தலைக்கவசம் அணியாதவர்களை நடு ரோட்டில் மறிக்க கூடாது: உயர் அதிகாரிகள் உத்தரவு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தலைக்கவசம் அணியாதவர்களை நடு ரோட்டில் மறிக்க கூடாது: உயர் அதிகாரிகள் உத்தரவு

சென்னை, நவ. 9- தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக் கிள்களை ஓட்டிச் செல்வதா லேயே பெரும்பாலான விபத் துகளில் உயிரிழப்புகள் ஏற்படு கின்றன. இதனை கருத்தில் கொண்டு சென்னை உயர்நீதி மன்றம் தலைக்கவசம் அணியா மல் செல்பவர்கள் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

கடந்த ஆண்டு பிறப்பிக்கப் பட்ட உயர்நீதிமன்றம் உத்த ரவை காவல்துறையினர் முழு மையாக அமல்படுத்தி வரு கின்றனர்.

கடந்த ஆண்டு ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து கட் டாய தலைக்கவசம் திட்டம் செயலுக்கு வந்தது. இதற்கு வாகன ஓட்டிகள் மத்தியில் கடும் எதிர்ப்பும், ஆதரவும் தொடர்ந்து கொண்டே இருக் கிறது. நீதிமன்ற உத்தரவு என் பதாலும், விபத்துகளின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும் போக்குவரத்து காவல் துறையினர் தினமும் வாகன சோதனையில் ஈடுபட்டு வரு கிறார்கள்.
தலைக்கவசம் அணியாதவர் கள் மீது வழக்கு போடப்பட்டு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதுபோன்ற சோதனையின் போது போக்குவரத்து காவல் துறையினர் நடுரோட்டில் நின் றபடியே மோட்டார் சைக் கிளை மறிப்பதால் விபத்துகள் நடைபெறுவதாகவும் குற்றச் சாட்டுகள் கூறப்பட்டன.

இதனை உறுதிபடுத்தும் விதத்தில் கடந்த ஆண்டு கலை ஞர் நகரில், போக்குவரத்து காவல்துறையினர் ஒருவர் திடீரென மறித்ததால், நிலை குலைந்த செல்வம் (19) என்ற வாலிபர் சாலை தடுப்பில் மோதி பலியானார்.

இதே போன்ற ஒரு சம்ப வம் தான் மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்றும் நடந்து விட்டதாக பொது மக்கள் புகார் கூறுகிறார்கள். சூளைபகுதியை சேர்ந்த மோகித் சர்மா, பவன்குப்தா ஆகிய 2 கல்லூரி மாணவர்களும் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்ற போது, சாம்வெஸ்லி தாஸ் என்ற போக்குவரத்து காவல் ஏட்டு அவர்களை தடுத்துள் ளார். அப்போது மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி ஏட்டு சாம்வெஸ்லி தாஸ் மீது மோதி யது. இதில் அவரது வலது கால் முறிந்தது.

மாணவர்கள் 2 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 3 பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கலைஞர் நகர் சம்பவத்தின் போதே, வேகமாக வரும் மோட்டார் சைக்கிள்களை திடீரென மறிக்கக் கூடாது என போக்குவரத்து காவல்துறையி னருக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. நேற்று மெரினா வில் நடந்த விபத்தை தொடர்ந்து போக்குவரத்து காவல்துறையி னருக்கு மீண்டும் அதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இதுபோன்ற சம்பவங்களுக்கு போக்குவரத்து காவல்துறையினரை மட்டும் குறை சொல்லக் கூடாது. வாகன ஓட்டிகளும் ஒரு விதத்தில் இதற்கு காரணம் என்று உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, தலைக் கவசம் அணியாமல் செல்பவர் கள் போக்குவரத்து காவல்துறையினரை பார்த்ததும் பதட்டம் அடைந்து வேகமாக செல்கிறார்கள். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடுகின்றன. எனவே இருசக்கர வாகனங்களில் செல் பவர்கள் உயிரிழப்பை தடுக்க கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.

அதே நேரத்தில் தலைக் கவசம் அணியாமல் வரும் போது தப்பிச் செல்ல நினைக் கக்கூடாது. சட்டப்பூர்வ நடவ டிக்கையை எதிர் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 150 இடங் களில் தினமும் தலைக்கவசம் வேட்டை நடத்தப்படுகிறது. சராசரியாக 2 ஆயிரம் வழக்கு கள் வரை பதிவு செய்யப்படு கின்றன.

இதுபோன்று தலைக்கவச வழக்குகள் போடும்போது காவல்துறையினர் நேரடியாக அபராதம் வசூலிப்பதில்லை. தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் நீதிமன்றப் படி யேறியே அபராதம் செலுத்த வேண்டும்.

நீதிமன்றங்களிலும் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இந்த அபராதத் தொகையை வசூலிக்க நடமாடும் நீதிமன் றங்களும் செயல்படுகின்றன. நடமாடும் நீதிமன்றங்கள் 2 மட்டுமே இருப்பதாக கூறப் படுகிறது. இதனால் நாட் கணக்கில் வாகன ஓட்டிகள் அபராதம் செலுத்த காத்துக் கிடக்க வேண்டிய நிலையும் உள்ளது. இதனை தவிர்க்க நடமாடும் நீதிமன்றங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner