மயிலை சீனி.வேங்கடசாமி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இவர் பெயரை தமிழ் உலகம் மறக்காது - மறக்கவும் கூடாது; அரிய ஆய்வு நூல்களைத் தமிழுலகிற்குத் தந்த ஆய்வறிஞர்.

கிறித்தவமும் தமிழும், பவுத்தமும் தமிழும்,காந்தருவதத்தையின் இசைத் திருமணம் (சிறு வெளியீடு),  இறையனார் அகப்பொருள் ஆராய்ச்சி (சிறு வெளியீடு),  இறை வன் ஆடிய எழுவகைத் தாண்டவம், மத்த விலாசம் - மொழி பெயர்ப்பு, மகாபலிபுரத்து ஜைன சிற்பம், பவுத் தக் கதைகள், சமணமும் தமி ழும், மகேந்திர வர்மன், மயிலை நேமிநாதர் பதிகம், கவுதம புத்தர், தமிழர் வளர்த்த அழகுக் கலைகள், வாதாபி கொண்ட நரசிம்மவர்மன், அஞ்சிறைத் தும்பி, மூன்றாம் நந்தி வர்மன், மறைந்துபோன தமிழ் நூல்கள், சாசனச் செய்யுள் மஞ்சரி, புத்தர் ஜாதகக் கதைகள், மனோன்மணியம்,  பத்தொன்பதாம் நூற்றாண்டில் தமிழ் இலக்கியம், உணவு நூல், துளு நாட்டு வரலாறு, சமயங்கள் வளர்த்த தமிழ், நுண்கலைகள், சங்ககாலத் தமிழக வரலாற்றில் சில செய்திகள், பழங்காலத் தமிழர் வாணிகம், கொங்குநாட்டு வரலாறு, களப்பிரர் ஆட்சியில் தமிழகம், இசைவாணர் கதைகள், சங்க காலத்துப் பிராமிக் கல்வெட்டெழுத்துகள், தமிழ்நாட்டு வரலாறு சங்ககாலம் - அரசியல் இயல்கள் 4, 5, 6,10 - தமிழ்நாட்டரசு வெளியீடு, பாண்டிய வரலாற்றில் ஒரு புதிய செய்தி.

சென்னை மயிலாப்பூரில் நகராட் சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணி யாற்றி 1955 இல் ஓய்வு பெற்றவர்.

அவர்எழுதியநூல்கள்அத்த னையும் அரும்பொருள் ஆய்வுக் கொண்டவை.‘‘தமிழகச் சமயங் கள்: பவுத்தம்‘’ எனும் தலைப்பில் வெளிவந்த நூலின்மூலம் பார்ப் பனீயத்தின் ஊடுருவல், அணைத்து அழித்தல் போன்ற இழி குணங்களை அடுக்கடுக்கான ஆய்வுக் குத் தூசி மூலம் குடல் கிழித்து வெளிச்சத்துக் குக் கொண்டு வந்த வீரத் திருமகன்.

‘குடிஅரசு’, ‘திராவிடன்’ (ஆசிரி யர் குழுவிலும் பணி) போன்ற இதழ்களிலும் அவர்தம் படைப்புகள் வெளிவந்தன என்பது மேலும் ஒரு கூடுதல் முத்திரைத் தகவல்.

‘‘ஆதிசங்கரர்யார்?என்ற ஆய்வு முக்கியமானது. ஆதிசங்கரர் தமது மாயாவாதாக்கொள்கையைபவுத்த மதத்தினின்றுபெற்றுக்கொண்டார் என்பது மட்டும் உறுதியே! ஏனென் றால்,வைணவஆசாரியாருள்தலை சிறந்தவரும், ஸ்ரீபாஷ்யம் அரு ளிச் செய்தவருமான இராமானு சர், சங்கராச்சாரியாரின் அத்வைத மதத்தைப் ‘பிரசன்ன பவுத்தர்’ அஃதாவது மாறுவேடம் பூண்டு வந்த பவுத்தம் என்று கூறியிருக் கிறார். துவைத மதத்தின் தலைவ ராகிய மாத்வாசாரியாரும் அவ் வாறே சங்கரரின் அத்வைத மதத்தை ‘பிரசன்ன’ பவுத்தம் என்று கூறியிருந்தார். பதும புரா ணத்தின் உத்தரகாண்டத்திலும் சங்கராச்சாரியாரின் மாயாவாத மதம் பிரசன்ன பவுத்தம் என்றே கூறப்படுகிறது. இதனால், அத்வைத மதத்தின் அடிப்படையான கொள் கைகள் பவுத்த மதத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பது நன்கு விளங்குகிறது'' (நூல் பக்கம் 93).

‘‘மணிமேகலை, சம்பாவதி தாரா தேவி முதலிய சிறு தெய்வங்கள் பண்டைக் காலத்தில் பவுத்தர்களால் வணங்கப்பட்டு வந்தன. இந்தத் தெய்வங்களின் கோவில்களை இந் துக்கள் பிற்காலத்தில் கைப்பற்றிக் கொண்டு இவைகளுக்குக் காளி, பிடாரி,திரோபதையம்மன்என்னும் புதுப் பெயர்களைச்சூட்டி கிராம தேவதைகளாக்கிக் கொண்டனர். காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சியம் மன் கோவில் பவுத்தரின் தாராதேவி யம்மன் கோவிலே.’’ (நூல் பக்கம் 90).

சாஸ்தா என்பது புத்தரின் பெயர்; அதுதான் பிற்காலத்தில் சாஸ்தா என்ற அய்யப்பன் கோவில் என்றும் நிறுவுகிறார் மயிலை சீனி. வேங்கடசாமி.

- மயிலாடன்

(இன்று இவரின் பிறந்த நாள் - 1900).



.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner