ஜே.என்.யு. தேர்தலில் காவிக் கூடாரம் காலியானது
எழுத்துரு அளவு Larger Font Smaller Font


டில்லி, செப். 11 டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் நடைபெற்று அதன் முடிவுகள் நேற்று (10.9.2016) இரவு அறிவிக்கப்பட்டன.

இந்தத் தேர்தலில் அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப் பின் ஆதரவுடன் போட்டியிட்ட இடதுசாரி மாணவர் அமைப்பின் கூட்டணி பல் கலைக்கழக மாணவர் அணியின் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது. காவி அமைப்பு இந்த தேர்தலில் ஒரு இடத்தைக் கூட பிடிக்க இயலாமல் முற்றிலும் சுருண்டது.   

இந்தியாவில் நாடாளு மன்றத் தேர்தல் மாநிலத் தேர்தல்களை அடுத்து மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்குவது இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமான ஜவகர் லால் நேரு
பல்கலைக்கழகத்தின் ஜே.என்.யு. மாணவர் சங்கத் தேர்தல்.


காவிகளின் வெறித்தனம்

நீண்ட காலமாக மாணவர் தேர்தலில் வென்றுவிடவேண் டும் என்ற ஒரு வெறி ஏபிவிபி மாணவர்களிடையே இருந்து வந்தது. இதனால் தங்களது தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் மூலம் பல்வேறு விதங்களில் மதரீதியாக மாணவர்களைப் பிரித்து தேர்தலில் வெல்ல முயற்சி செய்துவந்தனர். இதனால் தொடர்ந்து சில இடங்களில் வென் றும் வந்தனர்.
2014-ஆம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட் சிக்கு  வந்த பிறகு ஏபி விபி அமைப்பு  ஜே.என். யு.வில் குழப்பத்தை ஏற்படுத்த முயற் சித்தது, இதன் காரண மாக ஜே.என்.யு. மாண வர் சங்கத் தலைவர் கன்னையாகுமார் தேசத் துரோக முழக்கங்களை எழுப்புவது போல் போலியான காணொலி ஒன்றை  இந்தி செய்தி தொலைக்காட்சி  ஒளி பரப்பியது.


இதனை ஆதாரமாக வைத்து கன்னையா குமார் மற்றும் அவரது நண்பர்கள்மீது தேசத் துரோக வழக்கு உட்பட பல்வேறு பொய் வழக்குகள் என தொடர்ந்து போடப்பட்டு வந்தது. மேலும் ஜே.என்.யு-வில் இடது சாரி மாணவர்கள் தலைமையில் மாட்டிறைச்சி சாப்பிட்டார்கள், மாணவர்கள் தீயபழக்கங்களை மேற் கொண் டுள்ளனர் என்று பாஜக சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஊட கங்களில் பொய்யான தக வலைப் பரப்பிவிட்டனர்.

இந்த விவகாரம் கடந்த ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது, ஜே.என்.யு. -மாணவர் சங்கத்தின் மீது இவ் வாறு பழிசுமத்துவதன் மூலம் பல்கலைக்கழகத்தில் காவி ஆட்சியைக் கொண்டு வரலாம் என்று எண் ணினர். இதற்கு அப் போதைய மனிதவளத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியும் உடந்தையாக இருந்தார். பல்கலைக்கழகத்தில் தேசப்பற்று குறைந்து வருவதாக கூறி இந்தி யாவிலேயே மிகவும் உயரமான கொடிக் கம்பம் ஒன்றை நிறுவி தினசரி அங்கு கொடி யேற்றும் நடைமுறையைக் கொண்டு வந்தார்.

அம்பேத்கர் - -பெரியார் மாணவர் அமைப்பு ஆதரவு

இந்த நிலையில் கடந்த வாரம் ஜே.என்.யு. மாணவர் சங்கத்திற் கான தேர்தல் நடை பெற்றது, இந்த தேர் தலில் அகில இந்திய மாணவர் சங்கம், இடதுசாரி மாணவர் அமைப்பு, புரட்சிகர மாணவர் அமைப்பு, பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் மாணவர் குடியரசு அமைப்பு போன்றவைகளின் ஆதரவுடன் பல்கலைக்கழக மாணவர் சங்கம் தேர்தலை சந்தித்தது. இந்த அமைப்பிற்கு சமீபத்தில் உதயமான அம்பேத்கர் - பெரியார் மாணவர் அமைப்பு ஆதரவுக்கரம் நீட்டியிருந்தது.   

அதே நேரத்தில் காவிகளின் அமைப்பான ஏபிவிபி அதிகார பலத்துடன் சில வலதுசாரி சிந் தனை கொண்ட மாணவர் அமைப் புகளை கூட்டு சேர்த்து தேர் தலில் களமிறங்கியது. இந்த அமைப்பு நாங்கள் வெற்றி பெற்றால் முதலில் ஜே.என்.யு-விலிருந்து இடதுசாரி அமைப் புகளை களைந்து விட்டு பல்கலைக்கழகத்தை கங்கை தண்ணீர் கொண்டு புனிதப் படுத்திவிட்டு எங்களின் பணி களை புதிதாக துவங்குவோம் என்று பகிரங்கமாக கூறியிருந் தது. ஆனால் நேற்று இரவு வெளியான தேர்தல் முடிவுகள் வேறுவிதமாக இருந்தது.

மாணவர் சங்கத்திற்கான தலைவர், துணைத்தலைவர், செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் பதவிகள் அனைத் தையும் இடது சாரி மாணவர் அமைப்பு கைப்பற்றியது, கடந்த தேர்தலில் செயலாளர் மற்றும் பொதுச்செயலாளர் பதவியை காவி அமைப்பான ஏபிவிபி கைப்பற்றி இருந்தது.

முழுமையான வெற்றி

நேற்று (10.9.2016) இரவு வெளியான முடிவுகள் மூலம் பல்வேறு துறைகளின் கவுன் சிலர்கள், பொறுப்பாளர்களாக முழுமையாக இடதுசாரி அணியைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றனர். ஏபிவிபி. எங்குமே வெற்றி பெறமுடிய வில்லை. தேர்தல் முடிவுகளின் படி

1) மொஹித் - தலைவர் AISA, , 1954 வாக்குகள் 2) அமல்- உதவி தலைவர் SFI, , 2454 வாக்குகள்  3) சத்ரூபா- பொதுச் செயலாளர் SFI, , 2424 வாக்குகள் 4) தப்ரேஷ்- இணை செயலாளர் AISA 1670 வாக்குகள் என தேர்ந்தெடுக் கப்பட்டு உள்ளனர்.  காவி அமைப்புகளின்  தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த ஜே.என்.யு. மாணவர் சமூகமும் நடத்திய எழுச்சிகரமானப் போராட் டத்திற்கு உந்துசக்தியாக திகழ்ந்த கன்னையா குமார், செஹ்லா ரசீத், ராம் நாகா, உமர் காலித், அனிர்பன் போன்ற பலரும் இந்த வெற்றிக்குப் பின்னால் நின்றுள்ளனர். 

காவி அமைப்புகள் மொத்த வாக்குகளில் வெறும் 12 விழுக்காடு மட்டுமே பெற்றுள் ளது. இதன் மூலம் பல்கலைக் கழகத்தில் மாணவர்களின்  ஆத ரவை முற்றிலும் இழந்துவிட் டது. இந்த தேர்தலில் பல்வேறு பிரிவுகளுக்கான செயலாளர் மற்றும் மாணவர் மன்ற உறுப் பினர் குழுவிற்கான இடத்தை யும் ஏபிவிபி இழந்தது. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு மாண வர் மன்ற உறுப்பினர் குழுவில் கூட இடம் பிடிக்காமல் காவி அமைப்புகள் துடைத்தெறியப் பட்டுள்ளது. ஏபிவிபி மாண வர்கள் பெரிய அளவில் இருக் கும் சமஸ்கிருத மன்ற உறுப் பினர் பதவிகூட ஏபிவிபியினருக்கு கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

சமஸ்கிருதமும்
துணைக்கு வரவில்லை

இந்த நிலையில் சமஸ்கிருத மன்ற உறுப்பினர் தேர்தலில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஏபிவிபி மாணவர் தலைவர் லலித் பாண்டே கூறும் போது சமஸ்கிருத மன்ற தேர்தலில் சிறு குழப்பம் ஏற்பட்டுள்ளது இது குறித்து நாங்கள் தேர்தல் கண்காணிப்பு அலுவலரிடம் புகார் கொடுத்துள்ளோம் இருப் பினும் அங்கு எங்களுக்கு ஆதர வான ஒரு அமைப்பு வெற்றி பெற்றுள்ளது, இதை எங்கள் வெற்றியாகவே கருதவேண்டும் என்று கூறினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner