பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் "ஆட்சி மன்றங்களில் அறிஞர் அண்ணா" - சிறப்புக் கருத்தரங்கம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பெரியார்  மணியம்மை பல்கலைக்கழகத்தில்   
"ஆட்சி மன்றங்களில் அறிஞர் அண்ணா" - சிறப்புக் கருத்தரங்கம்

வல்லம் அக்-24 பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் பகுத்தறிவாளர் மன்றமும் இணைந்து "ஆட்சி மன்றங்களில் அறிஞர் அண்ணா" எனும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம்  22.10.2016 சனிக்கிழமை காலை 11மணி முதல் 12.30 மணி வரை பெரியார் அறிவு மய்யத்திலுள்ள ஹாக்கின்ஸ் அரங்கில் நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் முனைவர் க. அன்பழகன் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் மன்றத்தின் தலைவர் தகவல் தொழில் நுட்பத்துறை உதவிப் பேராசிரியர் பா.இளங்கோவன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொடக்க உரையாற்றினார்.

கணினி பயன்பாட்டியல் அறிவியல் துறை முதலாமாண்டு மாணவி செ.மது மிதா வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக வருகைதந்த பகுத்தறிவு இலக்கியச் சொற்பொழி வாளரும் -தொழில் முனைவோருமான காரைக்குடி பா.கணேசன் அவர்கள் "ஆட்சி மன்றங்களில் அறிஞர் அண்ணா" எனும் தலைப்பில் சிறப்பானதொரு ஆய்வுச் சொற்பொழிவை நிகழ்த்தினார்.

பங்கேற்ற முதலாமாண்டு கணினி பயன்பாட்டியல் அறிவியல் துறை மாணவர்கள் ஆர்வமுடன் செவி மடுத்தனர். இறுதியில் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யத்தின் உதவிப் பேராசிரியர் முனைவர் த.ஜெயக்குமார் நன்றியுரையாற்றினார்.

சிறப்பு விருந்தினர் பா.கணேசன் அவர்கள் தமது சிறப்புரையில் தந்தை பெரியார் அவர்களையும் அறிஞர் அண்ணாவையும் ஒப்பிட்டும் அறிஞர் அண்ணா அவர்களின் கருத்தாழம் மிக்க வியத்தகு ஆங்கிலப் புலமையையும் அவர் ஆற்றிய நாடாளு மன்ற ஆங்கில உரைகளையும் இருமொழியில் கலந்து மாணவர்கள் ரசிக்கும்படி எடுத்துரைத்தார். மேலும் அறிஞர் அண்ணா அவர்களால் நிறைவேற்றப்பட்ட பெரியாரின் சிந்தனைகளையும் பட்டியலிட்டுக் காட்டி தனது உரையை நிறைவு செய்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner