போலி நெய், டால்டா தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

போலி நெய், டால்டா தயாரிக்கும் தொழிற்சாலை கண்டுபிடிப்பு

திருமலை, நவ.6 சித்தூரில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வந்த போலி நெய் மற்றும் டால்டா தயா ரிக்கும் தொழிற்சாலை கண்டு பிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக 7 பேரை கைது செய்த காவல்துறையினர் ரூ.1.50 கோடி மதிப்பிலான இயந்திரங்கள் மற்றும் மூலப் பொருட்களை பறிமுதல் செய் துள்ளனர்.

ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள ஜண்டா தெருவில் போலி நெய் தயாரிக்கும் தொழிற் சாலை இயங்கி வருவதாக அப்பகுதி பொதுமக்கள் சித்தூர் 2ஆவது நகர காவல் நிலை யத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறை ஆய்வாளர் வெங்கடப்பா, உதவி ஆய்வாளர் சுனில் குமார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கிடங்கில் நவீன இயந்திரங்களுடன் நெய், டால்டா தயாரிக்கும் தொழிற் சாலை இயங்கிவந்தது தெரிந்தது.

அங்கு சோதனை செய்த போது ஒரு லிட்டர், அரை லிட்டர் பாக்கெட்டுகளில் நெய் தயாரித்து அடைக்கப்பட்டு விற்பனைக்காக அட்டை பெட் டிகளில் அடுக்கி வைக்கப்பட்டி ருந்தது. மேலும் இயந்திரத்தில் நெய் மற்றும் டால்டா பாக் கெட்டுகளில் அடைக்கப்பட்டு சீல்வைக்கும் பணியில் சிலர் ஈடுபட்டிருந்தனர். காவல்துறையினரைக் கண்டதும் அவர்கள் தப்பிக்க முயன்றனர்.

ஆனால் அவர்களை காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முரளி(44) என்பவர் கடந்த 5 ஆண்டுகளாக போலி நெய், டால்டா தயாரித்து விற் பனை செய்துவந்தது தெரிய வந்தது.

மேலும் விசாரணையில், மாட்டுக்கொழுப்பு, குருடா யில், பாமாயில் உட்பட வேறு சில ரசாயனங்களை கலந்து போலி நெய் மற்றும் டால்டா தயாரித்து அதை பூதலபட்டு மண்டலம், யாதமரி மண்ட லம், அய்ராலா, தவனம்பள்ளி, குடிபாலா, காலசமுத்திரம், கங்காதர நயல்லூர், பெனுமூர் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் உள்ள கடைகளில் விற்பனை செய்துள்ளனர்.  ஒரு லிட்டர் நெய் ரூ.180 என கடைக்காரர் களுக்கு கொடுத்துள்ளனர்.

அவர்கள் அதை ரூ.280க்கு விற்பனை செய்துள் ளனர். ஒரு லிட்டருக்கு ரூ.100 லாபம் கிடைக்கவே கிராமப் பகுதி கடைக்காரர்களும் இந்த நெய்யை அதிகளவில் விற்பனை செய்துள்ளனர்.

ஒரு நாளைக்கு 150 லிட்டர் நெய் தயரிக்கப்பட்டு கடை களுக்கு விற்பனை செய்யப் பட்டுள்ளது. இதுதவிர ஆந்திர மாநிலம் முழுவதும் கிராமப் பகுதிகளில் விற்பனை செய் துள்ளனர். தெலங்கானா மாநி லத்திலும் விற்பனை செய்துள் ளனர். சித்தூர் சந்தப்பேட் டையை சேர்ந்த வெங்கடேஷ் விற்பனை மேலாளராக இருந்து உள்ளார். இதையடுத்து முரளி, வெங்கடேஷ் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் ரூ.1 கோடி மதிப்பிலான இயந்தி ரங்கள், ரூ.5 லட்சம் மதிப்பி லான 80 லிட்டர் போலி நெய், டால்டா பாக்கெட்டுகள் மற் றும் அதற்கான மூலப் பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner