திருப்பனந்தாள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

 

'இந்தியா ஒரு சுதந்திர நாடா? சுதந்திர நாட்டில் ஜாதி இருக்கலாமா? அனுமதிக்க லாமா? இந்திய அரசே, ஜாதி யைப் பாதுகாக்கும் அரசமைப் புச் சட்டப் பிரிவில் திருத்தம் செய்ய இந்தா 15 நாள் வாய்தா எடுத்துக் கொள்' என்று அறிவித் தவர் ஜாதியை ஒழித்து சமத்துவ சமதர்ம சமுதாயம் அமைக்க விரும்பிய அறிவுலக ஆசான் தந்தை பெரியார்.

திருத்தம் செய்யவில்லை என்றால் மனுதர்ம அரசமைப்புச் சட்டப் பிரிவைப் பட்டப் பகலில் பகிரங்கமாகவே கொளுத்து வோம். ஓடி ஒளிந்தல்ல - காவல் நிலையத்தில் பட்டியல் கொடுத்து விட்டுக் கொளுத்துவோம் என்று  நான்கு லட்சம் மக்கள் கூடிய தஞ்சாவூர் மாநாட்டில் கொட்டு மழையில் கொட்டி முழங்கினார் கொள்கை வேந்தர்.

சட்டத்தைத் திருத்தவில்லை. வேறு என்ன செய்தார்களாம்? சட்டத்தைக் கொளுத்தினால் மூன்றாண்டு கடுங்காவல் தண் டனை; கூடுதலாக அபராதமும் உண்டு என்று அபவாதம் பேசியது மத்திய அரசு.

தந்தை பெரியாரா பின் வாங்குவார்? கருஞ்சட்டைத் தொண்டர்களா முன் வைத்த காலை பின் வாங்குவார்கள்?

தயார்! தயார்! சட்டத்தை எரிக்கவும் தயார்! அதற்காக எந்தத் தண்டனையையும் ஏற் கத் தயார் தயார் என்று தோள் தட்டி முன் வந்தனர் திராவிடர் கழகத் தோழர்கள்! தனித் தனி யாக அல்ல - குடும்பம் குடும்ப மாக வந்தனர்.

தந்தை பெரியாரை முன் கூட்டியே முதல் நாளே திருச்சி யில் கைது செய்து விட்டனர் - போராட்டம் கலகலத்து விடும் என்று அரசுக்கு நினைப்பு.

தந்தை பெரியாரையா கைது செய்தீர்கள்? இதோ கிளம்பிற்றுக் காண் கிடைச் சிங்கக் கூட்டமாய் - முகிலைக் கிழித்து வந்த முழு மதியாக முன் வந்தனர் கருஞ்சிறுத்தைச் சேனையினர்!

தந்தை பெரியார் நவம்பர் 26அய் ஏன் தேர்வு செய்தார் தெரியுமா? நவம்பர் 26 (1949) அன்றுதான் இந்திய அரசமைப் புச் சட்டம் முழுமை பெற்று அங் கீகாரம் பெற்ற நாள் - எனவே அந்த நாளைத் தேர்வு செய்தார்.

பத்தாயிரம் தோழர்கள் கொளுத்தினர் - சாம்பலைக் கோட்டைக்கு அனுப்பினர்.

பல ஊர்களில் கைது செய் யாமல் கைது செய்த கணக்கைக் குறைத்துக் காட்டினர்.

கும்பகோணத்தையடுத்த திருப்பனந்தாளில் 139 தோழர் கள் கொளுத்தினர்.  அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத் துச் சென்றனர். அப்பொழுது இரவு 9 மணி. 40 பேர்களை  மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களை கைது செய்ய முடியாது, வீட்டுக்குப் போகலாம் என்றனர்.

ஏன் என்று கேட்டனர்? நீங்கள் கொளுத்தியதை நாங்கள் பார்க்கவில்லை என்றனர் போலீ சார். அப்படியா? உங்கள் முன் இப்பொழுதே கொளுத்து கிறோம் என்றனர். ஏற்றுக் கொள்ளவில்லை போலீசார்.

கைது செய்யப்படாத 99 தோழர்களும் கையொப்பமிட்டு உள்துறை அமைச்சருக்குப் புகார் செய்தனர். ஏன் எங்களைக் கைது செய்யவில்லை என்று கேட்டனர் அந்தப் புகார் மனுவில்?

இப்படிப்பட்ட வீரர்களை எங்கேயாவது கேள்விப்பட்ட துண்டா? சட்டத்தை எரித்தும் தாங்கள் கைது செய்யப்படா ததை அவமானமாகக் கருதிய தன்மான இயக்கக் கருஞ்சட்டைத் தொண்டர்களுக்கு ஈடு இணை ஏது?

- மயிலாடன்

 .
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner