விநாயக பக்தர்களே சிந்திப்பீர்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


விநாயகனைத் தூக்கிச் சென்ற பக்தர்கள் விபரீதமாக ஏரியில் மூழ்கிச் சாவு!ராஜ்கோட் செப். 16 பிள்ளையார் சிலை கரைப்பின் இறுதி நாளான செப் 14- இல் குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில் உள்ள ரங்கபார் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பிள்ளையார் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று அங்குள்ள பெரிய ஏரியில் கரைக்கச் சென்றனர். அப்போது நீரில் உள்ள குப்பைகள் காலில் சிக்கியதால் அய்ந்து பேர் பலியானார்கள்.

ராஜ்கோட் மாவட்டத்திலுள்ள  ரங்கபார் கிராமத்தைச் சேர்ந்த இரு பதுக்கும் மேற்பட்டோர் பெரிய பிள் ளையார் சிலை ஒன்றை கரைக்க ஏரியில் இறங்கினர். ஏரியில் ஆழமில்லாத பகுதியாக இருப்பினும் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து சிலைகளைக் கரைத்ததால் ஏரிக்கு அடியில் கரைக் கப்பட்ட சிலைகளின் கழிவுகள், பூக்கள், செயற்கை நார்மாலைகள் மற்றும் பூசைப் பொருட்கள் என பெரும்பலான குப்பைகள் நீருக்கு அடியில் தேங்கிக் கிடந்தன. சிலைகள் கரைக்கும் பணியில் ஈடுபட்ட சிலரது கால்களில் இந்த குப் பைகள் சிக்கிக்கொண்டன.

கூட்டத்தில் வந்தவர்கள் இந்த விப ரீதத்தை அறியாமல் கூட்டத்தில் ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு சென்றதால், தடுமாறி விழுந்து அவர்கள் நீரில் முழ்கினர். அதன் பிறகு வந்த கூட்டம் அவர்களை நீருக்குள் இருந்தபடியே மிதித்துக்கொண்டு சென்றதால் அய்ந்துபேர் தண்ணீரில் மூழ்கிப் பலியானார்கள்.  

இந்த நிலையில் உடன் வந்தவர்கள், சிலர் நீரில் மூழ்கியவர்களைக் கண்டு அவர்களை தூக்க முயற்சிக்கும் போது, அவர்களின் கால்களும் குப்பையில் சிக்கியது. விபரீதத்தை உணர்ந்த பொது மக்கள் அவர்களை சிரமப்பட்டு வெளியே இழுத்தனர். இதில் 7 பேருக்குக் காயம் ஏற்பட்டது.

உடனடியாக பொதுமக்கள் ஒன்று கூடி நீரில் மூழ்கிய அனைவரையும் காப்பாற்றி ராஜ்கோட் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் நீரில் மூழ்கியதன் காரணமாக மூச்சுத்திணறி அய்வர்  பலியானதாக மருத்துவர்கள் கூறினர். மற்ற 7 பேருக்கு சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது.

உள்ளூர்க்காரர் ஒருவர் இதுபற்றி கூறும்போது, தொடர்ந்து பிள்ளையார் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன. அப்படி கரைக்கப்படும் சிலைகளின் அலங்காரத்திற்குப் பயன்படும் பூசைப் பொருட்கள், பிளாஸ்டிக் மாலைகள் என அனைத்தும் நனைந்து தண்ணீருக்கடியில் மூழ்கிக் கிடந்தன. இதில் கால் வைத் ததும் கால்களை பிணைத்துக் கொண்டது காலில் சிக்கிய குப்பைகளை பிரிக்க தண்ணீருக்குள்மூழ்கியவர்களைபின் னல் வந்தவர்கள் தள்ளிவிட்டு சென்ற தால் அவர்களால் மீண்டும் வெளியே வர இயலாமல் மூச்சுத்திணறி பலியா னார்கள்.    மாவட்ட நிர்வாகம் அதிக மான கூட்டம் வந்த போதும் போதுமான பாதுகாப்பு வழிமுறைகளை செய்யத் தவறியாத்தாலும் இந்த நிலை ஏற்பட்டது என்று அவர் கூறினார்.
விக்னம் இல்லாமல் காப்பாற்று வதால் பிள்ளையாருக்கு விக்னேஸ்வரர் என்று பெயராம். ஆனால், விக்னேஸ் வரரைத் தூக்கிச் சுமந்து வந்த பக்தர்களே பலியானார்களே, இதற்குப் பிறகும் விநாயகர்,விக்னேஸ்வரர்என்பது எல்லாம் சுத்தப் புரூடா என்று தெரிய வில்லையா!.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner