பஞ்சாலையில் பட்டாசு தீப்பொறி விழுந்து விபத்து: பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து நாசம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பஞ்சாலையில் பட்டாசு தீப்பொறி விழுந்து விபத்து:
பல லட்சம் ரூபாய் மதிப்பிலான

பஞ்சு பேல்கள் எரிந்து நாசம்

திருப்பூர், அக்.31 திருப் பூரில் பட்டாசு தீப்பொறி விழுந்து பஞ்சாலையில் ஏற் பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பஞ்சு பேல்கள் எரிந்து நாசமானது.

இதுபற்றிய விவரம் வரு மாறு:

திருப்பூர் மண்ணரை பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 55). இவர் திருப்பூர் ஊத்துக்குளி ரோடு கூலிப்பாளையம் அருகே உள்ள குளத்துப்பாளையம் பகுதியில் பஞ்சாலை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் பஞ்சாலையில் பஞ்சு இருப்பு வைத்து இருந்த குடோன் பகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இதை பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் உடனே திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

பஞ்சு பேல்கள் எரிந்து நாசம்

அதற்குள் பஞ்சு முழுவதும் எரிந்து நாசமானது. இதைத் தொடர்ந்து, அவர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை மேலும் பரவாமல் தடுத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பஞ்சு மற்றும் பஞ்சு பேல்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.

தீயணைப்புத்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், அந்த பகுதியில் தீபாவளியை கொண்டாட யாரோ ஒருவர் பட்டாசு வெடித்த போது, ஏதோ ஒரு தீப்பொறி பஞ்சாலையில் விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner