நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால் கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நிபந்தனைகள் தளர்த்தப்பட்டதால்
கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் அதிகரிப்பு

சென்னை, டிச.29 கடவுச்சீட்டு விண்ணப்பத்துக்கான நிபந் தனைகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சேவை மய்யங்களுக்கு வரும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மதுரை மண்டல கடவுச்சீட்டு அலுவலர் எஸ்.மணிஸ்வரராஜா தெரிவித்தார்.
இது தொடர்பாக செய்தியாளர் களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

கடவுச்சீட்டு விண்ணப்ப தாரர்கள் 1989ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதிக்குப் பிறகு பிறந்தவராக இருப்பின் பிறப்புச் சான்று கட்டாயம் என்பது தற் போது விலக்கிக் கொள்ளப்பட்டுள் ளது. மேலும், விண்ணப்பத்துக் கான இணைப்புகளின் எண்ணிக் கையும் குறைக்கப்பட்டுள்ளது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்  புதிய விதிகளின் படி பிறப்புச் சான்று இல்லாத வர்கள், பிறந்ததேதி குறிப்பிடப் பட்ட பத்தாம் வகுப்பு மதிப் பெண் சான்று, மாற்றுச் சான்று, பான்கார்டு, ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு பத்திரம் ஆகியவற் றைத் தாக்கல் செய்யலாம்.

திருமண, விவகாரத்து சான்று தேவையில்லை...:

ஒற்றை பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும்போது தாய், தந்தை அல்லது காப்பாளர் என யாரேனும் ஒருவரது பெயரைக் குறிப்பிட்டால் போதும்.

திருமணமானவர்கள், விவாகரத்து பெற்றவர்கள் அதற் கான இணைப்புகளை தனித் தாளில் சுய சான்றொப்பத்துடன் அளித்தால் போதுமா னது. ஆதர வற்ற குழந்தைகளுக்கு பிறந்த தேதிக்கான சான்று இல்லாதபட்சத் தில், தங்கியிருக் கும் இடத்தின் கடிதத்தைத் தாக்கல் செய்தால் போதுமானது. தத்தெடுத்த குழந் தைகளுக்கு சுயசான்று அளிக் கலாம்.

மேற்குறிப்பிட்ட சான்றுகள் இல்லாத காரணங்களால் ஏறத் தாழ 3 ஆயிரம் விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. அந் தந்த விண்ணப்பதாரர்கள் புதிய விதிகளின்படி, அதற்குரிய ஆவணத்தைச் சமர்ப்பித்து பயன் பெறலாம்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner