தொடக்க கல்வியில் இந்தியா 50 ஆண்டுகள் பின்தங்கும் யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் தகவல்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தொடக்க கல்வியில் இந்தியா
50 ஆண்டுகள் பின்தங்கும்
யுனெஸ்கோ ஆய்வறிக்கையில் தகவல்

புதுடில்லி, செப்.6 யுனெஸ்கோ அமைப்பின் உல களாவிய கல்வி கண் காணிப்பு பிரிவின் புதிய ஆய்வறிக்கை அண்மையில் தாக் கல் செய்யப்பட்டது.

அதில் தெற்காசிய நாடுகள் உலக அள விலான தொடக்க கல்வி மேம்பாட்டில் 2051-ஆம் ஆண்டிலும், பள்ளிக் கல்வியில் 2062ஆ-ம் ஆண்டுக்குள்ளும், மேல்நிலைக் கல்வி யில் 2087ஆ-ம் ஆண்டிலும்தான் தங்களின் இலக்கை அடையும். இந்த இலக்குகள் அனைத்துமே 2030-க்குள் அடையப்படவேண்டும் என்று கெடு நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை தற்போதைய சூழலில் இந்த இலக்கு முறையே 2050, 2060 மற்றும் 2085-ஆம் ஆண்டுகளில்தான் உலகளாவிய சமநிலையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னேறிய நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகள் தொடக்க பள்ளிக் கல்வித் தர வளர்ச்சி இலக்கை அடைவதில் சுமார் 50 ஆண்டுகள் வரை பின்தங்கியே காணப்படும்.

எனவே நிலைக்கத்தக்க கல்வி வளர்ச்சியை 2030-க்குள் பெறவேண்டும் என்றால் தெற்காசிய நாடுகள் கல்வியை கற்றுத் தருவதில் பல்வேறு அடிப்படை மாற்றங்களைச் செய்யவேண்டும் எனவும், தவிர இதில் காணப்படும் சமச்சீரற்ற நிலையை அகற்ற மிகுந்த அக்கறையுடன் செயல் படவேண்டும் என்றும் யுனெஸ்கோவின் அந்த ஆய்வறிக்கை வற்புறுத்துகிறது.

அதேநேரம் பருவநிலை மாற்றம் குறித்த கல்வி இந்தியாவின் 30 கோடி மாணவர் களுக்கு கற்றுத் தரப்படுவதை யுனெஸ்கோ பாராட்டி இருக்கிறது..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner