன? எந்த அளவுக்குப் ‘‘பெரியார் மருந்து’’ அதற்கு  இன்றியமையாத தேவை என்பதை, சுவாசித்தவர்களின், சொல்லரிய கருத்தோட்டமாகவே அமைந்தது.

36 தீர்மானங்களும் -
ஒரு மாக்னகார்ட்டா!

அதில் நிறைவேற்றப்பட்ட 36 தீர்மானங்களும், மகளிர் உரிமைகளுக்கான மற்றொரு ‘‘மாக்ன கார்ட்டா’’ உரிமைச் சாசனம் என்றே சொல்லவேண்டும்.

அத்தீர்மானங்களை விளக்கி தமிழ்நாடு முழு வதும் கழக மகளிரும், பகுத்தறிவாளர்களும் நிறைய அரங்க அல்லது பொதுக் கூட்டங்களை நடத்தி,  மகளிருக்கும், மற்றையோர்க்கும் நல்லதொரு விழிப்புணர்வை உருவாக்குதல் தேவை. இது காலத்தின் கட்டாயம் ஆகும்!

இன்றைய தீர்மானங்கள் -
நாளைய அரசு சட்டங்கள்

இன்றைய நமது மாநாடுகளின் (இயக்க) தீர்மானங்கள் நாளைய அரசுகளின் சட்டங்களாக வரக்கூடியவை என்பதற்கு 1929 ஆம் ஆண்டில் செங்கற்பட்டில் நடை பெற்ற முதல் மாகாண சுயமரியாதை மாநாட்டின் தீர் மானங்களிலிருந்து தொடங்கும் உண்மைகளாகும்!

வெளிநாடுகளிலிருந்தும் பாராட்டுகள்!

இத்தீர்மானங்கள் (திருவாரூர் ‘விடுதலை’யில் வெளியானவுடனேயேயும், மாநாட்டு நடவடிக்கைகளை உலகம் முழுவதும் பெரியார் வலைக்காட்சி வழியே பார்த்து சுவைத்ததினாலும் பல நண்பர்கள் உலகின் பற்பல நாடுகளிலிருந்து நமக்குத் தொலைபேசிமூலம் பாராட் டையும், மகிழ்ச்சியையும், வரவேற்பையும் தெரிவித்தனர்.

தேவை பெண்கள் புரட்சி!

மனித  குலத்தின் சரி பகுதியில் போதிய விழிப்புணர்வும், எழுச்சியும் ஏற்படுத்த மகளிரிடையே எழுச்சி தானே ஏற்படும்.
புதிய சந்ததி உருவாக அதுவே  ‘அறிவுப் புரட்சிக்கான பூபாளமாக’ அமையும் என்பது உறுதி.

இந்த மாநாட்டிற்காக மகளிரே முன்னின்று கடைவீதி வசூல், வீடு வீடாக  வசூல்  - அதன்மூலம் மாநாட்டுக்கான விளம்பரமும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட உழைப்பு அத்தனையும் சாதாரணமானவையோ!

பாராட்டுக்குரிய
மகளிர்!

இவ்வளவு வெற்றிகரமான, வீர காவியமான திரு வாரூரின் திராவிட மகளிர் எழுச்சிக்கு முழுப் பொறுப்பாக உழைத்த மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவர் தோழர் செந்தமிழ்ச்செல்வி மற்றும் முக்கிய மகளிரணி பொறுப்பாளர்களான தோழர்கள் கமலம், மகேசுவரி, சரசு, அன்னதானம்மா, பைனம்பு, மரகதம், பேபி, கலைவாணி, அமுதா, விசயலக்குமி, பிரியா ஆகியோருக்குப் பாராட்டுகள். அம்மாவட்டத்துக்குப் பொறுப்பாளரான பொதுச்செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமாருக்கும் பாராட்டு. மாநில விவசாய அணி செயலாளர், மண்டல தலைவர், செயலாளர், மாவட்ட தலைவர், செயலாளர் ஆகியோருக்கும், தோழர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுகள்.

அடுத்து எந்த ஊர்?

திருவாரூரைப் பின்பற்றி இந்த எழுச்சியான படலத்தின் தொடர்ச்சியாக அடுத்து எங்கே? மகளிர் தோழர்கள் முந்தட்டும்; முரசு கொட்டி வெல்லட்டும்! கோவையா? ஈரோடா? சேலமா? நாகர்கோவிலா? யாருக்கு அந்த நல் வாய்ப்பு - விரைவில் அறிவிப்பு வரும்!
தோழர்களே, வீராங்கனைகளே, நீங்கள் கொட்டிய உழைப்பின் விளைச்சலும், கொள்கை அறுவடைகளும், அன்னை மணியம்மையார் பிறந்த நாளான  மார்ச் 10 ஆம் தேதி ‘‘மார்ச்‘’ (விணீக்ஷீநீலீ) செய்ய, அணிவகுத்துப் பணி முடிக்க ஆயத்தமாவீர்!
வெல்க! வெல்கவே!


சென்னை                                                                                                                  தலைவர்,
25.12.2016                                                                                                             திராவிடர் கழகம்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner