கல்வி கற்றலில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

கல்வி கற்றலில் தொழில்நுட்ப சாதனங்களின் பயன்பாடுகள்

சென்னை, அக்.25 ஒட்டுமொத்த கல்வியியல் வளர்ச்சி மேம் பாட்டுக்காக அதன் இடைவிடாத முயற்சியில், கே-12 கல்வியில் முன்னோடியும், முன்னணி கல்வித் தீர்வு வழங்கும் நிறு வனமுமான நெக்ஸ்ட் எஜுகே ஷன்  நிறுவனம் அக்டோபர் 22 அன்று சென்னை, தி ரெஸி டென்ஸி டவர்சில் முதல்வர்கள் மாநாட்டை நடத்தியது.

ஆசிரியரை மய்யப்படுத்துவதிலிருந்து மாணவரை மையப் படுத்தும் கற்றல் முறைக்கு மாற்றம் பற்றிய ஒரு நாள் பயிற்சி வகுப்பு, பங்கேற்கும் பள்ளி முதல்வர்களுக்காக வடிவமைக் கப்பட்டுள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பு சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்தல், கற்றல் செயல் பாட்டில் மாணவர்களின் ஈடு பாட்டை உறுதிப்படுத்துவதற் கான புதிய தொழில்நுட்ப உத்திகளை மேம்படுத்துதல், ஆராய்ச்சியும் மேம்பாடும், மற் றும் கல்வித் துறையில் கல்வித் தொழில்நுட்ப சாதனங்களின் பிற நடைமுறை பயன்பாடுகள் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துகிறது. கல்வித் தொழில் நுட்பம் பற்றிய கலந்தாலோசனை நிகழ்ச்சிகளில் சிறப்புத் திறன் பெற்றுள்ள அய்அய்டி மும்பை புல உறுப்பினர் பேராசிரியர் சஹானா மூர்த்தி இந்தப் பயிற்சி வகுப்பை நடத்தினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner