79 செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்பட்டுள்ளன இஸ்ரோ தலைவர் தகவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

79 செயற்கைக்கோள்கள்
விண்ணில் ஏவப்பட்டுள்ளன  
இஸ்ரோ தலைவர் தகவல்

சிறீஹரிகோட்டா, செப்.28 இதுவரை 21 வெளிநாடுகளைச் சேர்ந்த 79 செயற்கைக்கோள்களை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது என இஸ்ரோ தலைவர் கிரண்குமார் கூறினார்.

பி.எஸ்.எல்.வி. சி 35 ராக்கெட் வெற்றியைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வெளிநாட்டு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்து வதால், இஸ்ரோ வருவாய் ஈட்டத் தொடங்கியிருக்கிறது. இதுவரை வணிக ரீதியில் 21 நாடுகளைச் சேர்ந்த 79 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியிருக்கிறது. இதனால், 2015-ஆம் ஆண்டில் ரூ.1,717 கோடி வருவாயையும், நிகழாண்டில் ரூ. 1,790 கோடி வருவாயையும் இஸ்ரோ ஈட்டியிருக்கிறது.

செயற்கைக்கோள்களை ஏவுவது தொடர்பாக, அல்ஜீரியா உள்ளிட்ட சில நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஆண்டுக்கு இரண்டு ஜி.எஸ்.எல்.வி. மாக்- 2 ராக்கெட்டுகளைச் செலுத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த 8- இல் ஒரு ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது. அடுத்த 6 மாதங்களில் மற்றொரு ஜி.எல்.எல்.வி. ஏவப்படும்.

ஒரு வாரத்துக்குப் பிறகே தகவல்: விண்ணில் திட்டமிட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஸ்கேட்சாட்-1 செயற்கைக்கோளின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. அதில் இடம்பெற்றிருக்கும் கே.யு.பேண்ட் செயல்பாட்டுக்கு வர ஒரு வார காலமாகும்.

அடுத்தது என்ன? அடுத்ததாக தகவல்தொடர்புக்கான ஜிசாட்-18 செயற்கைக்கோளானது அமெரிக்காவில் உள்ள ஃபிரெஞ்ச் கயானா விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அக்டோபர் 4-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளது. கடந்த ஜூலை 4-இல் அனுப்பத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாகத் தாமதமாக அனுப்பப்படுகிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner