ஆவேசமாய்...
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘‘திரு.கி.வீரமணி வெறும் ஆள் அல்ல. நம் தலைவர் போல குருசாமியைப்போல, அவர் பேசவில்லை. சற்றுத் துணிவாய்ப் பேசிவிட்டார் திரு.வீரமணி நம்மைப் போன்றவர் அல்ல.

அவர் ஒரு வக்கீல். எவ் வளவோ நல்ல வாய்ப்பு அவரை அணுகக் காத்திருக்கிறது. அவற்றுக்குத் தடை ஏற்படலாம்; என்னைப் பொருத்தவரை அவருக்கு அப்படி ஏற்பட்டால் நமக்கு நல்லதாகிவிட்டது என்றுதான் கருதுவேன் - ஏன்? நம் இயக்கத்திற்கு ஒரு முழு நேரத் தொண்டன் நமக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம் என்கிற ஆசை. இப்போது அவர் தொண்டு அரைநேரம். இனி அது முழு நேரமாகிவிடலாம்.’’

சென்னைக் கடற்கரையில் 30.10.1960 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அன் றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளராக இருந்த கி.வீரமணி அவர்கள் ஆற்றிய சொற்பொழிவை மய்யப்படுத்தித்தான் தந்தை பெரியார் அவ்வாறு குறிப்பிட்டார்.

அழகிரிசாமிஎன்றதமிழ கத்தைச் சேர்ந்த வழக்குரை ஞரை அரசு வழக்குரைஞராக பச்சைத் தமிழர் காமராசர் ஆட்சிக் காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டதைக் குறைகூறியும்,எதிர்த்தும் அன்றைய உயர்நீதிமன்ற நீதிபதி பாலகிருஷ்ண அய்யர் என்பவர் அமைச்சர்களுக்கு விஷமத்தனமாக உள்நோக்கம் கற்பித்துஎழுதியதைக்கண் டித்து  பேரணியோடு நடை பெற்ற சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டம் அது.

தமிழர்கள்நீதிபதிகளா கக் கூட அல்ல - அரசு வழக்குரைஞராக நியமிக்கப் பட்டால்கூட அக்கிரகாரத்தின் அஸ்தியில்ஜூரம்ஏற்பட்டு விடுகிறது.அன்றுஅரசு வழக்குரைஞராக நியமிக்கப் பட்ட அழகிரிசாமி அவர்கள் உச்சநீதிமன்ற நீதிபதியாக வரும் அளவுக்கு ஆற்றலும், திறமையும் படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குஎதிர்ப்புத்தெரி விக்கும்வகையில்நடை பெற்ற கண்டனப் பொதுக்கூட் டத்தில்தான்  கழகப் பொதுச் செயலாளராகவிருந்த கி.வீரமணிஅவர்கள்ஆவே சப் புயலாக, எதிர்விளைவைப் பற்றிக் கவலைப்படாத சண்ட மாருதமாக கருத்துகளை அள்ளி வீசினார்.

அந்தக் கூட்டத்தில் 135 நிமிடங்கள் தந்தை பெரியார் உரையாற்றினார் என்பது குறிப் பிடத்தக்கதாகும்.

அன்றைக்கு அய்யா எதிர் பார்த்ததுபோல, நமது ஆசிரியர் அவர்கள் இந்த இயக்கத்திற்கு முழுநேரத் தொண்டராக, தலை வராகக் கிடைத்துவிட்டாரே!

என்னே தந்தை பெரியார் அவர்களின் தொலைநோக்கும், கணிப்பும் - பார்வையும்!

- மயிலாடன்.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner