ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் பிரதமர் மோடி தன் மீதான குற்றச்சாட்டுக்கான விசாரணையை சந்திக்கத் தயங்குவது ஏன்?: ராகுல்காந்தி கேள்வி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் பிரதமர் மோடி
தன் மீதான குற்றச்சாட்டுக்கான விசாரணையை
சந்திக்கத் தயங்குவது ஏன்?: ராகுல்காந்தி கேள்வி


புதுடில்லி, டிச.28
தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை சந் திக்க பிரதமர் பதவியில் இருந்து மோடி விலகவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மோடி அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக நாடாளுமன்றத்திலும், வெளி யிலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து குரல் கொடுத்து வருகின்றன.

இந்த நிலையில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க் கட்சி தலைவர்கள் டில்லியில் நேற்று (டிச.27இல்) பிரதமர் மோடிக்கு எதிராக அணி திரண்டனர்.

திரிணாமுல் காங்கிரஸ் தலை வரும், மேற்கு வங்காள முதல் அமைச்சருமான மம்தா பானர்ஜி, தி.மு.க. சார்பில் திருச்சி சிவா எம்.பி. மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதா தளம், அகில இந்திய அய்க்கிய ஜனநாயக முன்னணியின் தலை வர்களும் பங்கேற்றனர்.

பின்னர், அவர்கள் செய்தி யாளர்களுக்கு கூட்டாக பேட்டி யும் அளித்தனர். அப்போது ராகுல்காந்தி, பிரதமர் மீது அடுக் கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

அவர் கூறியதாவது:

பண மதிப்பு நீக்க நடவடிக் கையால் உண்மையில் என்ன பலன் கிடைத்தது என்பதை பிரதமர் விளக்கவேண்டும். சகாரா குழும டைரிகளில் பணம் பெற்ற வர்கள் பட்டியலில் பிரதமர் மோடியின் பெயரும் இருந்தது தொடர்பாக எழுப்பப்படும் கேள்விகளுக்கும் அவர் பதில் அளிக்கவேண்டும்.

பிரதமருக்கு எதிரான அழுத் தத்தை தொடர்ந்து எதிர்க்கட்சிகள் கொடுக்கும். ஊழலுக்கு எதிராக தான் எல்லா வகையிலும் போ ராடுவதாக பிரதமர் கூறுகிறார். ஆனால் அவரை பற்றி தனிப் பட்ட முறையில் எழுப்பப்படும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு மட் டும் பதில் அளிக்க மறுக்கிறார். இதில் பிரதமர் மட்டும் விதி விலக்கா, என்ன?

ஷீலா தீட்சித் (டில்லி மாநில முன்னாள் முதல்அமைச்சர்) தன் மீதான குற்றச்சாட்டுகளுக்காக விசாரணையை சந்திக்க தயார் என்று கூறி இருக்கிறார். அப்படி இருக்கும்போது பிரதமர் விசாரணையை சந்திக்க தயங் குவது ஏன்?

(2013ஆம் ஆண்டு சகாரா குழுமம் பா.ஜனதா தலைவர்களுக் கும், ஷீலா தீட்சித்துக்கும் பணம் கொடுத்ததாக கூறப்படும் டை ரியை அண்மையில் காங்கிரஸ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது)

சகாரா நிறுவன டைரியில் மோடியின் பெயர் 9 இடங்களில் காணப்படுகிறது. எனவே தன்னைப் பற்றிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் அளித்தே ஆகவேண்டும்.

இதேபோல் ஆதித்ய பிர்லா நிறுவனத்தின் இமெயில்களிலும் பயன் அடைந்தோர் பட்டியலில் மோடியின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது. குஜராத் முதல் அமைச்சராக இருந்தபோது அவருக்கு ரூ.40 கோடி கொடுக்கப்பட்டதாக அந்த இமெயில்கள் கூறுகின்றன.

எனவே உண்மையிலேயே ஊழலுக்கு எதிராக பிரதமர் போராட விரும்பினால், அவர் இதில் சுதந்திரமாகவும் நேர்மை யாகவும் விசாரணை நடத்த உத்தரவிடவேண்டும். தான் பதவியில் இருந்து மோடி விலகி அந்த விசாரணையை சந்தித்து தன்னை சுத்தமானவர் என்று நிரூபிக்கவேண்டும்.

ஜெயின் சகோதரர்கள் (1990 களில் ஹவாலா வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்) எழுதிய டைரியில் தங்களுடைய பெயரின் இன்ஷியல்கள் வெளியானதற்கே 4 மத்திய அமைச்சர்களும், எல். கே. அத்வானியும் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். ஆனால் தற்போது பிரதமரின் முழுப் பெயரே டைரியில் இடம் பெற்று இருக்கிறது.

எனவே தன் மீதான நம்பகத் தன்மையை நிரூ பிக்க மோடி பிரதமர் பதவியில் இருந்து விலகி விசாரணையை எதிர்கொள்ளவேண்டும் லண்டனில் இருக்கும் விஜய் மல்லையா, லலித் மோடி இருவரையும் இந்தியாவுக்கு கொண்டு வந்து விசாரணைக்கு முன்பாக நிறுத்தவேண்டும். தங்கள் நாட்டின் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் பற்றி சுவிஸ் வங்கிகள் அளித்த பட்டியலை மோடி நாடாளு மன்றத்தில் வெளியிடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி கூறுகையில், பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் நாட்டை பிரதமர் மோடி 20 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு சென்றுவிட்டார். நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இது போன்ற மிகப்பெரிய ஊழலை கண்டதில்லை. இது தொடர்பாக குறைந்தபட்ச திட்டத்தை தயா ரிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன என்றார்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner