தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான திருத்திய வரையறை இன்று வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தகவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான திருத்திய வரையறை இன்று வெளியிடப்படும்: டிஎன்பிஎஸ்சி தகவல்


சென்னை, நவ.7
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கான திருத்திய வரை யறை இன்று (நவ.7) வெளியிடப் படும் என்று அதன் தலைவர் அருள்மொழி தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு துறைகளில் இளநிலை உதவியாளர், வரை வாளர், நில அளவர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் ஆகிய பிரிவுகளில் காலியாகவுள்ள 5,451 பணியிடங்களுக்கான குரூப்-4 தேர்வை டி.என்.பி.எஸ்.சி. ஞாயிற்றுக் கிழமை நடத்தியது. இதில், தமி ழகம் முழுவதும் 5,296 மய்யங் களில் 15 லட்சத்துக்கும் அதிகமா னோர் தேர்வெழுதினர்.

இந்த நிலையில், சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அமைந்திருந்த தேர்வு மய்யத்தை அருள்மொழி ஆய்வு செய்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:-

இந்தத் தேர்வை எழுத, முன்பு எப்போதும் இல்லாத அள வுக்கு 15 லட்சத்து 64 ஆயிரத்து 471 பேருக்கு அனுமதி வழங்கப் பட்டது. இவர்களில் 2,291 பேர் மாற்றுத்திறனாளிகள். விண்ணப் பித்தவர்களில் 80 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்றனர்.

இந்த வாரத்தில் டி.இ.ஒ. தேர்வு முடிவு:

டி.என்.பி.எஸ்.சி. சார்பில் கடந்த 12 மாதங்களில் மட்டும் 15 எழுத்துத் தேர்வுகளும், 13 நேர்முகத் தேர்வுகளும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளன.

2009, 2012, 2014 ஆகிய ஆண்டு களில் அறிவிக்கை செய்யப்பட்டு, பல்வேறு காரணங்களால் தாமத மாகி வந்த உடற்கல்வி இயக்குநர், மோட்டார் வாகன ஆய்வாளர், நூலகர் ஆகிய மூன்று போட்டித் தேர்வுகளுக்கான முடிவுகள் மாதங்களில் வெளியிடப்பட்டிருக் கின்றன.

2014-இல் அறிவிக்கை செய்யப் பட்ட 11 காலிப் பணியிடங் களுக்கான மாவட்ட கல்வி அலுவலர் பணியிடத்துக்கானத் தேர்வு முடிவு மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த வாரத்துக்குள் இந்த முடிவும் அறிவிக்கப்பட்டுவிடும்.

10 தேர்வுகளுக்கான முடிவு:

மேலும், 2016 ஜூன் மாதம் வரை நடந்து முடிந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான தேர்வைத் தவிர, மற்ற அனைத்துத் தேர்வுகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இன் னும் 10 தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.இவை அனைத்தும் 2016 ஜூன் மாதத்துக்குப் பிறகு நடத்தப்பட்டவையாகும்.

இந்த 10 தேர்வுகளுக்கான முடிவுகளை விரைவில் வெளியிடுவதற்கான பணிகளும், தீவிரப்படுத்தப் பட்டுள்ளன.

இதற்கிடையே, உயர்நீதிமன்ற பணியாளர்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தப்பட்டு, முடிவுகளும் வெளியிடப்பட்டுவிட்டன.

வரும் 14, 15 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப் பட்டு, நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்பட உள்ளன.

திருத்திய வரையறை
இன்று வெளியீடு

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு களுக்கு சில வரையறைகள் வகுக்கப்பட்டு பின்பற்றப்பட்டு வருகின்றன. இதில் இப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் திருத்திய வரையறை டி.என்.பி.எஸ்.சி. இணைய தளத் தில் திங்கள்கிழமை (நவ.7) பதி வேற்றம் செய்யப்படும். இவற் றைத் தேர்வர்கள் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.

இனி அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும், இந்த திருத்திய வரையறையே பின்பற்றப்படும்.

நவம்பர் 9-இல் குரூப்-1 தேர்வு அறிவிக்கை  

துணை ஆட்சியர், துணை காவல் கண்காணிப்பாளர் உள் ளிட்ட பணிகளில் 81 காலி இடங் களுக்காக 2016 ஆம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிக்கை நவம்பர் 9-இல் வெளியிடப்பட உள்ளது என்றார் அவர்.



.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner