அருணாசல பிரதேச ஆளுநர் நீக்கம்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

அருணாசல பிரதேச ஆளுநர்  நீக்கம்

புதுடில்லி, செப்.13 அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இடைநீக்கம் செய்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தால் கண்டனத்திற்கு ஆளான ஆளுநர் ஜோதி பிரசாத் ராஜ்கோவா, உடல்நலக்குறைவு காரண மாக நீண்டகால விடுப்பில் இருந் தார்.

இதனால், அவரை பதவி விலகும் படி மத்திய அரசு கூறியதாகவும், பதவிவிலக மறுத்தால் அவரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவரை அணுகலாம் என்றும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் அருணாச்சல பிரதேச அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், ஆளுநர் ராஜ்கோவா, பதவி விலக முடியாது என்று திட்டவட்டமாகக் கூறினார்.

குடியரசுத் தலைவர் தன்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். அத்துடன், தனது பதவி குறித்து குடியரசுத் தலைவருக்கு கடிதமும் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்தை அவர் உள் துறைக்கு அனுப்பி வைத்தார். பின்னர் உள்துறை அமைச்சகம் குடியரசு தலைவருக்கு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், அருணாசல பிரதேச ஆளுநர் பொறுப்பில் இருந்து ராஜ்கோவாவை குடியரசுத் தலைவர் நேற்று நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார். நிரந்தர ஆளுநர் நியமிக்கும்வரை, மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் அருணாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவித்துள்ளார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner