அய்க்கிய ஜனதாதள தலைவராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அய்க்கிய ஜனதாதள தலைவராக
நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

பாட்னா, அக்.17 அய்க்கிய ஜனதாதள கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் பீகார் மாநிலத்தில் உள்ள ராஜ்கிர் என்ற இடத்தில் தொடங்கியது. இதில் 23 மாநிலங்களில் இருந்து வந்த கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு உள்ளனர்.

முதல் நாள் கூட்டத்தில், அய்க்கிய ஜனதாதள கட்சியின் தலைவராக பீகார் முதல் அமைச்சர் நிதிஷ்குமார் 2ஆவது முறையாக தேர்ந்து எடுக்கப்பட்டார். மேலும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மாற்றாக ஒருமித்த கருத்து கொண்ட கட்சிகளை சேர்த்து வலிமையான புதிய அணியை உருவாக்கும் அதிகாரம் நிதிஷ்குமாருக்கு வழங்கப்பட்டது.

இந்த தகவலை அய்க்கிய ஜனதாதள கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.தியாகி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner