பெரியாரை (சு)வாசிக்க வாருங்கள்! - கி.வீரமணி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்திய நாட்டிலே இருக்கின்ற ஜாதி முறை - வருணாசிரம தருமம் என்பது மிகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டு இருக்கின்றது.

குறிப்பாக சொல்லப்பட வேண்டுமானால், தந்தை பெரி யாரும், பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களும் மிகத் தெளிவாக ஒன்றைக் குறிப்பிட்டார்கள்.

வருணாசிரம தரும முறை என்று நான்கு ஜாதிகளாக ஆக்கியதோடுஅவர்கள்நிற்க வில்லை. திட்டமிட்டு, தாழ்த்தப் பட்ட சமுதாய மக்கள் பஞ்சமர்என்றபெயராலேபிரித்து வைக்கப்பட்டார்கள். இன்னுங் கேட்டால், அப்படி பிரித்து வைக்கப்பட்டபொழுது, அவர் களுக்கும் கீழே ஒரு பிரிவு என்று சொல்லி, அனைத்து ஜாதியிலும், மேல்ஜாதி உள்பட இருக்கக்கூடிய பெண்களை - அதற்கும் கீழே வைத்தார்கள்.

எனவே, ஜாதீய முறை என்பது -  வருணாசிரம தர் மத்தை எவ்வளவு திட்டமிட்டு உருவாக்கியிருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்,

தலையில் பிறந்தவர் பிராம ணன், தோளில் பிறந்தவர் சத்திரியன், தொடையில் பிறந்த வர் வைசியன், காலில் பிறந்தவர் சூத்திரன் என்றாக்கி,

சூத்திரன் என்பவனுக்கு ஒரு தாய், ஒரு தந்தை கிடை யாது. ‘‘அவனைத் தாசி மக னாக’’முத்திரைக்குத்தி கொச் சைப்படுத்தி, அவனை அடிமை யாக்கி - அதற்கும் கீழே பஞ்சமனை வைத்தார்கள்.

இந்த நான்கு பிரிவுகளை ஒன்றாக்கி, அய்ந்தாவதாக - ஜாதி முறைக்கு அப்பாற்பட்டவர்கள் அவர்ணஸ்தர்கள்என்றுகொச் சைப்படுத்தி, தொடக்கூடாத வர்கள், கிட்டே நெருங்கக் கூடா தவர்கள் என்று - நான்காவது ஜாதிக்காரன் நினைக்கக்கூடிய அளவிற்கு,அவனுடையமனதில் ஒரு அருவெறுப்பு ஏற்படும்படி செய்தார்கள்.

எவ்வளவு அருமையான, ஒரு சூழ்ச்சித் திட்டம் பாருங்கள். அது எந்த அளவிற்கு இருந்தது? கிரேடட் இன் இக்வாலிடி (நிக்ஷீணீபீமீபீ வீஸீமீஹீuணீறீவீtஹ்)  என்ற சொல்லை பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் இதனைப் பல ஆண்டுகளுக்கு முன்பாக அருமையாக விளக் கியிருக்கிறார்கள்.

அய்ந்துபடிக்கட்டுமுறை -அடுக்குமுறை-ஒரு ஏணிப் படிக்கட்டில் இருக்கக் கூடியவர்கள் எப்படி அவர்கள் தெளிவாக - தனக்கு மேலே யார் இருக்கிறார் என்பதைப்பற்றியும், தான் இன்னொருவருக்குக் கீழே இருக்கிறோம் என்ப தைப்பற்றியும் அவர்கள் சிந்திப் பதில்லை.

மாறாக, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சொன் னால், நண்பர்களே! தனக்குக் கீழாக ஒருவர் இருந்தால் போதும் - அதுதான் அவர்களுக்கு மிக முக்கியம்.

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, மேலே இருக் கின்றவனை இவனுடைய தோள் சுமந்து கொண்டிருக்கிறது.

படிக்கட்டு ஜாதி முறையில் இருக்கக்கூடியவன், மேலே பார்ப்பனர்கள் இருக்கிறார்கள் - அதற்கடுத்து சத்திரியர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள் - மூன்றாவதாக - வைசியர்கள் என்று சொல் லக்கூடியவர்கள் இருக்கிறார்கள். நான்காவதாக - சூத்திரர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் இருக்கிறார்கள். அய்ந்தாவதாக பஞ்சமர்கள் இருக்கிறார்கள்.

எனவே, இந்த நான்கு பேரும் தனக்குக் கீழே ஒருவர் இருக்கிறார் என்று சொல்லி அதில் திருப்தி அடைகிறார்கள். அதற்கும் கீழே பெண்கள். இது ஒரு மோசமான நிலை!

இதில் பல்லாயிரக்கணக்கான பிரிவுகள் பின்னாளில் ஏற்படுத் தப்பட்டு இருக்கின்றன. இந்து மதம் என்பதில் வெறும் நான்கு ஜாதிப் பிரிவு - வருணப் பிரிவு மட்டுமல்ல - ஜாதிக்குள்ளே ஜாதி என்றாக்கி, ஒருவன் வீட்டில்இன்னொருவன்சாப் பிடக்கூடாது.ஒருவன்வீட்டில் மற்றொருவன் பெண்ணை எடுக்கக்கூடாது என்றெல்லாம் அவர்கள் ஆக்கி வைத்துக் கொண்டு, இதை ஒரு இரும் புப் பூண் போட்ட ஒரு நல்ல அடிக்கட்டுமானமாக எளிதில் அழிக்க முடியாததாக ஆக் கினார்கள்.

இதில் ஒரு பெரிய ஆபத்து என்னவென்று சொன்னால், தீண்டாமை என்பதிருக்கிறதே - அதனை அடிப்படையாகக் கொண்டு நிலை நிறுத்தப்பட்டது. அந்தத்தீண்டாமையைஒழிக்க வேண்டும் என்று தான் சீர்தி ருத்தவாதிகள் நினைத்தனர். இந்து மதத்தை சீர்திருத்தத்தான் பல பேரும் வந்தார்கள்.

தந்தை பெரியார் அவர் களைப்போல, அம்பேத்கர் அவர்களைப்போல, இந்து மதம் என்பது சீர்திருத்தப்பட முடியாத அளவிற்கு அவ்வளவு பங்கப்பட்ட ஒரு பாழும் மனை - ஆபத்தானது; எனவே, அதனை முற்றிலும் அழித்துவிட்டுத்தான் புதியஒருசமுதாயத்தைஉரு வாக்கவேண்டும்என்று மிகத் தெளிவாக அவர்கள் நினைத்தார்கள்.

ஆனால், மற்றவர் அப்படி யல்ல.தந்தைபெரியார்அவர் கள்சொன்னார்,‘நான்ஒரு சீர்திருத்தக்காரன்அல்ல; நான் ஏதோ கட்டடத்தில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பதை ரிப்பேர் செய்யக் கூடியவன் அல்ல. மாறாக, கட்டடம் இடிந்து விழக்கூடிய அளவில் இருக்கிறது என்று சொன்னால், நீண்ட காலமாக அது நொறுங்கிப் போய் இருக்கிறது என்று சொன்னால், அந்தக்கட்டடத்தைஅடிப் படையிலேயே தகர்த்தெறிந்து விட்டு, புதிய கட்டடத்தை நவீன காற்றோட்டத்தோடு, புதிய சூழ்நிலைகளுக்கு ஏற்ப கட்ட வேண்டும். நான் ஒரு சமூகப் புரட்சியாளனே தவிர, நான் ஒரு சமூக சீர்திருத்தவாதியல்ல’ என்று சீர்திருத்தத்திற்கும், புரட் சிக்கும் உள்ள வேறுபாட்டைச் சொன்னார்கள்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கவேண்டியது, இந்து மதத்தை மாற்றவேண்டும் என்று  பலர்  வந்திருக்கிறார்களே, என்று நீங்கள் நினைக்கலாம். உதாரணமாக, பிரம்ம சமாஜ் என்று ராஜாராம் மோகன்ராய் போன்றவர்கள், அதற்குப் பிறகு தயானந்த சரசுவதி போன்றவர்கள் ஆரிய சமாஜ் என்று சொல்லி வந்தார்கள்.

விவேகானந்தரும் இதே ரகத்தைச் சார்ந்தவர்தான். ஏனென்றால், அவர் மற்ற வர்களை மயக்கும் வகையில் இந்து மதத்திற்குப் புதிய விளக் கத்தைத் தந்து சீர்திருத்த மயக்கத்தை மட்டுமே தந்தவர். அடிப்படையில், ஜாதியை தகர்க்க இந்து மதம் அறவே பயன்படாது என்று அவர் கூறவே இல்லை.

இவர்களுடைய நோக்க மெல்லாம் என்னவென்றால், இந்து மதக் கட்டடம் அடித் தளம் எல்லாம் அப்படியே இருக்கவேண்டும். வருணாசிரம தருமத்தில்மட்டும்லேசாக தொடக்கூடியது, பார்க்கக்கூடி யது,பழகக்கூடியதில்இருக் கின்றவேறுபாடு மட்டும் போக வேண்டும் என்று சொன்னால், அடிக்கட்டுமானத்தை வைத்துவிட்டு, அதாவது வேர் மிக ஆபத்தானது என்று சொல்லும்பொழுது, நீங்கள் என்னதான் மரத்திலுள்ள இலைகளைக் கழித்தாலும்கூட, கத்தரித்தாலும்கூட வேகமாக மறுபடியும் வளரத்தான் செய்யும்.

அந்த வகையில், தீண்டாமை என்பதே அதிலிருந்து வளர்ந் ததுதான். எனவே, இந்தப் பெரிய மனிதர்கள் எல்லாம், காந்தியார் உள்பட ஆரம்பத்தில், இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுள்ள, வருணாசிரம தருமத்தில் நம்பிக் கையுள்ளவர்களாகத்தான் திகழ்ந்தார்கள்.

அதுமட்டுமல்ல, அந்த வருணாசிரம தருமம் நல்லது என்றுசொல்லக்கூடியநிலை யில்இருந்தார்கள்.சங்கராச்சாரியார் போன்ற வர்கள்,வருணாசிரமதரு மத்திற்காகவே தாங்கள் இருக்கிறோம் என்பதை கூச்சநாச்சமின்றி ஒப்புக் கொண்டு, அதனை வலி யுறுத்தினார்கள். அவர்கள் மதவாதிகள்.

ஆனால், அரசியலில் மதத்தைக் கலக்கக்கூடாது என்று சொன்ன காந்தியார் உள்பட இதைச் சொன் னதுதான் ஆச்சரியம்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner