சாய்பாபா பி.சி.சர்க்கார்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்று புட்டபர்த்தி சாய்பாபா பிறந்த நாள் (1926). அவர் மறைந்த பிறகு சீரடி சாய்பாபாவை நிமிர்த்தி நாடெங்கும் பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்துத்துவா வாதிகளுக்கு எப்படியும் ஒரு ‘பாபா’ தேவைப் படுவார்.

அற்புதங்களைச் சொன் னால்தானே  எந்த மதமும் பாமர மக்களின் நம்பிக்கைகளில் வேர்ப் பிடித்து நிற்கும்.

அந்த முறையில் மறைந்த புட்டபர்த்தி சாய்பாபா ஒரு மேஜிக் நிபுணர் - அதனை கடவுள் சக்தி தம்மிடம் இருக்கிறது என்பதற்குப் பயன் படுத்திக் கொண்டவர்.

திராவிடர் கழகத்தில் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடத்தும் தோழர்கள் உண்டு. புட்டபர்த்தி சாய்பாபா செய்து காட்டும் அனைத்து மேஜிக் காட்சிகளையும் மக்கள்முன் செய்து காட்டி எப்படி அதனைச் செய்தோம் (தந்திரமாக) என்ப தையும் விளக்கிக் காட்டுவர்.

பிரபல மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் - உலகப் புகழ் பெற்றவர். கடவுள் அவதாரம் என்றுகூறிமக்களைஏமாற்று வோரின் குறிப்பாக புட்ட பர்த்தி சாய்பாபாவின் ஏமாற்றுத் தனத்தை அம்பலப்படுத்திட விரும்பினார்.

சாய்பாபாவை சந்திக்க அனுமதி கேட்டார். பதில் இல்லை. என்ன செய்தார் தெரியுமா? அசாமைச் சேர்ந்த ஒரு பிரபல பணக்கார வியா பாரி என்றும், ஆஸ்துமா வியாதி தனக்கு இருக்கிறது; அதனை சாய்பாபா குணப் படுத்தவேண்டும் என்றும் கூறி சாய்பாபா ஆசிரமத்துக்குள் நுழைந்துவிட்டார்.

அசாமி மொழியில் பேசி னார்; கடவுள் அவதாரம் என்று சொல்லிக் கொள்ளும் சாய்பாபாவுக்கு மொழி தெரிய வில்லை என்று முதற்கட்டமாக அம்பலப்படுத்தி விட்டார்.

தனது நோயைச் சொல்லி திருநீறு வரவழைத்துக் கொடுங்கள் என்று கேட்டார் பி.சி.சர்க்கார். அவர் அன்று கடைசி பக்தர் என்பதால், திருநீறு தீர்ந்துவிட்டது.

என்ன செய்தார் பாபா? ‘சூ மந்திரக்காளி’ போட்டு பலகாரத் தட்டிலிருந்து கொஞ்சம் சந்த னத்தை கொடுத்தார். (எல்லாம் அதிவேகமும், தந்திரமும்தான்) பி.சி.சர்க்கார் என்ன செய்தார், தன் கையை அசைத்து ஒரு  ரசகுல்லாவை வரவழைத்து சாய்பாபாவிடம் கொடுத்தார்! (பலகார தட்டிலிருந்துதான்) பாபாவுக்கும், சீடர்களுக்கும் கடும் அதிர்ச்சி! கூச்சல் போட் டார்கள்.

‘பாபா அவர்களே, நான் வேறு யாருமல்ல - மேஜிக் நிபுணர் பி.சி.சர்க்கார் நான்தான்!’ என்றார். அவ்வளவுதான், பக்கத்திலிருந்த ஒரு வழியாக உள்ளே ஓடிவிட்டார் சாய்பாபா.

(ஆதாரம்: இம்பிரிண்ட் ஜூன் 1987)

பக்தியும், பாமரத்தனமும் உள்ளவரை எத்திப் பிழைப்ப வர்கள் இருக்கத்தானே செய் வார்கள்.

- மயிலாடன்.
 

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner