தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக போனதற்கு மத்திய அரசே காரணம்! திருப்பூரில் பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாக போனதற்கு மத்திய அரசே காரணம்!
திருப்பூரில்  பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு

திருப்பூர், நவ.8- தமிழகத்தில் பல லட்சம் ஏக்கர் நிலங்கள் தரிசாகப் போன தற்கு மத்திய அரசே காரணம் என்று திருப்பூரில் பி.ஆர்.பாண் டியன் குற்றஞ்சாட்டினார்.

காவிரி நதி நீர்  பிரச்சி னையில் கர்நாடகாவிற்கு ஆதர வாக அரசியல் லாபநோக்கோடு தமிழகத்திற்கு துரோகம் இழைத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கையைக்கண்டித்தும், உச்சநீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத் தையும், காவிரி நீர்ப்பங்கீட்டு ஒழுங்காற்றுக் குழுவையும் உடன் அமைத்திட மத்திய,

மாநில அரசுகளை வலியுறுத்தி 05.11.2016 முதல் 11.11.2016 வரை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங் கிணைப்புக்குழு சார்பில் கன் னியாகுமரி காந்தி மண்டபம் தொடங்கி சென்னை ஆளுநர் மாளிகையில் நிறைவு பெறும் மக்கள் சந்திப்பு பரப்புரைப் பயணம்  07.11.2016 திங்கள் மதியம் 1.00 மணியளவில் திருப் பூரை வந்தடைந்தது.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில்  நடைபெற்ற பரப்புரை பிரச்சாரத்தில் தமிழக அனைத்து விவசாயிகள் சங் கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண் டியன் அவர்கள்  கூறியதாவது

தமிழகத்தில் காவிரி பாசன விவசாயப்பகுதிகளில் பல லட் சம் ஏக்கர்  விவசாயம் செய்ய முடியாமல் தரிசாக போனதற்கு முழுப்பொறுப்பையும் காவிரி பிரச்சினையில் கர்நாடகாவிற்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசே ஏற்கவேண்டும். மத்திய பிஜேபி அரசு தொடர்ந்து விவ சாயிகளிடம் விரோதப்போக்கை கடைப்பிடிக்கின்ற வகையில் விவசாயிகளின் விளை நிலங் கள் வழியாக எரிவாயு குழாயை கொண்டு செல்வதை தடை செய்து தேசிய நெடுஞ்சாலை யின் வழியாக கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

அவினாசி- அத்திக்கடவு திட் டத்தை மத்திய,மாநில அரசுகள் விரைந்து நிறைவேற்ற வேண் டும் சிறுவாணி அணையின் குறுக்கே அணை கட்டும் கேரள அரசின் முயற்சிக்கு சட்டரீதியிலான தடை உத்தரவை மத் திய அரசு பிறப்பிக்க வேண்டும்.

இப்பயண முடிவில் காவிரி நதி நீர்ப்பிரச்சினையில் உச்சநீதி மன்றத்தீர்ப்பு பின்பற்றப்பட வும், விவசாயிகளின் வாழ்வா தாரப் பிரச்சனைகள் குறித்தும் தமிழக ஆளுநரிடம் மனு கொடுக் கவுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப் புக்குழுவின் கொங்கு மண்டல தலைவர் எம்.கே.டி.பொன்னு சாமி, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்ளிட்ட விவசாய சங்கங் களின் பிரதநிதிகள் உடனிருந் தனர். பல்லடம் மற்றும் அவி னாசி பகுதிகளிலும் இப்பரப் புரை பயணம் நடைபெற்றது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner