நாவலர் சோமசுந்தர பாரதியார்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘ஆரியருக்கு அடிமைப் படாத எண்ணம் எனக்கு 40ஆண்டுகளுக்குமுன்பே ஏற்பட்டது. சுயமரியாதை இயக்கம் தோன்றுவதற்கு முன்பே இருந்தது.  என்னு டைய 14 ஆவது வயதிலே எனக்குக் கல்யாணம் நடந்தபோது, நேரிட்டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தின் ஒரு கிரா மத்திலே, நாகரிக உணர்ச்சி பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம். நான் வைதீக உணர்ச்சியுள்ளவன்.

நல்ல சைவன் - இப்போது இருக்கும் சைவம் போன்ற தல்ல, என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண் டிதர் கூறும் சைவம் நான் கொள்வதல்ல, உண்மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் - பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறி னார்கள். அப்படிப்பட்ட கல்யாணம்எனக்குவேண் டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி, பார்ப் பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப்பட்டிருக்கிறது. கோவில்களிலே அவர்கள் துவஜஸ் தம்பத்துக்கு அப்புறம் நுழையக்கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப்பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல்யாணம் செய்துகொள்ள மாட்டேன் என்றேன். என் குடும்பத்தார், திருநெல்வேலிக்கும்-மது ரைக்கும் போய்ப், பண்டிதர் களைக்கேட்டார்கள். திருநெல்வேலிப் பண்டி தர்கள்கூடச்சரியாகச்சொல்ல வில்லை.மதுரையிலி ருந்தபண்டிதர்கள்பையன் சொல்லுவது உண்மைதான் - ஆகமம் அப்படித்தான் கூறுகிறது என்று சொன் னார்கள். பிறகு எனக்குச் சைவக் குருக்கள் வைத்து மணம் நடந்தது. எனது சிறிய வயதிலேயே அந்த நோக்கம் இருந்தது.’’

இப்படிப் பேசியவர்தான் பன்மொழிப் புலவர் நாவலர் சோமசுந்தர பாரதியார்.

எங்கே பேசினார் என்பது மிகமிக முக்கியமானது.

கம்ப இராமாயணம், பெரிய புராணம் இவற்றைத் தீயிட்டுக் கொளுத்தவேண்டும் என்ற சொற்போர் சேலம்- செவ்வாய்ப்பேட்டையில் 14.3.1948 அன்று நடைபெற்றது.

அறிஞர்அண் ணாவை எதிர்த்துப் பேசும் பொழுதுதான் இவ்வாறு பேசினார்.

அவரின் மறைவு நாள் - இந்நாள் (1959).

- மயிலாடன்.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner