பெரியாரை (சு)வாசிக்க வாருங்கள்! - கி.வீரமணி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இன்றைக்குக்கூட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இருக்கிறதே, அதனுடைய அரசியல் வடிவம்தான் பா.ஜ.க.; அதனுடைய கொள்கைகளில் மிக முக்கியமான ஒன்று எதுவென்று சொன்னால், வருணாசிரம தரும முறை பாதுகாக்கப்படவேண்டும் என்பதுதான்.

தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்று சொல்லி, பார்ப்பதற்கு ஒரு மயக்கத்தைத் தரக்கூடிய பிரச்சாரத்தை செய்கிறார்கள்.

எனவே,இதில்இன் னொன்றையும் கவனிக்க வேண்டும் இன்றைய இளை ஞர்கள். அந்தக் காலத்தில், காந்தியாருடைய தீண்டாமை ஒழிப்பிற்கும், ஆர்.எஸ்.எஸ். சின் தீண்டாமை ஒழிப்பிற்கும்,

காந்தியாரின் வருணாசிரம தரும ஆதரிப்பிற்கும், ஆர்.எஸ்.எஸ்.சின் வருணா சிரம தருமத்தை கட்டிக் காப்பாற்றுகின்ற முயற்சிக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.

தந்தைபெரியாரும்,அண் ணல் அம்பேத்கர் அவர்களும் தான் ஓங்கி அடித்தார்கள்- இந்து மதம் இருக்கின்ற வரையில், ஜாதி இருக்கும் - ஜாதி இருக்கும் வரை  - தீண்டாமை இருக்கும் என்று.

படிப்பு பல பேருக்குக் கிடைக்கும் என்று சொல்லக் கூடிய பொதுநோக்கு இருக் காது. பெண்கள் சமம் என்று சொல்லக்கூடிய அந்த வாய்ப் பும் மறுக்கப்படத்தான் செய் யும்.

ஆகவே, அந்த வகையில் நாம்பார்க்கும்பொழுது, எதை நாம் மிக முக்கிய மாக கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சொன்னால்,

இந்து மதத்தை சீர்திருத்தி, அதன்மூலம் எல்லோரையும் சமமாக்கவேண்டும் என்பது - ஒன்று புரியாத்தனமாக இருக்கவேண்டும். அல்லது மற்றவர்களை ஏமாற்றக்கூடிய சூழ்ச்சிகளில் மிக முக்கியமான ஒன்றாக இருக்கமுடியும்.

எனவேதான், தந்தை பெரியாருடைய அணுகு முறையும், அண்ணல் அம் பேத்கர் அவர்களுடைய அணுகுமுறையும் உண்மை யான மனிதத் தன்மை  - உரிமையைப் பற்றியதாகும்.

உண்மையாகவே ஜாதி முறை ஒழிந்தால், தீண்டாமையை தனியே பேசவேண்டிய அவசியமே கிடையாது.

அந்த அடிப்படையில்தான், 1957 ஆம் ஆண்டில்கூaaட தந்தை பெரியார் அவர்கள் தீண்டாமை என்ற அந்த சொல்லுக்குப் பதிலாக அர சியல் சட்டத்தில் ஜாதியை ஒழிக்க முன்வரவேண்டும் என்று வலியுறுத்தினார்.

சுதந்திர நாட்டில் ஏன் சூத்திரன்? என்று கேட்டார்; சுதந்திர நாட்டில் ஏன் பஞ்சமன்? என்று கேட்டார். இந்த நாட்டில்தானே, ஒருவன் பிறக்கும்போதே, பார்ப்பானாக -உயர்ஜாதியாகவும்,பறை யனாக- கீழ்ஜாதியாகவும் - ஒருவன் தொடக்கூடியவ னாகவும், இன்னொருவன் தொடக்கூடாதவனாகவும் இருக்கிறான் என்று சொன் னார்.

எனவே,மிகசாமர்த்திய மான, திட்டமிட்ட ஒரு சூழ்ச்சிப் பொறியை அவர் கள் எவ்வளவு அழகாக - லாவகமாக இதில் ஏற்படுத் தினார்கள்.

அய்யா அவர்கள் சொன்னதைப்போல,

எத்தனையோ ‘ஜீவாத் மாக்கள்’ வந்திருக்கிறார்கள் இந்த நாட்டில்; எத்தனையோ ‘பரமாத்மாக்கள்’ தோன்றி யிருக்கிறார்கள்.

ஆனால், அந்தப் ‘பர மாத்மாக்கள்’ எல்லாம், ‘ஜீவாத்மாக்கள்’ எல்லாம் இந்தப் பேதத்தை நிலை நாட்டுவதற்காகத்தான் இந்து மதத்திலேயே உருவாக்கப் பட்டார்கள்.

உதாரணமாக, பகவத் கீதையைத்தான் இந்து மதத் தின் அதிகாரபூர்வமான நூல் என்று சொல்வார்கள்.

ஆனால், அந்த அதி காரபூர்வமான நூலில், என்ன முக்கியமான கருத்து?

சூத்திரன் என்று சொல்லக் கூடியவார்த்தையைதெளி வாக எழுதி வைத்திருக்கிறார் கள்.

‘‘சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்’’ என்று தெளிவாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.

நான்கு ஜாதி - என்னால் உருவாக்கப்பட்டது என்று கூறுகிறது கீதை.

சரி,கிருஷ்ணன்சொல் கிறான்,  அவனால் உருவாக் கப்பட்டது அநீதியாக அமைந்திருக்கிறது என்பது உணர்த்தப்பட்ட பிறகு - அதனை மாற்ற முடியுமா என்று கேட்டால்,

கிருஷ்ணனே சொல் கிறான்,

‘‘நானே நினைத் தால்கூட, அந்த சுதர்மம் என்று சொல்லக்கூடிய வருணாசிரம தருமத்தை மாற்றிவிட முடியாது.''

(கீதை அத்தியாயம் 4;  சுலோகம் 13)

எனவே, அது இருக்க வேண்டும். சூத்திரர்களும், வைசியர்களும், பெண்களும், பாவ யோனி யில் இருந்து பிறந்தவர்கள் என்றுபிறப்பின்அடிப் படையிலேயே இழிவுபடுத் தப்பட்டு உள்ளனர்.

(கீதை அத்தியாயம் 9;  சுலோகம் 32)

எனவே, இரண்டு அணி கள்!

ஒன்று, இந்து மதம் என்கிற பார்ப்பன வேத மதத்தை வைத்துக்கொண்டு மனிதநேயத்திற்கு, மனித உரிமைகளுக்கு, சமத்துவத் திற்கு, சுயமரியாதைக்கு, பகுத்தறிவுக்கு விரோதமாக இருக்கின்ற சனாதன கூட்டம், உயர்ஜாதி கூட்டம்!

இன்னொரு பக்கம், அதனை எதிர்த்து அழிக்க வேண்டும் என்பவர்கள், இந்து மதத்தை அறவே அழித்தால் ஒழிய, அல்லது இந்து மதத்தால் ஒரு பயனும் இல்லை என்பதை உணர்ந்துகொண்டு,  அதிலே ஒருபோதும் சமூக நீதி ஏற்படாது. எனவே, அந்த விஷ விருட்சத்தை அடியோடு வீழ்த்தினால் ஒழிய - வேறு வழியில்லை என்பதை தெளிவாக எடுத்துச் சொல்லி, அதனை எதிர்த்துப் போராடக்கூடிய போர் வீரர் களாக தந்தை பெரியார் அவர்கள், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் இரண்டு பேருமே ஒன்றைச் சொன்னார்கள்.

‘நான் இந்துவல்ல!’ என்று பெரியாரும் சொன்னார்; அம்பேத்கரும்  சொன்னார்.

நான் இந்துவல்ல என்று இந்தியாவிலேயே பிரகட னப்படுத்த துணிந்தவர் தந்தை பெரியார், 1925, 1926 ஆம் ஆண்டுகளிலேயே சொன்னார்.

இந்து மதம் என்பது இந்த மண்ணினுடைய சரித்திரபூர்வமான ஒன்றா? அதுவும் இல்லை என்பதை ஆதாரங்கள் தெளிவாக உணர்த்தும் என்றும் அறுதி யிட்டுச் சொன்னார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner