உச்சநீதிமன்ற ஆணையின்படி தமிழகத்திற்குத் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


கருநாடக முதல்வர் சித்தராமையா பேட்டி


பெங்களூரு,செப். 14 -கருநாடக மாநில அமைச்சரவையின் அவசரக் கூட்டம், செவ்வாயன்று நடைபெற்றது. இக்கூட் டத்திற்குப் பின், சித்தராமையா செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது அவர் மேலும் கூறிய தாவது:

காவிரி விவகாரத்தில், தொடக்கத்தில் இருந்தே நீதிமன்றத்தின் தீர்ப்பை கரு நாடக அரசு முறையாக கடைப்பிடித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து தண்ணீர் வழங்கிக் கொண்டு இருக்கிறது.காவிரி விஷயத்தில் கருநாடகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தாலும், உச்சநீதிமன்றத்தின்ஆணையை செயல் படுத்தும் வகையில், காவிரியில் தமிழ கத்திற்கு 12 ஆயிரம் கன அடி விகிதம் தொடர்ந்து தண்ணீர் திறந்து விடுவது என்று கருநாடக அமைச்சரவைக் கூட்டம் முடிவெடுத்து இருக்கிறது. 15 டி.எம்.சி.அளவிற்கு தண்ணீர் திறந்து விட உத்தரவிட்டால் அதையும் நடைமுறைப் படுத்தத்தான் வேண்டும்.உச்சநீதிமன்றத் தீர்ப்பு இடைக்காலத் தீர்ப்புதான்.

எனவே, தீர்ப்பின் சாதக - பாதகங்களை மேல்முறையீட்டில் எடுத்துரைப்போம். நீதித்துறைமீதுகருநாடகஅரசுமுழு நம்பிக்கை வைத்துள்ளது. கருநாடக தரப்பு வாதங்களை காவிரி கண் காணிப்புக்குழு கூட்டத்தில் உரிய வகையில் எடுத்துரைப்போம். காவிரி விவகாரம் குறித்து விவாதிக்கபிரதமர் நரேந்திரமோடியை நேரில் சந்தித்துப் பேசுவதற்கு நேரம் கேட்கப் பட்டுள்ளது. காவிரிப் பிரச்சினையில் அமைதியான தீர்வு ஏற்படுவதற்கு, பிரதமர் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அப்போது வலியுறுத்தப்பட உள்ளது.

எனவே, கருநாடக மக்கள் காவிரி விவகாரத்தில் அமைதி காக்க வேண்டும். உயிரிழப்புகளைஏற்படுத்தும்செயல் களில் ஈடுபடக்கூடாது. பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவிக்கக் கூடாது. இந்த விவகாரத்தில் சட்டத்தை மதிக்காமல் மீறுபவர்களை இரும்புக் கரம்கொண்டுஒடுக்குவோம்.பிறமாநிலங்களிலிருந்துவருவோ ருக்கும், இங்கேயே இருக்கும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கும் பாதுகாப்புஅளிக்கப்படும்.தமிழ கத்தில் உள்ள கன்னட மக்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஜெயலலிதாவும் எனக்கு பதில் எழுதியுள்ளார். இரு மாநிலங்களுக்கு இடையேயும் நல்லுறவு நிலவ வேண்டும்.
இவ்வாறு சித்தராமையா கூறி யுள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner