தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் நவ. 1 முதல் அமல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம்
நவ. 1 முதல் அமல்

சென்னை, அக்.30 தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நவ., 1 தேதி முதல் தமிழகத்தில் அமல் படுத்தப்படும்‘ என, மாநில அரசு அறிவித்துள்ளது.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அப்படியே நடை முறைப்படுத்தினால், தமிழகத் தின் மொத்த மக்கள் தொகை யில், 50.55 சதவீதம் பேர் மட்டுமே அரிசி பெற தகுதி உடையவர்களாக இருப்பர். மத்திய அரசு, வறுமைக் கோட் டிற்கு மேலே உள்ளவர்களுக் கான அரிசி ஒதுக்கீட்டு கொள் முதல் விலையை, நவ., 1 முதல் மாற்றி அமைத்துள்ளது. இதனால், தமிழக அரசுக்கு தற்போது ஏற்படும் செலவினத் தொகையான, 2,393 கோடி ரூபாய்க்கு மேல் கூடுதலாக, ஆண்டுக்கு, 2,731 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும்.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, தமிழகத்திற்கு ஏற்படவுள்ள பாதகங்களை நன்கு உணர்ந்து, மத்திய அரசின் சட்டம் எவ் வாறாக இருந்தாலும், தற்போது நடை முறையில் உள்ள அனை வருக்கு மான பொது வினியோக திட்டத் தில், அரிசி குடும்ப அட்டைதாரர் களுக்கான அரிசி ஒதுக்கீடு, தொடர்ந்து குறையின்றி வழங்கப் பட வேண்டும் என, முதல்வர்  அறிவுரை வழங்கினார். அதன் அடிப் படையில், தமிழக அமைச் சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் விபரம்: தேசிய உணவு பாதுகாப்பு சட்டம், நவ., 1 முதல் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் படும்.

* சட்டத்தை அமல்படுத்தி னாலும், குடும்ப அட்டைதாரர் களுக்கு வழங்கப்படும் அரிசி, தொடர்ந்து இலவசமாக வழங் கப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டப்படி, ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் இருந்தால், மாதம் அய்ந்து கிலோ அரிசி மட்டுமே வழங்க இயலும். ஆனால், தமிழகத்தில் தற் போது, 12 கிலோ அரிசி வழங் கப்படுகிறது; அது தொடர்ந்து வழங்கப்படும்.

* ஒரு குடும்பத்தில் இருவர் இருந்தால், தற்போது வழங்கப் படும், 16 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும்.

* மேலும் ஒரு குடும்ப அட்டைக்கு, மாதம் ஒன்றுக்கு, 20 கிலோ அரிசி என, தற்போது நடைமுறையில் உள்ள உச்ச வரம்பின்றி, ஒவ்வொருவருக் கும், அய்ந்து கிலோ வீதம் உச்ச வரம்பின்றி வழங்கப்படும்.

* உதாரணமாக, அய்ந்து உறுப்பினர்கள் உள்ள குடும் பத்திற்கு, தற்போது மாதம், 20 கிலோ அரிசி வழங்கப்பட்டது. இனி, 25 கிலோ அரிசி வழங் கப்படும்.

* அந்தியோதியோ அன்ன யோஜனா திட்டப் பயனாளி களுக்கு தற்போது வழங்கப் படும், 35 கிலோ அரிசி, தொடர்ந்து இலவசமாக வழங் கப்படும்.

* தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை செயல்படுத்துவதா லும், தற்போது நடைமுறையில் உள்ள அனைவருக்குமான பொது வினியோக திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்துவதா லும், தமிழக அரசுக்கு, ஆண் டுக்கு, 1,193 கோடி ரூபாய் செலவாகும்.

தற்போது செயல்படுத்த ஆணையிடப்பட்டுள்ள இந்த உணவு பாதுகாப்பு சட்டம், அனைவருக்கும் உணவு பாது காப்பை வழங்கும் சிறப்பான திட்டமாக, இந்தியாவில் வேறு எந்த மாநிலங்களிலும் செயல் படுத்தப்படாத திட்டமாக அமையும்.

முன்னுரிமை குடும்பங் களுக்கு மட்டுமே அரிசி வழங்க வேண்டும் என, தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் வலியுறுத் திய போதும், தமிழகத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி வழங்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டு உள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner