கடும் நெருக்கடியில் சிக்குகிறது இந்தியா 70 லட்சம் வேலைகள் காணாமல் போகும் அபாயம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கடும் நெருக்கடியில் சிக்குகிறது இந்தியா
70 லட்சம் வேலைகள்
காணாமல் போகும் அபாயம்

புதுடில்லி, நவ.2- இந்தியாவில் 2050ஆம் ஆண்டுக்குள் 7 மில் லியன் (70 லட்சம்) வேலைகள் காணாமல் போகும் அபாயம் உள்ளதாக புதுடில்லியை மய்ய மாகக் கொண்டு இயங்கும் பிராஹார் என்ற நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு துறைகளில் உள்ள 550 வேலைகள் காணாமல் போகின்றன. அதாவது, அந்த வேலைகளில் இருந்தவர்கள் நிர்க்கதியாக விடப்படுகிறார்கள். வேறு யாருக்கும் அந்த வேலை கிடைப்பது இல்லை. அந்த பணியிடமே ஒழிக்கப்படுகிறது.

கடந்த நான்கு ஆண்டுகளாக இந் நிலை வேகமாகத் தொடர் கிறது. இதனால் இந்தியாவில் உள்ள பல்வேறு துறைகளிலும் உள்ள வேலைவாய்ப்புகள் மிகப் பெருமளவில் சுருங்கிவிடும் என ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலை தொடருமேயானால் வரும் 2050 ஆம் ஆண்டிற்குள் 7 மில்லியன் வேலைகள் காணாமல் போகும் இது இந்திய மக்கள் சமூகங்களில் பல்வேறு மோச மான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அந்தஆய்வு எச்சரிக்கை செய்கிறது. வேலை வாய்ப்பற்ற ஆபத்தை தெளிவாக இது எடுத்துக்காட்டுகிறது.

விவசாயிகள், சில்லறை விற் பனையாளர்கள், ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் கட்டு மானத் துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் பெருமளவில் வேலையிழப்பார்கள், இந்திய மக்கள் இதற்குமுன் எதிர்கொண் டிராத வாழ்வாதாரப் பிரச்சினை யாக இதுமாறும்.

தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள தரவுகள் 2016 இன் அடிப்படையில், இந்தியா வில் 2015ஆம்ஆண்டு 1.35 லட்சம் வேலைகள் மட்டுமே உருவாக்கப் பட்டுள்ளன.

ஆனால் கடந்த 2013ஆம் ஆண்டோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இது மிக மிகக் குறைவு ஆகும். 4.19லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

2011ஆம் ஆண்டில் 9 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள் ளன என்று அதிகாரப்பூர்வ தரவு கள் வெளிவந்துள்ளன.

இந்தப் பின்னணியில், பிராஹார் ஆய்வு நிறுவனம் மிக ஆழமான பகுப்பாய்வின் அடிப் படையில் தரவுகளை வெளியிட் டுள்ளது.
இந்த ஆய்வு மிகத் தெளிவாக இந்தியாவில் வேலை உரு வாக்கம் குறித்த உண்மையை போட்டுடைத்திருக்கின்றது.

வேலை வாய்ப்பற்ற நிலை யும் இருக்கும் வேலைகளை மெல்ல மெல்ல இழந்து வரு வதும் ஆபத்து நிறைந்த எதிர் காலத்தை சுட்டிக்காட்டுகிறது. வேலைவாய்ப்புகளை வழங்கி வந்த மிகப்பெரிய துறைகள் மிகப் பெரும் சரிவை எதிர்நோக்கி யுள்ளன..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner