இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் வாழும் மாநிலம் கேரளா
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் வாழும் மாநிலம் கேரளா

திருவனந்தபுரம், அக்.24 கேரள மாநிலம் இந்தியாவிலேயே படித்தவர்கள் அதிகம் உள்ள மாநிலம் என்ற சிறப்பை பெற்றது. மேலும் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் கேரளாவும் ஒன்று.

ஆயுர்வேத சிகிச்சைக்கு பிரசித்தி பெற்ற கேரள மாநிலத்தில் ஏராளமான நவீன வசதிகள் கொண்ட பெரிய மருத் துவமனைகளும் உள்ளன. இதனால் வெளி மாநிலத்தில் இருந்து பலர் மருத்துவ சிகிச்சைக்காக கேரளா வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் வசிக்கும் மாநிலம் கேரளா என்பது தெரியவந்துள்ளது.

தற்போது கேரள மக்களின் சராசரி வயது 70 ஆக உள்ளது. 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 71.9 சதவீதம் பேரும் பெண்கள் 68.3 சதவீதம் பேரும் கேரளாவில் வசிக்கிறார்கள். இந்தியாவிலேயே அதிக முதியவர்கள் கேரளாவில் தான் வசிக்கிறார்கள்.
கடந்த 2004-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 70 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் 67.3 சதவீதம் பேரும் பெண்கள் 70.9 சதவீதம் பேரும் வசித்தனர். தற்போது பெண்களின் எண்ணிக்கை குறைந்து உள்ளது.


விஷ்ணுப்பிரியா மரணம்:
தமிழக அரசின் மனு தள்ளுபடி

புதுதில்லி, அக்.24 டிஎஸ்பி  விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம்  தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஅய் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்வதாக இன்று உத்தரவிட்டது.

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை சிபிஅய் விசாரிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், தமிழக அரசு அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது குறிப்பிடத்தக்கது.


காற்று மாசு தலைமுறைகளை தாண்டியும் பாதிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடில்லி, அக்.24 டில்லி போன்ற பெருநகரங் களில் நிலவும் காற்று மாசுபாடு, அங்கு வாழும் மக்களுக்கு தலைமுறைகளைக் கடந்தும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து, தொழில்சார் மற்றும் சுற்றுச்சூழல் சுகாதார மய்யத்தின் இயக்குநர் டி.கே.ஜோஷி கூறியதாவது: அமெரிக் காவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் சுகாதார அறிவியலுக்கான தேசிய நிறுவனம் சமீபத்தில் இது தொடர்பாக ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதன் முடிவுகள் அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன.

இதன்படி, காற்று மாசுபாடு அதிகம் இருக்கும் நகரத்தில் வாழும் ஒரு பெண் கருவுற்றிருக்கும் போது, அங்குள்ள காற்று மாசு அந்தக் கருவை பாதிக்கும் பட்சத்தில் அந்தக் கருவின் ஜீன்களில் மாற்றம் நிகழ்கிறது. இந்த ஜீன் மாற்றங்கள் அந்தக் கருவோடு நிற்பதில்லை. அதன் சந்ததியில் வரும் குழந்தை களுக்கும், அதைத் தொடர்ந்து, அவர்களின் குழந்தைகளுக்கும் என தலைமுறையைத் தாண்டியும் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இதைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டால், ஆஸ்துமா, புற்றுநோய், பக்கவாதம் போன்ற குணப்படுத்த முடியாத பல நோய்கள் அந்த சந்ததியினரிடையே அதிகரிக்கும். இதனிடையே, உள்புற காற்று மாசும், அதாவது வீட்டுக்குள் ஏற்படும் காற்று மாசுவின் பாதிப்பு குறித்தும் உறுதியாகக் கண்டறிய வேண்டிய அவசியம் உள்ளது என்றார் ஜோஷி.

டில்லி அய்.அய்.டி. பேராசிரியர் முகேஷ் காரே கூறுகையில், "நகரங்களில் இருக்கும் வீட்டுக்குள் நிலவும் காற்று மாசு குறித்து மிகத் துல்லியமாக இதுவரை ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. பெரும்பாலான பெண்கள் வீட்டுக்குள்ளேயே பணிபுரிந்து வருகின்றனர். இதனால், வீட்டுக்குள் நிலவும் காற்று மாசு குறித்து அறிய வேண்டியதன் அவசியத்தை சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உணர்த்தியுள்ளன' என்றார்.

அய்.நா. தொடர்பான அமைப்பு கடந்த 2008--2013 இடையேயான காலகட்டத்தில் நடத்திய ஆய்வின்படி, உலகில் அதிக காற்று மாசு உள்ள நகரங்கள் பட்டியலில் டில்லி 11-ஆவது இடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட பட்டியலில், இந்திய நகரங்களில் குவாலியர் (2-ஆவது இடம்), அலாகாபாத் (3), பாட்னா (6), ராய்பூர் (7) உள்ளிட்டவை முதல் 7 இடங்களுக்குள் வந்துள்ளன.


அக்.27-க்குப் பின்னர் வட கிழக்குப் பருவமழை

சென்னை, அக்.24 தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை அக்டோபர் 27-க்குப் பின்னர், தொடங்க வாய்ப் புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரி வித்துள்ளது. வட  கிழக்குப் பருவ மழை வழக்க மாக, அக்டோபர்  மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி, டிசம்பர் இறுதி வாரத்தில் நிறைவு பெறும். சில ஆண்டுகளில் ஜனவரி வரையிலும் மழை தொடரும்.

இந்தாண்டு இதுவரை வடகிழக்கு திசையில் காற்று வீசாததால், பருவ மழைக்கு சாதகமான சூழல் இன்னும் அமையவில்லை.

தற்போது வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரப் புயலாக மாற வாய்ப்புள்ளது. இந்த புயல் மியான்மாவை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால் தமிழகம் மழை பெற வாய்ப்பில்லை.

ஆனால், புயல் வலுவிழந்த பின்னர், எஞ்சியுள்ள சில இடங்களில் தென்மேற்குப் பருவமழை பின்வாங்கிய பிறகு, தமிழகத்தில் காற்றின் ஈரப்பதம், காற்று வீசும் திசை ஆகியவை மாறும். அதன் பிறகே வடகிழக்குப் பருவமழை தொடங்கும்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner