பி.ஜே.பி.யின் ஏபிவிபி அமைப்பால் தாக்கப்பட்ட மாணவன் எங்கே? படுகொலையா? பல்கலைக் கழகம் முன் 20 மணி நேரம் முற்றுகைப் போராட்டம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


புதுடில்லி, அக்.21 டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் நஜீப் அகமத் காணாமற்போனது குறித்து நட வடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர்.

இவர் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உயிர் தொழில்நுட்பவியல் பையோடெக்னாலஜி எம்.எஸ்சி பட்டம் படித்துவருகிறார். இடதுசாரி மாணவர் அமைப்பாகிய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த நஜீப் அகமத் விடுதியில் இருந்தபோது, ஆர்.எஸ்.எஸ். பாஜகவின் இந்துத்துவா மாணவர் அமைப்பான ஏபிவிபியினர் மாணவர் நஜீப்பை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அத்தாக்குதலையடுத்து, நஜீப் கடந்த 15.10.2016 அன்று முதல் காணவில்லை.

காணாமற்போயுள்ள மாணவர் நஜீப் அகமத்தைக் கண்டுடிப்பதற்கான நடவடிக்கையை எடுக்குமாறு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ஜெகதீஷ் குமார் அலுவலகத்தை 20 மணி நேரத்துக்கும் மேலாக முற்றுகையிட்டார்கள்.

உள்துறை இணையமைச்சர் கிரென் ரிஜ்ஜூ கூறும்போது, “அலுவலர்களை கைதியாக்குவது சரியானதல்ல. மாணவர் கள் படிக்க வராமல் அரசியல் செய்கிறார்கள் என்பதையே இது காட்டுகிறது’’ என்றார்.

இரவு முழுவதும் நடைபெற்ற தொடர்ச்சியான முற்றுகை யைத் தொடர்ந்து, துணைவேந்தர் மாணவர்களிடம் நுழை வாயிலைத் திறந்துவிடுமாறும், பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொள்வதாகவும் டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.

துணைவேந்தர்மாணவர்களிடையேஇரண்டுசுற்று கள் பேச்சுவார்த்தை நடத்தியபோதும், தீர்வை எட்ட முடியவில்லை. மாணவர்கள் தொடர் முழக்கமாக, “நாங் கள் எல்லோருமே நஜீப்தான்’’ என்று  முழக்கமிட்டபடி இருந்தார்கள்.

துணைவேந்தர் பல்கலைக்கழகத்தின் அலுவலகக் கட்டடத்துக்குள் அடைந்து கிடக்க, வெளியே மாணவர்கள் முற்றுகையிட்டபடி இருந்தார்கள். முற்றுகையிட்ட மாண வர்களில் சிலர் அசந்துதூங்கியும் போனார்கள். அந்த அளவில் இரவுமுழுவதும் மாணவர் நஜீப்பைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கையை எடுத்திட வேண்டும் என்று மாணவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

‘‘மாணவரை கண்டு பிடிக்க முயற்சி எதுவுமே செய்யவில்லை என்று மாணவர்கள் இடைவிடாமல் சொல்லி வருகிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. அலுவலர்களை சாப்பிடக்கூட அனுமதிக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தும் மாணவர்கள் நடந்துகொள்கிறார்கள்’’ என்று பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜே.என்.யூ. மாணவர்கள் சங்கத் தலைவர் மொகித் சர்மா கூறும்போது, “சட்டவிரோதமான செயல்கள் எதையும் நாங்கள் செய்யவில்லை. மின்சாரம் மற்றும் அனைத்தும் உள்ளன. பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் உள்ளவர்களுக்கு உணவுகூட நாங்கள் வழங்கி வருகிறோம்’’ என்றார்.

பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் போராட்டத்தால் கடந்த மூன்று நாள்களாக வகுப்புகள் நடக்கவில்லை. இந்த ஆண்டில் கன்னய்யாகுமார்மீது போடப்பட்ட தேசவிரோத வழக்கின்போது ஏற்பட்ட மோதல் போக்கு நிலையைப்போன்றே தற்போதும் நடந்துவருகிறது.

விடுதிக்கு அருகில் 18.10.2016 அன்று நடைபெற்ற மாணவர் போராட்டத்தின்போது பெற்றோர்களும் மாணவர்களுடன் கலந்துகொண்டார்கள்.

14.10.2016 அன்று இரவு  நஜீப் அகமதுவிடமிருந்து வந்த பதற்றமான தொலைபேசி அழைப்பை அடுத்து உத்தரப்பிரதேசம் பதானிலிருந்து அவருடைய பெற்றோர் டில்லிக்கு விரைந்தார்கள்.

தகவல் தெரிவிப்போருக்கு
ரூ.50 ஆயிரம்

காவல்துறை அறிவிப்பு

இதனிடையே மாணவர் நஜீப் அகமத் காணவில்லை என்றுபெற்றோர்அளித்தபுகாரின்பேரில்வசந்த்குஞ்ச் காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டப் பிரிவு 365இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையின் சார்பில் டில்லி ஜவகர்லால் நேரு பல் கலைக்கழக வளாகப்பகுதியைச் சுற்றி பல இடங்களிலும் மாணவர் நஜீப் படத்தைப்போட்டு காணவில்லை என்று சுரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன.

மேலும், நஜீப் அகமத் குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசளிக்கப்படும் என்றும் சுவரொட்டி மூலம் அறிவித்துள்ளனர்.
ஏபிவிபியினரின் வன்முறைத்தாக்குதலை அடுத்து மாணவர் நஜீப் காணாமற்போனதையடுத்து,  மாணவர் நஜீப் அகமதை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை கோரி, மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அறிக்கை கேட்கிறார்
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்

மாணவர் காணாமற்போன பிரச்சினை குறித்த அறிக் கையை  அளிக்குமாறு காவல்துறையினருக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உத்தரவிட்டுள்ளார்.

டில்லி காவல்துறை ஆணையர் அலோக் குமார் சிங் வெர்மாவிடம் விரிவான அறிக்கையை அளிக்குமாறு உள் துறை அமைச்சகம் கோரியுள்ளது.

உள்துறை அமைச்சகத்தின் சார்பில் தொடர்பாளர் எஸ்.துவாலியா கூறும்போது, “உள்துறை அமைச்சர் டில்லி மாநகர காவல்துறை ஆணையரிடம் மாணவர் காணா மற்போன பிரச்சினைகுறித்து பேசினார். மேலும், விரிவான அறிக்கையை அளிக்குமாறும் கோரினார்’’ என்றார்.

14.10.2016 அன்று இரவு முதல் மாணவர் நஜீப் அகமத் காணாமல் போயுள்ளார். உறுதியான நடவடிக்கை எடுத்து சரியான பதிலை அளிக்குமாறு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர் நஜீப்குறித்து உரிய பதிலை அளிக்கக்கோரி பல்கலைக்கழகத்தின் முன்பாக 19.10.2016 அன்று மாணவர்கள் திரண்டு முற்றுகைப்போராட்டத்தை நடத்தினார்கள்.

14ஆம் தேதி அன்று காணாமற்போன மாணவர் நஜீப் அகமத்திடம் விடுதியில் மெஸ் குழுவுக்கான தேர்தலுக்காக ஏபிவிபியினர் ஆதரவு கோரியபோது நஜீப்புக்கும், ஏபிவி பியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தொடர்ந்து ஏபிவிபியினர் கும்பலாகத்திரண்டு மாணவர் நஜீப் அக மதைத் தாக்கியபோது, தடுத்த காப்பாளர், மாணவர் தலைவர் உள்ளிட்ட பலரையும் தாக்கியது அக்கும்பல். ஏபிவிபியினரின் தாக்குதலைத் தொடர்ந்தே மாணவர் நஜீப் அகமத் காணாமற்போயுள்ளார். அவர் படுகொலையா என்ற பதற்றம் ஏற்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விரிவான அறிக்கை கேட்டுள்ளபோதிலும், மாணவர்கள்மீதான தாக்குதல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் ஏபிவிபியினர்மீது காவல் துறை யினர் நடவடிக்கை ஏதும் எடுப்பதாகவே தெரியவில்லை.

மத்தியில் பாஜகவின் அரசு அமைந்த பிறகு ஏபிவிபியினரின் காட்டாட்சி கல்வி நிறுவனங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. மதசார்பற்ற, இடது சாரி, சிறுபான்மை மாணவர்கள் உள்ளிட்ட ஏபிவிபி இந்துத்துவா அமைப்பை எதிர்க்கின்ற மாணவர்கள்மீதான ஒடுக்குமுறைகள் பாஜக ஆட்சி அமைந்த பிறகு தொடர்ந்து கொண்டு இருக்கிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner