‘உங்களைப் பெற்றவரும் பெண்ணில்லையா?’
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

‘உங்களைப் பெற்றவரும் பெண்ணில்லையா?’

கருஞ்சட்டை

"கே: இந்திய - இலங்கை மீனவர் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகை யில், கூட்டுப் பணிக் குழுவை ஏற் படுத்துவது என்று, இரு நாட்டு வெளி யுறவுத் துறை மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதே! இனி யாவது மீனவர் பிரச்னை முடிவுக்கு வருமா?

ப: இலங்கைப் பகுதியில் ஆழ் கடலில் ட்ராலர்கள் மூலமாக மீன் பிடிப்பது தமிழக மீனவர்களின் வழக் கமாகி விட்டது. இங்கு இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பற்றி ஆயிரம் பேசினாலும், இலங்கைத் தமிழர்களின் மீன் பிடிக்கும் உரிமை யைப் பற்றிக் கவலைப்பட இங்கு யாரும் இல்லை. இந்த அணுகுமுறை யில் மாற்றம் ஏற்பட்டாலொழிய, இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது கடினமான காரியமாகத்தான் தொடரும்
எம்.பாலகிருஷ்ணன், ஆவுடையார்கோவில்
(துக்ளக் 23.11.2016, ப: 23)

“துக்ளக்” கும் சரி, பார்ப்பன வட்டாரங் களும் சரி, ஒரு பிரச்சினையில் ஒட்டு மொத்தமாக ஒரே அணியில் சுருதி பேதம் இல்லாமல் கனைப்பதைப் புரிந்து கொள் ளலாம். சோவாக இருந்தாலும், பாண் டேயாக இருந்தாலும், மாலனாக இருந் தாலும், ‘தினமணி’ வைத்தியநாதய்யராக இருந்தாலும் சரி, ஒரே ராகம் தான். ஒரே கட்டைதான்!

தமிழ், தமிழர், தமிழ்நாடு சம்பந்தப்பட்ட மய்யப்புள்ளியில் அவர்களை அறியா மலேயே ஆக்ரோஷமாகி விடுவார்கள்.

விளம்பரப் பலகைகளில் தமிழுக்கு முன்னுரிமை என்றால் இதனால் எல்லாம் தமிழ் வளர்ந்து விடுமா? ‘இது மொழித் தீவிரவாதம்’ என்பார்கள்.

இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்த்தால் அது குறுகிய வாதம் என்பார்கள். இந்தி படித்தால் வேலை வாய்ப்பு கிட்டும் என்று கோரஸ் பாடுவார்கள்.

ஈழத் தமிழர்கள் பிரச்சினை என்றாலும் அப்படித்தான். பிரபாகரன் போராளிகளுக் குள் சண்டை போட்டு அவர்களை எல் லாம் கொன்று குவித்த ஆசாமி என்பார்கள்.

தமிழக மீனவர்கள் பிரச்சினை என்று பேச ஆரம்பித்தால் இலங்கை மீனவர்கள் பக்கம் நின்று ததாஸ்து பாடுவார்கள்.

கச்சத்தீவு  தமிழ்நாட்டுக்குச் சொந்த மானது. ஏதோ இலங்கைக்குத் தாரை வார்த்தாகி விட்டது, குறைந்த பட்சம் அங்கு மீன்பிடிக்கும் உரிமையாவது தமிழக மீனவர்களுக்கு கிடைக்கக் கூடாதா என்று எழுத அவர்கள் மனம் இறங்கி வரு வதில்லை. ஏன் தமிழர்கள் என்றாலே இரக்கம் காட்டாத மனுதர்ம இட்லர் கும்பல் அது.

அதே நேரத்தில் காஷ்மீரில் பண்டிட்டு கள் பிரச்சினை என்றால் - பஞ்சகச்சத்தை பர்ணசாலையாக்கி, பூணூலை அம்பாக்கி கூர்தீட்டிவிடுவார்கள்.

நம்ம கூறுகெட்ட ஆசாமிகள் தான் அந்தத் துக்ளக்கை வாங்கி கக்கத்தில் வைத்துக் கொண்டு திரிவார்கள்.

இடஒதுக்கீடு என்றால் இடர்கள்

இந்த மூன்றோடு அகில இந்தியப் பார்வையில் கூடுதலான ஒன்று - அவா ளின் அம்பறாத் தூணியில் உள்ளடக்கம். அது தான் இட ஒதுக்கீடு என்பது.

அந்த சொல்லைச் கேட்டவுடனேயே ‘அத்ரி பாச்சா கொழுக்கட்டை’ என்று துள்ளிக் குதிப்பார்கள். இட ஒதுக்கீட்டை ஒழித்துக்கட்ட கொடூரமான எல்லைக்குச் சென்று பொய் மூட்டைகளை அள்ளிக் கொட்டுவார்கள்.

தினமணியில் கடந்த அக்டோபரில் ஒரு தலையங்கம் - மவுனப் போராட்டம் என்பது அதன் தலைப்பு. அதில் அம்பேத்கர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தார் என்றும் இட ஒதுக்கீடு என்பது வெறும் பத்தாண்டு களுக்கு மட்டுமே என்று கால வரையறை செய்யப்பட்டது என்றும் அபாண்டமாகப் புளுகித் தள்ளவில்லையா?

தினமணியின் திரி நூல் அப்படி எழுது கிறது என்றால் துக்ளக் பூணூல் சும்மா இருக்குமா?

“ஜாதிவழி இட ஒதுக்கீடு சம்பந்தமான போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரிய வழக்கில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோது ஜாதி வழி இடஒதுக்கீடு முதல் பத்தாண்டுகளுக்கு மட்டும்தான் என்று தீர்மானிக்கப்பட்டது என்று ‘துக்ளக்’ எழுதுகிறதே
(‘துக்ளக்’, 9.11.2016 பக்கம் 28)

இந்திய அரசமைப்புச் சாசனத்தின் எந்தப் பகுதியிலும் இட ஒதுக்கீட்டிற்கு கால நிர்ணயம் கொடுக்கப்படவே இல்லை.
சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் களில் தாழ்த்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில்தான் பத்தாண் டுகள் என்று கால நிர்ணயம் செய்யப்பட்டு ஒவ்வொரு பத்தாண்டுகளுக்குப் பிறகும் சட்டத்திருத்தம் மூலம் அது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இதைக் கொண்டு வந்து கல்வி, வேலைகளில் இடஒதுக்கீட்டுத் திட்டத்தை போட்டுக் குழப்புகிறார்கள் என்பதை நினைவில் வையுங்கள். தெரியாமலா செய்வார்கள்? தெரியும்; நன்றாகவே தெரியும். எதையாவது சொல்லிக் குட் டையைக் குழப்பி மீன் பிடிக்க வேண்டும் என்பதே அக்ரகார வாசிகளின் வாய் கொண்ட ஆசை. குற்றப்பரம்பரை என்று சும்மாவா சொன்னார்கள் பார்ப்பனர்களை!

பெண்ணென்றால் பெருங்கேடா!

துக்ளக் கேள்வி பதில் பகுதியைப் படிப் பவர்களுக்கு எது புரிந்தாலும் புரியாவிட் டாலும் ஒன்று மட்டும் மிகத் தெளிவாகவே புரியும். பெண்களை கேவலப்படுத்துவது, இழிவுபடுத்துவது, மட்டம் தட்டுவது என்ற மனுதர்மப் புத்தி மண்டையைக் கிழித்துத் தலையைக்காட்டும்.

அமெரிக்கத் தேர்தலில் ஹிலாரி என்ற பெண் வேட்பாளர் போட்டியிடுகிறாரே அதைப்பற்றி துக்ளக் என்னடா எழுதாமல் இருக்கே என்ற ஆச்சரியம் ஒரு பக்கத்தில் நமட்டுச் சிரிப்பு ஏற்பட்டதுண்டு.

தேர்தல் முடிவு வந்தவுடன், அதுதானே துக்ளக்காவது துர்புத்தியிலிருந்து தூரம் போவதாவது.

“இன்னொரு அபிப்ராயமும் சொல் லப்படுகிறது. ட்ரம்புக்கு வாக்களித்த அமெரிக்கர்களோ நம்மவர்களோ அதை ஏற்பார்கள் என்று சொல்லமுடி யாது (குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப் பதை பார்த்தேளா?)

ஏற்கப்படாத காரணத்தால் ஒரு உண்மையை உண்மையல்ல என்று சொல்லி விட முடியுமா? பெரும்பாலும் அமெரிக்கர்களை ஆதிக்கம் செய்வது அவர்கள் மனைவியரே. வீட்டில் தான் பெண்ணின் ஆட்சி - வெள்ளை மாளி கையிலுமா அது - என்று நினைத்த அமெரிக்கர்கள், ஹிலாரிக்கு வாக் களிக்காமல் இருந்திருக்கிறார்கள்” இது தான் துக்ளக்குக்கே உரித்தான, பெண்கள் என்று சொன்னாலே துஷ்டத்தனமாக எழுதும் துரியோதனன் புத்தி.

அமெரிக்க ஆண்கள் எல்லாம் துக்ளக் ஆபீசுக்கு போன்போட்டு இந்தத் தகவலை சொன்னார்களா? இல்லை அமெரிக்கா முழுவதும் துக்ளக் தான் நிருபர்களை அனுப்பி வைத்து, அவர்கள் தகவல்களை துல்லியமாக சேகரித்து துக்ளக்கிற்கு அனுப்பினார்களா? இல்லாவிட்டால் எந்த அமெரிக்க ஏடாவது இந்த விவரத்தை விலாவாரியாக எழுதி இருந்திருக்கிறதா?

தன் ஆசையை (கீவீsலீயீuறீ ஜிலீவீஸீளீவீஸீரீ) அமெரிக்கரின் தலையில் ஏற்றிச் சவாரிச் செய்யும் ஈனப்புத்தி தானே இது? பெண் ணென்றால் அவ்வளவு இளக்காரமா? இவர்கள் எல்லாம் தாய் வயிற்றில் பிறக்காமல், தானே இந்து மத முனி புங்கவர்கள் போல. காங்கேயன் கழு தைக்குப் பிறந்தான். ஜம்புக முனிவர் நரிக்குப் பிறந்தான். கணாதர் கோட் டானுக்குப் பிரசவம் ஆனான். ஜம்பவந்த முனிவன், கரடிக்குப் பிறந்தான் என்பது போல பிறந்தார்களோ!

நம் பெண்ணுரிமை இயக்கங்களுக்கு எல்லாம், இந்தப் பார்ப்பனக் கும்பல்கள், பெண்களை எவ்வளவு கீழிறக்கமாக பரிகசித்து, பன்னாடைத்தனமாக எழுதி னாலும் கோபம் வரவே வராது. எல்லாமே திராவிடர் கழகத்துக்காரன் தலையில்தான் விடிந்திருக்கிறது போலும்!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner