கன்னட அமைப்பினர் என்ற போர்வையில் கலவரம் செய்யும் பாஜக
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

முகமூடி கிழிந்தது
கன்னட அமைப்பினர் என்ற போர்வையில்
கலவரம் செய்யும் பாஜக

பெங்களூரு, செப்.14 காவிரி யில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டதை கண்டித்து கருநாடகாவில் தொடர் கலவரங்கள் நடந்து வருகின்றன. தமிழர்களைத் தாக்குவது,தமிழர்கள்உடை மைகளை தாக்குவது என சட் டத்தை காலில் போட்டு மிதித்து வருகின்றனர் கன்னடர்கள்.

ஒட்டு மொத்த ஊடகத்தின் கவனமும்கருநாடகத்தில்நடை பெற்று வரும் கலவரங்களி லேயே உள்ளது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் (12.9.2016) பிரபல தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் இந்த விவகாரம் குறித்து விவாத நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்த விவாத நிகழ்ச்சியில் கருநாடகாவில் உள்ள கலவர சாட்சியாக தமிழ் பெண்மணி ஒருவர் தொலைப்பேசியில் பேசினார். அப்போது அவர் இன்றைக்கு நடக்கும் இந்த ஒட்டுமொத்த கலவரத்திற்கும் பாஜகதான் காரணம் என ஆவேசமாக பேசினார். இத னால் அரங்கில் இருந்த பாஜ கவை சேர்ந்த நாராயணன் ஆவேசமடைந்தார்.

தொடர்ந்துபேசியபெயர் சொல்லாத அந்த கருநாடக தமிழ் பெண், கருநாடகத்தில் நடைபெற்று வரும் இந்த கல வரத்திற்குக் காரணம் பாஜகதான் எனமீண்டும்மீண்டும்பதிவு செய்தார்.எடியூரப்பா,ஷெட்டர், முன்னாள்முதல்வரும் தற்போதைய மத்திய அமைச் சருமான சதானந்த கவுடா ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்து விடக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.

கடந்த முறை பாஜக ஆட் சியில்இருந்தபொழுதுஉச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில், ஷெட்டர் தண்ணீர் திறந்து விட்டார். தற்போது மட்டும் அவர்கள் எதிர்ப்பு தெரிவிப் பது ஏன்? என்றார். இங்கு கலவரத்தை நடத்துவது கன் னட அமைப்பினர் என கூறப்படுகிறது. ஆனால், கன் னட அமைப்பினர் என்ற போர்வையில்இருக்கும்பாஜ கவினர்தான் இந்தக் கலவரத்தை நடத்துகின்றனர் என அவர் குற்றம் சாட்டினார்.

இங்கு நாங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு இருக்கிறோம்; கேவலமாகப் பேசுகிறார்கள். தமிழ் பத்திரி கையாளர்கள் வெளியில் தலை கட்ட முடியவில்லை. தமிழ் அய்.ஏ.எஸ்-.களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகள் இந்தக் கலவரத்தில் நன்றாக குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என அந்தப் பெண் தெரிவித்தார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner