எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

எலிக்கறி சாப்பிட்டு விவசாயிகள் போராட்டம்

திருச்சி, டிச.31 தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி திருச்சி ஆட்சியர் அலுவ லகத்தில் நேற்று விவசாயிகள் எலிக்கறி சாப்பிட்டு  போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்துகொள்ள தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் சட்டை அணியாமல் செத்த எலி மற் றும் மண் சட்டியுடன் வந்தனர். சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில், ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தை சுற்றி தரையில் உருண்டு வந்தனர். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி முழக்க மிட்டனர்.

மேலும், எலிகளை வாயில் வைத்து  கடித்தனர். விவசாயிகள் வாயில் எலியை கடித்த படி இருந்ததால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது.இதைத் தொடர்ந்து, 10.30 மணியளவில் ஆட்சியர்  பழனிசாமி, கூட்ட மண்டபத்துக்கு வந்தார்.

அவரை பார்த்த விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையில் ஆட்சி யரின் காலில் விழ முயன்றனர். அதனை ஆட்சியர் தடுத்தார். அதன்பிறகும் சுமார் 2 மணி நேரம் போராட்டம் நடந்தது. இதனால் அங்கு வந்த காவல் துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தி அப்புறப்படுத் தினர். அதன்பிறகு 12.30 மணிக்கு எலிக்கறி தின்னும் போராட்டத்தை கைவிட்டு விட்டு, கூட்ட மண்டபத்திற்குள் சென்று கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

அப்போது, ``பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 நிவாரணம் அளிக்க வேண்டும். அனைத்து விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும். கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் வழங்கவேண்டும். விவசாய உயிரிழப்பை தடுக்க வேண்டும்’’ என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை  வலியுறுத்தி போராட்டம் நடப்பதாக தெரிவித்தனர்.

குறைதீர் கூட்டத்தில், தமிழக விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் சிவ.சூரியன், தமாகா விவசாய அணி புலியூர் நாகராஜன், தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் விசுவநாதன், பாரதீய கிசான் சங்க மாநில அலுவலக செயலாளர் கணே சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினார்கள்..
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner