காவிரி நதி அணைகளில் ஆய்வு உயர்மட்ட குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் தமிழகத்துக்கு 160 டிஎம்சி தண்ணீர் தேவை
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

காவிரி நதி அணைகளில் ஆய்வு
உயர்மட்ட குழு அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல்
தமிழகத்துக்கு 160 டிஎம்சி தண்ணீர் தேவை

புதுடில்லி, அக்.18 காவிரி நதி அணைகளில் ஆய்வு செய்த  உயர்மட்ட தொழில்நுட்ப குழுவின் அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல்  செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. காவிரி மேலாண்மை வாரி யத்தை அமைக்க 2 நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்ட செப்டம்பர் 30ஆம் தேதி உத்தரவை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைப்பதாக அறிவித்தது.

மேலும், உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைத்து, தமிழகம் மற்றும் கர்நாடகாவில் உள்ள அணைகளையும், டெல்டா பாசனப் பகுதிகளையும் ஆய்வு செய்து வரும் 17ஆம் தேதி நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதன்படி, மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் ஜி.எஸ்.ஷா தலைமையில் உயர்மட்ட தொழில்நுட்ப நிபுணர் குழு நியமிக்கப்பட்டது.

குழுவின் உறுப்பினர்களாக மத்திய நீர் ஆணையக் குழுவின் உறுப்பினர் மசூத் உசேன், கிருஷ்ணா கோதாவரி பாசன அமைப்பு தலைமை பொறியாளர் ஆர்.கே.குப்தா, தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச் சேரி மாநிலங்களின் பிரதிநிதிகள் நியமிக்கப்பட்டனர்.

நிபுணர் குழு ஆய்வு

இந்த நிபுணர் குழு அக்டோபர் 7, 8 தேதிகளில், கர்நாடக அணைகள், காவிரி நீர் பிடிப்பு பகுதிகள், தமிழகத் தில் மேட்டூர், பவானி அணைகள், டெல்டா பாசன பகுதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்தது. இதையடுத்து, உயர் மட்ட தாழில்நுட்ப நிபுணர் குழு நேற்று தங்களின் ஆய்வு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அறிக்கை விவரம்

உயர் மட்ட தொழில்நுட்பக் குழு தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 12 லட்சம் ஏக்கர் நிலம் காவிரி நீரை நம்பி உள்ளது. இந்த 12 ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்வதற்கு சராசரியாக 133 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. குடிநீர் தேவைக்காக 22 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது.

மொத்தத்தில் 2016 அக்டோபர் 1 முதல் 2007 மே வரை தமிழகத்திற்கு 160 டிஎம்சி தேவைப்படு கிறது.  கர்நாடகத்திற்கு அக்டோபர் 1 முதல் 2017 மே வரை 36.38 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. பெங்களூர் நகர குடிநீர் தேவைக்காக 23.10 டிஎம்சி தேவைப்படுகிறது. மொத்தத்தில் அக் டோபர் முதல் 2017 மே வரை கர்நா டகத்தின் தண்ணீர் தேவை 59.48 டிஎம்சி ஆகும். தண்ணீர் பற்றாக்குறை காரண மாக தமிழகம் மற்றும் கர்நாடக மாநி லங்களில் விவசாயம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

கடும் வறட்சி காரணமாக இரு மாநி லங்களிலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை உரிய நேரத்தில் பெய்திருந்தால் 143.18 டிஎம்சி தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் பிரச்னை காரண மாக இந்த ஆண்டு டெல்டா விவசாயிகள் ஒரு பருவ சம்பா சாகுபடியை மட்டுமே செய்துள்ளனர்.

ஏழை விவசாயிகள் குறுவை சாகுபடியை செய்ய முடியாததால் கடுமையான இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். நிலத்தடி நீர் முற்றி லும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. டெல்டா மாவட்டத்தில் விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். தாங்கள் விவசாயத்திற்காக வாங்கிய வங்கிக் கடன்களை திரும்பச் செலுத்த முடியா மல் விவசாயிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக விவசாய நிலங்களில் மூன்றில் 2 பங்கு நிலத்தில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. ஆனால், இந்த ஆண்டு மூன்றில் 1 பங்கு விவசாய நிலங்களில் மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நிலத்தடி நீர் 250 அடியை தாண்டி விட்டது.

மேட்டூர் அணை மட்டுமே டெல்டா விவசாயிகளின் ஒரே குடிநீர் ஆதாரமாகும். குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய புதிய தொழில்நுட்பங்கள் தேவைப்படுகிறது. மாற்றுப்பயிர் முறை செயல்படுத்தப்படவேண்டும். விவசாயிகளுக்கு சரிசமமான வகையில் நீரை பகிர்ந்து கொடுக்க வேண்டும். இதற்கு நீர் மேலாண்மை மிகவும் அவ சியம்.  இவ்வாறு அறிக்கையில் கூறப் பட்டுள்ளது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner