தசரா விழாவில் திராவிட இனத்தலைவர்களை அவமதிப்பதா? இராவணன் உருவப் படத்துடன் பேரணி
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

பலே தெலங்கானா தோழர்கள்!

தசரா விழாவில் திராவிட இனத்தலைவர்களை அவமதிப்பதா?
இராவணன் உருவப் படத்துடன் பேரணி

 


பேலிம்பள்ளி, அக்.11 தசரா விழாக்களின் பெயரால் கற்பனையான புராணங்களில் உள்ள கற்பனைக் கதைகளின்படி, திராவிட இனத்தவர்களை அழிப்பதாகக் குறிப்பிட்டு இராவணன் போன்ற அசுர குலத் தலைவர்களின் உருவங்களை வைத்து அம்பெய்தி தீவைத்துக் கொளுத்துகின்ற செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது என்றும் உடனடியாக இதுபோன்ற விழாக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி தெலங்கானா மாநிலத்தில் பல்வேறு அமைப்பினர் ஞாயிறன்று (9.10.2016) பேரணியாக சென்றுள்ளனர்.


பேரணியில் இராவணன் உருவப் படத்தை அலங்கரித்து முழக்கமிட்டபடிச் எடுத்துச் சென்றார்கள்.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சிறுபான் மையோர் பிரதிநிதிகள் பங்கேற்ற கண்டனப் பேரணி தெலங்கானா மாநிலம் பேலிம்பள்ளியில் நடைபெற்றது.

தசரா விழா என்பதன் பெயரால் புராணங்களில் குறிப்பிடப்படுகின்ற இராவணன் போன்ற அசுர, திராவிட இனத்தலைவர்களின் உருவத்தை தீவைத்துக் கொளுத்துகின்ற செயல் தாழ்த்தப் பட்டவர்கள் மற்றும் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருந்து வருகிறது.

அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில், நாட்டுப் பாதுகாப்பு மற்றும் அமைதிக்கான சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் வகையில் இதுபோன்ற விழாக்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இவ்வாறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணியாக தெலங்கானா நாத்திக சமாஜம் ஜி.டி.சாரய்யா, அறிவியல்சார் மாணவர் பேரவையைச் சேர்ந்த ஆந்திரா - தெலங்கானா ஒருங்கிணைப்பாளர் பிரசாந்த் ஆகியோர் ஏற் பாட்டின்பேரில் பல்வேறு ஒடுக்கப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஏராளமானவர்கள் ஒன்றிணைந்து ஊர்வலமாக இராவணன் உருவப் படத்துடன் சென்றார்கள்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner