(அ)நாகரிகம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

திருவாரூர் திராவிடர் மகளிர் எழுச்சி மாநாட்டில் (17.12.2016) உரை நிகழ்த்திய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் இரண்டு முத்தான கருத்துகளை எழிலாக எடுத் துக் கூறினார்.

முதலாவது - மருத்துவமனையில் மருத்துவ உதவி பெற்றுவரும் தி.மு.க. தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்அவர்களின்உடல் நலம் விசாரித்திட காவேரி மருத்துவமனைக்கு அ.இ. அ.தி.மு.க.வைச் சேர்ந்த மக் களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை அவர்களும், தமிழக அமைச்சர் ஜெயக் குமார்அவர்களும்நேரில் சென்றது நயத்தக்க நாக ரிகஉணர்வேயாகும். அவர்களைஅன்புடன்வர வேற்று கலைஞர் அவர் களின் உடல்நலம் குறித்த தகவல்களைதளபதிமு.க. ஸ்டாலின் அவர்கள் தெரிவித் துள்ளது பாராட்டத்தக்கதாகும்.

தமிழ்நாட்டின் பொது வாழ்வில் இந்தப் பண்பாடு ஓங்கித் தழைக்கவேண்டும் என்பது எங்களைப் போன்ற வர்களின் எதிர்பார்ப்பாகும். (வடநாடு இதில் வளர்ந்தோங் கியுள்ளது).

இரண்டாவதாக- காலில் விழும் கலாச்சாரம் பற்றியதாகும்.தலைவர்க ளின் கால்களில் தொண்டர் கள்நெடுஞ்சாண் கிடை யாக விழுவது தவிர்க்கப் படவேண்டும். சுயமரியாதை இயக்கம் தோன்றிய தமிழ் மண்ணில் ஒருவர் காலில் இன்னொருவர் விழுவதை அனுமதிக்கக் கூடாது- முடியாது! இது மனித சுய மரியாதைக்கே கேடானது - எதிரானது!

முதலில் தடுக்கவேண்டிய பொறுப்பு தலைவர்களைச் சார்ந்ததே! அவர்கள் இதில் கண்டிப்பாக இருந்தால், கூடாது என்று கடுமையாகக் கருத்துத்தெரிவித்தால்,தடுத் தால், தொண்டர்கள் எப்படி அந்தக் காரியத்தைச் செய் வார்கள்?

முதலில் இருப்பவர் காலில் விழும்போது, அதனைத் தலை வர்களும் மகிழ்ச்சியோடு ஏற்று ‘அருள்பாலிக்கும்போது’ அடுத்தவரும் போட்டிப் போட்டுக் கொண்டு காலில் விழத்தானே செய்வார்கள்?

நாம் காலில் விழாவிட்டால், தலைவர் தப்பாக நினைத்து விடுவாரோ - அதனால் நாம் எதிர்ப்பார்ப்பது நடக்காதோ என்கிற சுயநல எண்ணம்தான் அதற்குக் காரணம். தலைவர் அதை விரும்புகிறார் என்று தெரிந்ததால்தான் அதனைச் செய்கிறார்கள். (அம்மையார் ஜெயலலிதா அவர்களின் மறைவோடு அதுவும் மறை யட்டும்).

சுயமரியாதை இயக்கத்தை உண்டாக்கிய தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணில் இந்தக் காலில் விழும் கலாச் சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டாமா? என்ற அர்த்தமுள்ளவினாவைஎழுப் பினார் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

- மயிலாடன்

குறிப்பு: யாராவது ஒருவர் இதனைக் ‘குத்திக்‘ காட்ட வேண்டும் அல்லவா! பூனைக்கு மணி கட்டவேண் டும் அல்லவா!.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner