விஜயபாரதமே, ஓடாதே, நில்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

விஜயபாரதமே, ஓடாதே, நில்!

கருஞ்சட்டை

சென்னை ஆர்.எஸ்.எஸ். அலு வலகத்துக்கு முன் சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தி விட்டார்களாம்.
எதற்காக?

காவிரி நீர்ப் பிரச்சினைக்காக இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.எஸ். வார இதழான 'விஜயபாரதம்' என்ன எழுதுகிறது? "காவிரி நீர்ப் பிரச்சினைக்கும்

ஆர்.எஸ்.எசுக்கும் என்ன சம்பந்தம்? அவலை  நினைத்து உரலை இடிப்பானேன்?" என்று கேள்வி கேட்கிறது.

கருநாடகத்தில் ஆட்சியில் இருப்பது காங்கிரஸ்தானே - நாங்கள் எப்படிப் பொறுப்பு? என்று 'மேதா விவாசத்துடன்' எழுதுவதாக நினைப்பு.

கருநாடக மாநிலத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக வன்முறை வெறியாட்டங்களில் முன்னணிப் படையாக இருப்பது ஆர்.எஸ்.எஸ். பிஜேபி கும்பல்தானே!

முதல் அமைச்சர் சித்தராமையாவைப் பார்த்து 'முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுங்கள் - நாங்கள் உறுதுணையாக இருப்போம்' என்று சொன்னவர் கருநாடக மாநில பிஜேபி தலைவர் அல்லவா!
இது ஒருபுறம்.

உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது அத்தகைய ஆணையத்தை அமைக்க வேண்டும் என்று  உத்தரவிட உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது என்று சொன்னது மத்திய பிஜேபி ஆட்சிதானே.

இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத் திற்குமுன் சில அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்ததில் என்ன குற்றம்?

ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் சில முழக்கங்களைப் போட்டனராம். "தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை - நாங்கள் தமிழர்கள்!" என்பதுதான் அந்த முழக்கம்!

அதற்கு 'விஜயபாரதம்' என்ன பதில் சொல்லி இருக்கிறது தெரியுமா?

"தமிழ்ப் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை கொண்டாடுகிற ஹிந்துக்கள் தானே தமிழர்கள்?" என்று புத்திசாலித்தனமாகக் கேள்வி எழுப்புவதாக நினைப்பு.

ஹிந்து என்று சொல்லும் 'விஜயபாரதத்துக்கு' ஒரு கேள்வி.  "ஹிந்து" என்ற சொல்லே கூட தமிழ் இல்லையே!
ஹிந்து என்ற சொல்லுக்கு என்ன பொருள் தெரியுமா?

லிங்குதேகிஸ்வாரி என்ற பழமையான பார்ஸி அகராதி (1964 லக்னோவில் பார்ஸி பதிப்பகத்தால் மறுமதிப்பு) என்ன கூறுகிறது?

Further more a Persian Dictionary titled Lughet-e Kishwari published in lacknow in 1964, gives the meaning'of the word Hindu as 'Chore (Thief) Dakoo (Decoit) Raathan (Way Layer), and Ghulam (Slave) in another dictionary.

லிங்குதே கிஸ்வாரி என்ற பழமையான பார்ஸி அகராதி நீண்ட இடைவெளிக்குப் பிறகு 1964ஆம் ஆண்டு லக்னோவில் உள்ள பார்ஸி பதிப்பகம் ஒன்றில் மறுபதிப்பானது. அதில் ஹிந்து என்ற சொல்லுக்கு கொடுக்கப்பட்ட விளக்கமானது -

திருடன், வழிப்பறி செய்பவன், பொருள்களை சூழ்ச்சியால் பிடுங்கி ஓடுபவன்; கொள்ளைக்காரன், பிறருக்கு எப்பொழுதும்  தொல்லை கொடுப்பவர்கள்; அடிமைச் சேவகம் புரிபவர்கள் என்று பொருள் கொடுக்கப்பட்டுள்ளதே.

ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் வேண்டுமானால் ஹிந்து என்று தங்களைக் கூறிக் கொண்டு இவற்றையெல்லாம்கூட ஒப்புக் கொள்ளட்டும்!
ஆனால் மானமுள்ள தமிழர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்?

பொங்கல் சரி.. அதைக்கூட சங்கராந்தி என்று சமஸ்கிருத மயமாக்கி, அதிலும் புராணப் புழுதிகளை ஏற்றி வைத்துள்ளீர்களே - அதனை ஏற்றுக் கொள்ள முடியாதே!

தீபாவளி தமிழர்களுடையதா? தீபாவளிக் கதை அறிவுக்கு பொருந்துமா? இதிகாசம், புராணங்களில் சொல்லப்படும் அசுரன், அரக்கன் என்பதெல்லாம் திராவிடர்களைத் தான் என்று இந்து மத அதிகப்பிரசங்கி விவேகானந்தர் சொல்லவில்லையா? வரலாற்று ஆசிரியர் பி.டி. சீனிவாசய்யங்கர் எழுதவில்லையா? ஹிந்து என்று சொல்லிக் கொள்வதில் ஒன்றும் குறைச்சல் இல்லை. பார்ப்பானும் இந்து தாழ்த்தப்பட்டவரும் இந்து - இந்துக் கோயில் கருவறைக்குள் அர்ச்சகராகப் பார்ப்பான் இருக்க முடியும், தாழ்த்தப்பட்டவர் இருக்க முடியுமா? 'விஜயபாரதமே!' ஓடாதே நில் - பதில் கூறு!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner