நாளை முதல் 30 ஆம் தேதி வரை, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு 10 நாட்கள் தண்ணீர் தரவேண்டும்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

நாளை முதல் 30 ஆம் தேதி வரை, வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தமிழகத்துக்கு 10 நாட்கள் தண்ணீர் தரவேண்டும்

கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேற்பார்வைக் குழு உத்தரவுபுதுடில்லி, செப்.20 சம்பா சாகுபடிக்காக காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அந்தமனுவைவிசாரித்தஉச்சநீதி மன்றம் கடந்த 5 ஆம் தேதி, தமிழ் நாட்டுக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது. மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக இரு மாநி லங்களும் காவிரி மேற்பார்வை குழுவை அணுகலாம் என்றும் கூறியது.
இதற்கிடையே உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக கர்நாடகத்தில் கல வரம் வெடித்தது. பெங்களூரு நகரில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. தமிழக வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன.

இந்த நிலையில் காவிரி மேற்பார்வை குழு அதன் தலைவர் சஷி சேகர் தலை மையில் டில்லியில் நேற்று (19.9.2016) மீண்டும் கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ், பொதுப்பணித்துறை முதன்மைசெயலாளர்எஸ்.கே.பிரபாகர், காவிரி தொழில் நுட்ப குழு துணைத் தலைவர் ராம்குமார் ஆகியோரும், கர்நாடக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் அரவிந்த் ஜாதவ், நீர்பாசனத்துறை செயலாளர் ராகேஷ் சிங் ஆகியோரும் கலந்துகொண்டனர். புதுச்சேரி மாநில தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதாவும் மற்றும் கேரளா அரசின் அதிகாரிகளும், மத்திய நீர் ஆணையம், மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கு கொண்டனர்.

காலை 11.30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணிவரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழக, கர்நாடக அரசுகள் தாக்கல் செய்த புள்ளிவிவர அறிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

கூட்டம் முடிந்த பின் மேற்பார்வை குழுவின் தலைவர் சஷி சேகர் செய்தி யாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் தாக்கல் செய்த புள்ளிவிவரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கர்நாடக தலைமைச் செயலாளர் அந்த மாநிலத்தின் அடிப்படை நிலவரங்கள் மற்றும் குடிநீர் பிரச்சினை ஆகியவற்றை சுட்டிக்காட்டி காவிரியில் தமிழகத்துக்கு மேலும் கூடுதலாக தண்ணீர் திறந்து விட முடியாது என்று மிகவும் பிடிவாதமாக கூறினார்.

மற்றொரு புறம் தமிழக அரசின் தலைமைச் செயலாளர், காவிரி நடுவர் மன்றம் கூறிய தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்துக்கு வழங்கவேண்டிய தண் ணீரை உடனடியாக திறந்து விட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதனால் இரு தரப்பிலும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

எனவே காவிரி மேற்பார்வை குழு வின் தலைவர் என்ற முறையில், கர் நாடகம் 21 ஆம் தேதி (நாளை) முதல் 30 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறேன். (இந்த அளவில் தண்ணீர் திறந்து விட்டால் தமிழகத்துக்கு 2.59 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்கும்.)

சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைக்கட்டுகளின் நீர்வரத்து,மழையளவுமற்றும்அந்த மாநிலத்தின் குடிநீர் தேவை ஆகிய வற்றைகருத்தில்கொண்டும்தமிழ் நாட்டில்சம்பா சாகுபடிக்கு தேவை யான தண்ணீரின் அளவை கருத்தில் கொண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள் ளது.

இந்த உத்தரவில் உடன்பாடு இல் லாத மாநிலங்கள், காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) உச்சநீதிமன்றத்தில் விசார ணைக்கு வரும் போது அங்கு சென்று முறையிடலாம்.

மேற்பார்வை குழுவின் அடுத்த கூட்டம் வருகிற அக்டோபர் மாதம் நடைபெறும். அடுத்த ஆண்டு (2017) பிப்ரவரி மாதம் முதல் ஒவ்வொரு மாத மும் மேற்பார்வை குழுவின் கூட்டம் நடைபெறும்.

செயற்கைகோள் மூலம் கணக்கிட ஏற்பாடு

காவிரி நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் பெய்யும் மழையின் அளவு, அணைகளில் உள்ள நீர் இருப்பு, பயன்படுத்தப்பட்ட தண்ணீரின் அளவு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இனி செயற்கைகோள் மூலம் விஞ்ஞானபூர்வமாக கணக்கிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படும். இதற்கான செலவை அந்தந்த மாநிலங்கள் ஏற்க வேண்டி இருக்கும்.

இவ்வாறு காவிரி மேற்பார்வை குழுவின் தலைவர் சஷி சேகர் கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner