வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு இலவச எரிவாயு இணைப்பு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

வறுமை கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கு
இலவச எரிவாயு இணைப்பு

புதுடில்லி, டிச.30 வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசித்துவரும் குடும்பங்களுக்கு கடந்த 8 மாதங்களில் மட்டும் 1.5 கோடி இலவச எரிவாயு (எல்பிஜி) இணைப்பு வழங்கப்பட்டுள்ள தாக மத்திய அரசு தெரிவித்தது.

இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட  செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வறுமைக் கோட்டுக்கு கீழ் வசித்துவரும் குடும்பங்களுக்கு 3 ஆண்டுகளில் 5 கோடி இலவச எரிவாயு இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. முதல் ஆண்டில் 1.5 கோடி இலவச எரிவாயு இணைப்புகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.

ஆனால், ஓராண்டாக்கு முன் னதாகவே அதாவது 8 மாதங்களி லேயே அந்த இலக்கை எட்டிவிட் டோம்.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் இந்தத் திட்டம் தற்போது அமல்படுத்தப் பட்டு வருகிறது என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

சமூக -பொருளாதாரக் கணக் கெடுப்பு தகவல் அறிக்கையைக் கொண்டு வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் பெண்கள் அடை யாளம் காணப்படுவார்கள். அதைத் தொடர்ந்து, அவர்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.

இந்தத் திட்டம் கடந்த 2016 - - 2017-ஆம் ஆண்டு பட்ஜெட் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இத்திட்டத்தை செயல் படுத்த மொத்தம் ரூ.8,000 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது..
 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner