ஏழைகளின் நலன்களுக்காக மத்திய அரசு செயல்பட வேண்டும் : ராகுல் வலியுறுத்தல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

ஏழைகளின் நலன்களுக்காக மத்திய அரசு செயல்பட வேண்டும் : ராகுல் வலியுறுத்தல்


கோரக்பூர், செப்.8
நாட்டின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்துவைக்கும் விவசாயிகளுக் காகவும், ஏழைகளுக்காகவும் மத்திய அரசு இயங்க வேண்டும் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தினார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதை யொட்டி, தேர்தலுக்குத் தயா ராகும் வகையில் பிரசாரப் பணிகளை காங்கிரஸ் கட்சி இப்போதே தொடங்கிவிட்டது.

இந்நிலையில், விவசாயிகள் பிரச்னையை முன்னெ டுக்கும் விதமாக, "விவசாயிகள் மகா யாத்திரை'' என்ற பெயரில் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

அதன்படி, கோரக்பூர் நகரில் அவர் புதன்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொண் டார். அப்போது, செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது: மத்தியில் பாஜக அரசு பொறுப் பேற்ற பிறகு, தொழிலதிபர்கள், பெரு முதலாளிகள் ஆகியோர் வாங்கியிருந்த கடன் தொகை யான ரூ.1.10 லட்சம் கோடியைத் தள்ளுபடி செய்தது.

தொழிலதிபர்களின் பிரச் சினையைப் பற்றி சிந்திக்கும் பிரதமர் மோடி, விவசாயிகள் படும்பாடு குறித்து சிந்திக்க மறந்துவிட்டார். பெரு முத லாளிகளின் கடன்களைத் தள் ளுபடி செய்ய விரும்பினால் செய்துகொள்ளுங்கள். அதற்கு நாங்கள் எதிராக இருக்க வில்லை. ஆனால், பெரு முத லாளிகளுக்கான அரசாக மத்திய அரசு செயல்படக் கூடாது என்பதுதான் நாங்கள் விடுக்கும் ஒரே கோரிக்கை.

ஏழைகளின் நலன்களுக்காக மத்திய அரசு செயல்பட வேண் டும். தொழிலதிபர்களின் கடன் களைத் தள்ளுபடி செய்யும் நீங்கள் (பிரதமர் மோடி), ஏன் விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்யக் கூடாது? என்றார் ராகுல் காந்தி..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner