அமித்ஷா -பி.ஜே.பி.யின் ஜாதி அரசியல் பாரீர்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

- ஊசிமிளகாய்

சிறுகதைபோல இது இருக்கும்; படித்து சுவையுங்கள் - ஒரு ஆதாரப்பூர்வமான தகவல்:

உ.பி.யின் பகுஜன் சமாஜ் கட்சியை கான்ஷிராம் உருவாக்கியதிலிருந்தே அவருடன் இணைந்து உழைத் தவர் டாக்டர் சோனாலால் படேல்.

கான்பூர் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்ற இவர் மாயாவதி முதலமைச்சராக இருந்தபோது கட்சியிலிருந்து வெளியேறி தனது ஜாதியான ‘குருமி’ (பிற்படுத்தப்பட்டவர்கள்) (நிதீஷ்குமாரும் இதே ஜாதிதான்) என்ற ஜாதியினருக்காக தனியே ‘அப்னாதள்’ என்ற கட்சியைத் தொடங்கினார்.

‘அப்னாதள்’ கட்சி வெற்றிகரமாக நடந்து வந்தபோது, 2009 இல் ஒரு கார் விபத்தில் சோனாலால் படேல் உயிரிழந்தார். அதன்பின் அவரது மனைவி திருமதி கிருஷ்ணா படேல் அக்கட்சியின் (அப்னாதளின்) தலை வியானார். அக்கட்சியின் பொதுச்செயலாளராக தனது மகள் அனுப்பிரியா படேலை ஆக்கினார்.

சொந்த தாயாருக்கும், மகளுக்குமே அரசியல் போட்டி மும்முரமாகியது!

சோனாலால் - கிருஷ்ணா தம்பதியருக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகளில் அனுப்பிரியா மூன்றாவது மகளாவார். இவர் கெட்டிக்காரர் - அரசியலில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்.

அனுப்பிரியாவுடன் பிறந்த மற்ற இரு சகோதரிகளும் பெங்களூருவில் மென்பொறியாளர்களாகப் பணிபுரிகின் றனர்.

இரண்டாவது சகோதரி இவர்கள் குடும்பத்தால் தொடங்கப்பட்ட பள்ளிகளைக் கவனித்து வருகிறார்.

எம்.ஏ., எம்.பி.ஏ., பட்டம் பெற்ற அனுப்பிரியா படேல் தந்தை இருந்த காலத்திலிருந்தே கட்சியில் இணைந்துள்ளவர். இவருக்கு ஆஷிஷ்குமார் சிங்குடன் திருமணம் நடந்து  பனிரெண்டாம் நாளில் கார் விபத்தில் தன் தந்தையை இழந்தார்.

இல்லத்தரசியாக இருப்பதற்குப் பதில் கட்சியை நடத்தி வந்தார். இவருக்குக் கிடைத்த ஆதரவு அவர்கள் குடும்பத்தில் குழப்பங்களை ஏற்படுத்தியது.

அனுப்பிரியாவுக்கு ஒரு சகோதரர் உண்டு. தனக்குக் கிடைக்கவேண்டியது தன் சகோதரி அனுப்பிரியாவுக்குக் கிடைத்ததை அவர் விரும்பவில்லை. மூன்றாவது சகோதரிக்கும் இந்த அனுப்பிரியா பிரபலமாவது பிடிக்கவில்லை. இந்த இருவரும் சேர்ந்து, தங்களுடைய தாய்க்குத் தூபம் போட்டுத் தூண்டிவிட்டனர்!

‘அப்னாதள்’ கட்சியிலிருந்து அனுப்பிரியாவை வெளியேற்றி விட்டனர். ஆனால், கட்சியிலிருந்து வெளியேற்றும் முன்பே எம்.எல்.ஏ.வாகத் தேர்ந்தெடுக் கப்பட்டவர் அனுப்பிரியா.

2014 ஆம்  ஆண்டு மோடியுடன் சேர்ந்து பா.ஜ.க. கூட்டணிக்காக அனுப்பிரியா பிரச்சாரம் செய்தார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த பா.ஜ.க., ‘அப்னாதள்’ கட்சியைத் தங்களுடன் இணைத்துக் கொள்ள முன் வந்தது. ஆனால், அக்கட்சியின் தலைவரான இவரது தாயார் கிருஷ்ணா படேல் இதற்கு சம்மதிக்கவில்லை.

இதற்கிடையில் 2014 இல் பி.ஜே.பி. அணியுடன் இணைந்து பிரச்சாரம் செய்த அனுப்பிரியா, தனி மரமாக நின்றாலும், பொதுத் தேர்தலில் மிர்சாபூரிலிருந்து எம்.பி.,யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.பி.,யான அனுப்பிரியாவுக்கு அவருடைய அம்மாவின் உறவும், குடும்பத்தாரின் அரவணைப்பும் அறவே இல்லை. வெற்றி பெற்று வந்த நிலையில், மோடி தனக்கு அமைச்சர் பதவி தருவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவரோ தரவில்லை. இதற்குக் காரணம், 2015 இல் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, இவருடைய அம்மா, அனுப்பிரியா  உள்பட 5 பேர்களை கட்சியிலிருந்து ஏற்கெனவே நீக்கி விட்டார்!  எனவே, பதவி அப்போது கைநழுவிப் போய்விட்டது!

அரசியலில் கலங்கிப் போயிருந்த அனுப்பிரியாவுக்கு திடீரென ‘லாட்டரி பிரைஸ்‘ விழுந்தது!

குருமி ஜாதியினர் உ.பி.யில் ஏராளம் உள்ளதால், அவர்களின் வாக்குவங்கியைத் தட்டிப் பறிக்க, அமித்ஷா - திடீரென்று இந்த ஆண்டு ஜூலையில் இவரை குடும்ப நலம் மற்றும் உடல்நலத் துறை அமைச்சராக (இணை அமைச்சர்) நியமனம் செய்ய வைத்தார்!

இவரது பதவி ஏற்புக்குக்கூட இவரது குடும்பத்திலி ருந்து எவரும் வரவில்லை. தொலைக்காட்சியில்கூட அவரது பதவி ஏற்பை அவரது தாயார் பார்க்க விரும்ப வில்லை என்று புறக்கணித்தார்!

35 வயதில் மோடியின் அமைச்சரவையில் இணையமைச்சரான இவரிடம் உ.பி. தேர்த லுக்காக ‘குருமி’ ஜாதி வாக்குகளை வாங்க இப்படி ஒரு வியூகத்தை பா.ஜ.க. தலைவர் அமித் ஷா வகுத்தார்!

இது ஒருபுறம்;  ஜாதிபற்றி கண்டனம் செய்வதுபோல் அண்மையில்கூட பிரதமர் மோடி முழங்குவது மறுபுறம். வேடிக்கையாக இல்லையா?

செல்வி மாயாவதியை ஜாதி அரசியல் செய்கிறார் என்று கூறும் பா.ஜ.க. அனுப்பிரியாக்களை அமைச்சராக்கி ‘குருமி’களை வலை வீசிப் பிடிப்பது என்ன அரசியலோ! அவர்களுக்குத்தான் வெளிச்சம்!

அதேபோலத்தானே சில மாதங்களுக்குமுன் மது ரைக்கு வந்து ‘குருமூர்த்திகளின்’ வியூகப்படி சில தாழ்த்தப்பட்ட சகோதரர்களை - சில ஜாதியினரை இணைத்து, இட ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேச வைத்து, அவர்களை டில்லிக்கே அழைத்துச் சென்று, பிரதமர் மோடியை  ‘தரிசனம்‘ செய்ய வைத்து அழைத்து வந்தனர்.

அதனால்  ‘எண்ணெய் செலவே தவிர,  பிள்ளை பிழைக்கவில்லை’ என்பது கண்கூடு!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner