சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிப்பு செலவு ரூ.50 லட்சமாம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை மவுலிவாக்கம் 11 மாடி கட்டடம் இடிப்பு செலவு  ரூ.50 லட்சமாம்

சென்னை, நவ.5 சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையிலிருந்த 11 அடுக்குக் கட்டடம் புதன் கிழமை மாலை வெடிபொருள் வைத்து 3 விநாடிகளில் தகர்க்கப் பட்டது. 3 மாதங்கள் நடைபெற்ற மவுலி வாக்கம் கட்டட இடிப்பு பணிக்கு ரூ.50 லட்சம் செலவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கட்டடத்தை தரைமட்டமாக்கும் பணியில் ஈடுபட்ட திருப்பூரைச் சேர்ந்த மேக்லிங்க் இன்ப்ரா புராஜக்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பி.பொன் லிங்கம் கூறிகையில், கட்ட டத்தை தகர்க்கும் பணி எங்கள் நிறுவனத்திடம் ஒப்படைக்கப் பட்ட பின்னர் 3 மாதங்கள் 3 குழுவினர் மூலமாக முதலில் கட்டத்தின் காங்கிரீட் தரம், இரும்பு கம்பிகள் போன்ற கட் டடத்துக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களின் தரத்தை ஆய்வு செய்தோம்.   பின்பு கட்டடத் தின் தன்மைக்கு ஏற்ப வெடி மருந்துகளை பயன்படுத்தி கட் டடம் முழுவதும் வெடி மருந்து பொருட்கள் நிரப்பப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பாக இடிக்கப்பட்டதை அடுத்து நாங்கள் திட்டமிட்டபடியே கட்டடம் அதே நேர்கோட்டில் சரிந்து விழுந்தது. இந்த கட்ட டம் தகர்ப்பு பணிக்கு ரூ.50 லட்சம் செலவாகி உள்ளது.

கடந்த 14 ஆண்டுகளாக இது தொடர்பான பணிகளை செய்து வருதாகவும், முதன் முதலாக 2003-ஆம் ஆண்டு செங் கோட்டையில் ஒரு கட்ட டத்தை இதே முறையில் தகர்த் ததாகவும் கூறினார்.

மேலும், திருப்பூர் உள்பட தமிழ்நாட்டில் 6 கட்டடங் களையும், மும்பையில் 30 கட்டடங்களையும் தகர்த்து உள்ளதாகவும், தற்போது மும் பையில் 22 மாடி கட்டடத்தை தகர்ப்பதற்கான ஆய்வுப்பணி யில் ஈடுபட்டு வருவதாகவும் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner